For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! நாள் முழுசும் உட்கார்ந்தே வேலை செய்கிறீர்களா? அப்படினா உங்களுக்கு இந்த ஆபத்து ஏற்படுமாம்!

இந்த புதிய ஆய்வின்படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

|

உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான அளவு உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடபடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? நாள் முழுவதும் நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்கிறீர்களா? ஒருநாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், நாள் முழுவதும் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து, 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு போதுமானதா என்றால்? நீங்கள் இதை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கும் இதய நோய் ஏற்படுவதற்கும் ஆபத்து அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

despite-regular-exercise-you-could-be-at-risk-of-health-problems-in-tamil

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமாக உங்கள் உடற்பயிற்சி அமர்வின் போது நீங்கள் பெற்ற ஆரோக்கிய நன்மைகளை செயலிழக்க செய்கிறது. இக்கட்டுரையில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

"விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மருத்துவம் & அறிவியல்" என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பின்லாந்தில் 3,700க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் தங்கள் அசைவுகளை மதிப்பிடுவதற்கு குறைந்தது ஒரு வாரமாவது அறிவியல் தர செயல்பாட்டு டிராக்கர்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு குழு. ஆனால், இவர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை உட்கார்ந்த நிலையில் இருப்பவர்கள். அதிகமாக சுற்றித்திரிபவர்களுடன் இவர்களை ஒப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் உடல் கொழுப்பு அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நபர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. மற்றொரு அணியில், கொஞ்சம் கூட அதிகமாக நடமாடுபவர்கள் மற்றும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் இவர்களை விட மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

இந்த புதிய ஆய்வின்படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளது. ஃபின்லாந்த் ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு நபருக்கும் உடல் செயல்பாடு மிக அவசியம் என்றும் இது பல்வேறு உடல் நல பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுக்காக்கும் என்று கூறினார்கள்.

நீங்கள் எந்த வகைக்குள் வருகிறீர்கள்?

நீங்கள் எந்த வகைக்குள் வருகிறீர்கள்?

ஆய்வின் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் நான்கு வெவ்வேறு குழுக்களை நிறுவினர்கள். அவர்கள் நாள் முழுவதும் எவ்வளவு உடல்செயல்பாடு செய்தார்கள் என்பதைப் பொறுத்து குழு வரையறுக்கப்பட்டது. பங்கேற்பாளர்களில் 1,173 பேர் "சுறுசுறுப்பானவர்களாகவும்", 1,199 பேர் "உட்கார்ந்து இருப்பவர்களாகவும்", 694 பேர் "உட்கார்ந்து உடற்பயிற்சி செய்பவர்களாகவும்" மற்றும் 636 பேர் "நகர்ப்பவர்களாகவும்" உள்ளனர்.

நாள்பட்ட நோயால் பாதிக்கக்கூடும்

நாள்பட்ட நோயால் பாதிக்கக்கூடும்

சுறுசுறுப்பானவர்களை விட உட்கார்ந்து தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம். உட்கார்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும், தினசரி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் முழுவதும் உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும். இல்லையெனில், மிக மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உடல் கொழுப்பு சதவீதம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக்கூடும்.

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

உடற்பயிற்சிக்கு கூடுதலாக, சிறிது உலாச் செல்வது, விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது உங்கள் வீட்டைச் சுத்தம் செய்வது போன்றவற்றைச் செய்தாலும், லேசாக உடல்செயல்பாடுகளில் ஈடுபடலாம். படிக்கட்டுகளில் ஏறி, உங்கள் தாழ்வாரத்தில் உலாவும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் குறைவான நேரம் உட்கார்ந்து அதிகமாக நகர வேண்டும் என்பதே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Despite regular exercise, you could be at risk of health problems in tamil

Here we are talking about the Despite regular exercise, you could be at risk of health problems in tamil.
Story first published: Saturday, September 17, 2022, 19:00 [IST]
Desktop Bottom Promotion