For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இதெல்லாம் சாப்பிடுங்க...

ஒருவரது உடல் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக ஆரோக்கியமான நரம்புகள் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கும்.

|

தற்போது இளம் வயதிலேயே பலர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். ஒருவரது உடல் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக ஆரோக்கியமான நரம்புகள் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கும். இது தவிர உணவு முறை மாற்றம் மற்றும் உடல் செயல்பாடுகளில் மாற்றம் செய்ய வேண்டியதும் முக்கியம். மேலும் உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான இரத்த நாளங்கள் இருப்பதும் அவசியம்.

Consuming These Things That Reduce Heart Attack Risk

மனித உடலில் சராசரியாக சுமார் 60,000 மைல் இரத்த நாளங்கள் உள்ளன. இந்த இரத்த நாளங்கள் இதயத்துடன் சேர்ந்து வேலை செய்து, இரத்தத்தை உடல் முழுவதற்கும் பம்ப் செய்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றம் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவை நரம்புகளில் இரத்த ஓட்டத்தை குறைத்து, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பல தீவிரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகவே தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை அதிகம் சாப்பிடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இப்போது இதய நோய், மாரடைப்பு போன்றவற்றைத் தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை

மாதுளை

பழங்காலத்தில் இருந்தே மாதுளை பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் பல்வேறு வகையான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே மாதுளையை உட்கொள்வது, உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மாதுளையில் இருக்கும் அதிகளவிலான ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள், வாசோடைலேட்டிங் விளைவைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த பழம் இரத்த ஓட்டத்தை உடலில் அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே இதுவரை நீங்கள் மாதுளை சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.

நைட்ரேட் நிறைந்த காய்கறிகள்

நைட்ரேட் நிறைந்த காய்கறிகள்

மாதுளையைப் போலவே பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளது. இது நைட்ரிக் ஆக்சைடை ஒருங்கிணைக்க உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்துகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை ஆதரிக்கிறது. ஆகவே நைட்ரேட் அதிகம் நிறைந்த காய்கறிகளான வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, லெட்யூஸ், சோம்பு, முள்ளங்கி, சைனீஸ் முட்டைக்கோஸ், பார்ஸ்லி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெர்ரி

பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளில் எலாஜிக் அமிலம் என்னும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளது. இது பல வழிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட்டாகும். இந்த எலாஜிக் அமிலம் சில புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை நடுநிலையாக்குகிறது மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெர்ரி பழங்களுக்கு நிறத்தை அளிக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்டான அந்தோசையனின்கள் தமனிகளை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், தமனிகள் கடினமாகாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் இது நைட்ரிக் ஆக்சைடின் வெளியீட்டை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெர்ரி பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்

மீன் எண்ணெய் புற தந்துகி இரத்த செல்களின் வேகத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதாவது மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, ஹெர்ரிங், மத்தி மற்றும் ட்ரவுட் போன்றவற்றில் அதிகம் உள்ளன. இந்த கொழுப்பு அமிலம் இரத்த நாளங்களின் புறணிக்குள் நைட்ரிக் ஆக்சைடு வெளியிடுவதை ஊக்குவித்து, வாசோடைலேட்டிங் விளைவை உருவாக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதோடு தவிர, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை ஊக்குவிக்கும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை தினமும் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Consuming These Things That Reduce Heart Attack Risk

Want to reduce the risk of heart attack? Then consume these things to avoid heart attack. Read on...
Story first published: Friday, November 12, 2021, 10:59 [IST]
Desktop Bottom Promotion