For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Heart Day 2022: மாரடைப்பு வந்து தப்பித்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஒருவருக்கு மாரடைப்பு ஒருமுறை வந்துவிட்டால், அவர் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதல்களின் உதவியுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதற்கு முன் மாரடைப்பு வந்த ஒருவர் முதலில் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

|

World Heart Day 2022: தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் இதய நோய் ஒருவருக்கு எளிதில் வந்துவிடுகிறது. அதில் மாரடைப்பு தான் பலருக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு வந்து, அதிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் அவர்கள் உண்ணும் உணவில் செய்யக்கூடிய மாற்றமானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாரடைப்பிற்குப் பிறகு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான மக்கள் வலுவான மற்றும் துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Foods to Avoid After a Heart Attack

இதய ஆரோக்கிய உணவு என்பது உடலை நல்ல நிலையில் வைத்திருக்கவும், எதிர்காலத்தில் மாரடைப்பைத் தடுக்கவும் உதவும்.பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் சோடியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஒருவருக்கு மாரடைப்பு ஒருமுறை வந்துவிட்டால், அவர் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதல்களின் உதவியுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதற்கு முன் மாரடைப்பு வந்த ஒருவர் முதலில் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீழே அந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: கர்ப்ப காலத்தில் சிரசாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு அசர வைத்த அனுஷ்கா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

மாரடைப்பிற்கு பிறகு இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், எதிர்காலத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தின் அபாயம் குறைக்கப்படும். சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உயர் கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கும் மற்றும் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தை அதிகரிக்கும். எனவே எண்ணெயில் பொரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

ஹாட் டாக்ஸ், சாசேஜ் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

ஹாட் டாக்ஸ், சாசேஜ் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான ஹாட் டாக், சாசேஜ் மற்றும் பிற இறைச்சி போன்றவற்றில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், மாரடைப்பிற்கான அபாயத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் என்பது ஆபத்தானது. ஏனெனில் பொதுவாக இதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்காவிட்டால், அது இயல்பை விட அதிகரிமாக இருக்கிறது என்பது தெரியாமல் போகும். எனவே இந்த வகை உணவுகளை மாரடைப்பிற்கு பின் அறவே தவிர்ப்பதே நல்லது.

சர்க்கரை நிறைந்த பேக்கிங் உணவுகள்

சர்க்கரை நிறைந்த பேக்கிங் உணவுகள்

இதய ஆரோக்கியமான உணவுகள் என்று வரும் போது, அதில் சர்க்கரை உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இருக்கும். இவை இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட ஸ்வீட்டுகளில் சோடியம் நிறைந்திருக்கும். எனவே உங்களுக்கு ஸ்வீட் சாப்பிட ஆசை எழுந்தால், நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள்.

உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்

உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சோடியம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும். சோடியமானது இரத்த அழுத்த அளவை எகிற வைத்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஸ்நாக்ஸ் சமயத்தில் உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் பிற சோடியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களைத் தவிர்த்திடுங்கள்.

மில்க் சாக்லேட்

மில்க் சாக்லேட்

மில்க் சாக்லேட் மோசமான உணவு இல்லை. ஆனால் மாரடைப்பிற்கு பின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு டார்க் சாக்லேட் சிறந்த மாற்றாக இருக்கும். ஏனெனில் மில்க் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆனால் டார்க் சாக்லேட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகளால் நிரம்பியுள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து வீக்கத்தைக் குறைக்கும். மேலும் டார்க் சாக்லேட்டில் குறைந்தது 60-70% கொக்கோ நிறைந்துள்ளது என்றால் பாருங்கள்.

சாஸ் மற்றும் க்ரீம்கள்

சாஸ் மற்றும் க்ரீம்கள்

சாஸ் மற்றும் க்ரீம்கள் இனிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, இரத்த கொலஸ்ட்ராலின் அளவை மோசமாக அதிகரிக்கும். ஆகவே மாரடைப்பு வந்த ஒருவர், இந்த மாதிரியான உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள்

சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள்

சோடா பானங்கள் சர்க்கரையால் ஆனது. இது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்கும் மற்றும் தமனிகளின் சுவர்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தாகம் எடுத்தால் சோடா பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, தண்ணீரை அதிகம் குடியுங்கள். ஒருவேளை உங்களுக்கு வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து குடியுங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் மாட்டிறைச்சியை இதய ஆரோக்கியமான உணவாக கருதுவதில்லை. ஏனெனில் மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் நாம் நினைப்பதை விட அதிகமாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், இந்த வகையான இறைச்சிக்கு உடனே குட்-பை சொல்லிவிடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, தமனிகளுக்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதோடு ஆல்கஹால் அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும். எனவே மாரடைப்பிற்கு பின் நீண்ட நாட்கள் உயிர் வாழ விரும்பினால், முடிந்த அளவு ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Heart Day 2022: Foods to Avoid After a Heart Attack

World Heart Day 2022: Changes to your diet after a heart attack can have a big impact. Here are some foods to avoid after a heart attack. Read on...
Desktop Bottom Promotion