For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா இருந்தா யாருக்கெல்லாம் நெஞ்சு வலி வரும் தெரியுமா?

கொரோனாவின் இரண்டாம் அலை நோய்த்தொற்றில் அறிகுறிகளின் முறை மாறிவிட்டது எனலாம். கொரோனாவின் இரண்டாம் அலை அறிகுறிகள் மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு அறிகுறி தான் மார்பு வலி.

|

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸின் ஆபத்தான விகாரங்கள் தொடர்பான அறிகுறிகளின் பட்டியல் நீண்டு கொண்டே வருதாக தெரிகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை நோய்த்தொற்றில் அறிகுறிகளின் முறை மாறிவிட்டது எனலாம். ஏனெனில் இது கோவிட் நோயாளிகளை ஆரம்பத்திலேயே மிகவும் நோய்வாய்ப்படுத்துகிறது. அதோடு கொரோனாவின் இரண்டாம் அலை அறிகுறிகள் மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் தோன்றுகிறது.

Is Chest Pain Concerning When You Have COVID-19?

அப்படிப்பட்ட ஒரு அறிகுறி தான் மார்பு வலி. இது கோவிட்-19 இன் பட்டியலிடப்பட்டுள்ள அறிகுறிகளுள் இருக்காது. ஆனால் உடலில் நோய்த்தொற்று தீவிரமான நிலையில், இம்மாதிரியான அறிகுறி தோன்றலாம். தற்போது லேசான கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளிடையே மார்பு வலி காணப்படுகிறது. கொரோனா தொற்று ஆரம்பத்தில் ஒரு சுவாச நோய்க்கான அறிகுறியை கொண்டிருப்பதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஒருவருக்கு மார்பு வலி பல காரணிகளால் எழலாம்.

MOST READ: இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 ஏன் மார்பு வலியை ஏற்படுத்துகிறது?

கோவிட்-19 ஏன் மார்பு வலியை ஏற்படுத்துகிறது?

மார்பு வலி அல்லது மார்பு பகுதியில் ஒருவித அசௌகரியத்தை அனுபவிப்பது, ஒரு முழுமையான கோவிட் அறிகுறியாக இருக்காது. ஆனால் பெரும்பாலும் இது தற்போதைய அறிகுறிகளின் விளைவாகவே ஏற்படுகிறது. ஒருவர் அனுபவிக்கக்கூடிய வலியின் தீவிரம் மற்றும் வகையைப் பொறுத்து, அது மிகவும் கூர்மையானதாகவும், வேதனையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கக்கூடும். அதோடு கொரோனா வைரஸால் ஏற்படும் மார்பு வலி மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளின் விளைவாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் இது ஒருபோதும் தனியாக ஏற்படாது.

உங்களுக்கு கொரோனா பரிசோதனையின் பாசிட்டிவ் என்று வந்தால், அதன் பின் சந்திக்கும் மார்பு வலியை சாதாரணமாக எடுக்காமல், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கடுமையான இருமல்

கடுமையான இருமல்

கொரோனா வைரஸ் வழக்குகளில் வறட்டு இருமல் ஒரு பொதுவான அறிகுறிகும். கோவிட் இருமல் ஒருவரை மிகவும் வித்தியாசமாக பாதிக்கும். காலம் மற்றும் தீவிரம் தவிர, கடுமையான இருமல் கூட மார்பு வலியை ஏற்படுத்தும். கடுமையான இருமல் சுவாசத்திற்கு இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல் விலா எலும்புகள் மற்றும் மார்பு துவாரங்களுக்கு அருகில் உள்ள தசைகளில் கிழிசலை ஏற்படுத்தும். இதனால் கடுமையான அசௌகரியம் ஏற்படும்.

கோவிட் நிமோனியா

கோவிட் நிமோனியா

கோவிட் நிமோனியா என்பது ஒரு தீவிரமான கோவிட் சிக்கலாகும் மற்றும் இந்த சிக்கல் உடனடி கவனத்தைக் கோருகிறது. பொதுவாக நிமோனியா என்பது நுரையீரலுக்குள் இருக்கும் காற்றுப்பைகளில் ஏற்படும் அழற்சியால் ஏற்படும் சிக்கலாகும். இந்த சிக்கலானது காற்றுப்பைக்குள் திரவத்தை உருவாக்க வழிவகுக்கும். அதன் பின் மார்பு வலியையையும் ஏற்படுத்தும். அதிலும் கோவிட் நிமோனியா இரவு நேரத்தில் மிகவும் தீவிரடையக்கூடும்.

வீக்கமடைந்த நுரையீரல்

வீக்கமடைந்த நுரையீரல்

இரண்டாவது அலை நோய்த்தொற்றின் போது நுரையீரல் நோய்த்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதில் 30% க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏதேனும் ஒரு வகையான தொற்று அல்லது குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன. லேசான வீக்கம் கூட மார்பு துவாரங்களில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கோவிட் சோதனையின் போது நுரையீரல் ஈடுபாட்டின் அளவை தீர்மானிக்க மார்பு எக்ஸ்-ரே அல்லது சி.டி-ஸ்கேன் அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே இதய பிரச்சனை

ஏற்கனவே இதய பிரச்சனை

ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கரோனரி தமனி நோய் அபாயத்தில் இருப்பவர்கள், நெஞ்சு வலியை சந்திப்பது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பொதுவாக மார்பு வலி இதய பிரச்சனைகளின் அறிகுறியாக குறிப்பிடப்படுகிறது. அதிலும் உடலில் வைரஸ் வேகமாக பரவுவது மயால்ஜியா மற்றும் மயோர்கார்டிடிஸ் மற்றும் பிற இதய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

கோவிட்-19 இரத்தத்தின் மூலம் உடலுக்குள் பரவுகிறது

கோவிட்-19 இரத்தத்தின் மூலம் உடலுக்குள் பரவுகிறது

உடலில் SARS-COV-2 வைரஸின் மோசமான தாக்கத்தைப் பற்றி தற்போது நம்மில் பலருக்கும் தெரியும். கோவிட்-19 தொடர்ந்து இரத்த ஓட்டத்தில் பரவும் போது, உடலில் உள்ள இரத்த உறைவு உடைந்து நுரையீரலுக்கு பரவும் போது, அது ஆழ்ந்த வலியை ஏற்படுத்துகிறது மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், இது நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Chest Pain Concerning When You Have COVID-19?

Is chest pain concerning when you have COVID-19? Read on to know more...
Desktop Bottom Promotion