Just In
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- 2 hrs ago
திருமணத்துக்கு முன் அனைவருக்கும் வரும் இந்த பிரச்சனையை எப்படி ஈஸியாக கையாளனும் தெரியுமா?
- 3 hrs ago
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி உங்கள் காதின் வடிவம் உங்களை பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?
- 4 hrs ago
ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி தெரியுமா?
Don't Miss
- Sports
போட்டியே நடக்காது.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
- News
சசிகலா குறித்து பேசுவதில் பயம் இல்லை.. சோனியா காலில் விழுந்து கிடந்தவர்கள் திமுகவினர்.. வைகைசெல்வன்
- Automobiles
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா? பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்!
- Movies
குழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா!
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...
நாளுக்கு நாள் மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இப்படி மாரடைப்பு வழக்குகள் அதிகரிப்பதற்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மட்டுமின்றி, மோசமான உணவுகளும் முக்கிய காரணம் ஆகும். பரபரப்பான வாழ்க்கை முறையினால், உடலுக்கு நேரடியாக நன்மை விளைக்கும் நல்ல உணகளை சாப்பிட முடியாமல் இருக்கிறோம். இதன் விளைவாக சிறு பிரச்சனைகள் பெரிதாகி பின்னர் தீவிரமான நோய்களை உண்டாக்குகின்றன.
குறிப்பாக தற்போதைய கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் விற்கப்படுவதால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்புக்களை ஏற்படுத்தி, நாளடைவில் மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றன. முக்கியமாக தற்போது இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இதைத் தவிர்க்க ஒரே வழி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும்.
MOST READ: ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
இக்கட்டுரையில் இதயத்தில் உள்ள அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

ஓட்ஸ்
சமீப காலமாக ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவாக மக்களிடையே பிரபலமாகியுள்ளது. அதோடு ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்போரின் முதல் தேர்வாகவும் ஓட்ஸ் விளங்குகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உவுகிறது. பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் தான் தமனிகளில் கொழுப்புக்கள் படிவதற்கு முக்கிய காரணம். ஆகவே இதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. அதுவும் இதை காலை உணவாக உண்பது மிகவும் நல்லது. ஓட்ஸ் கொண்டு பல்வேறு சுவையான ரெசிபிக்களைத் தயாரிக்கலாம். முக்கியமாக ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதால் எடையை இழக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

பூண்டு
இதயத்திற்கு நன்மையளிக்கும் மிகவும் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. இந்த சக்தி வாய்ந்த உணவுப் பொருள் பல்வேறு ஆரோக்கிய நிலைகளை சரிசெய்ய உதவுகிறது. அதில் இது கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது நூற்றுக்கணக்கான நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேண்டுமானால் காலையில் பூண்டு டீ குடிக்கலாம். தேசிய இருதய ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், தினமும் பூண்டு சாப்பிடுவதால், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பின் அபாயம் குறைந்து, மாரடைப்பிற்கான அபாயமும் குறைவது தெரிய வந்தது.

கிவி
கிவி பல்வேல் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பழம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும். அதோடு, இது இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புக்களின் தேக்கத்தை எதிர்த்து, மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற நினைத்தால், கிவி பழத்தை சாப்பிடலாம். மேலும் கிவி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புக்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும்.

நட்ஸ்
முந்திரி, பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா மற்றும் வேர்கடலை போன்ற நட்ஸ்கள் இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புக்களின் தேக்கத்தை நீக்க உதவும். தினமும் ஒரு கையளவு மிக்ஸ்ட் நட்ஸ் சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவி, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். கூடுதலாக, இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல தீவிரமான நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

மாதுளை
மாதுளையில் சக்தி வாய்ந்த பைட்டோகெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது தமனிகளின் லேயரில் எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கும். தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கும். இது தமனிகள் திறந்த நிலையில் இருக்க உதவி புரியும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் ஒரு நற்பதமான மாதுளையை சாப்பிடலாம் அல்லது ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.

முடிவு
நீங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் மற்றும் மாரடைப்பு எப்போதுமே உங்களுக்கு வரக்கூடாது என்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கட்டாயம் அடிக்கடி சாப்பிட வேண்டும். இவை இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயான தமனிகளின் சுவர்களில் படியும் கொழுப்புக்களை நீக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.