For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்

உலகளவில் ஆண்களை விட பெண்களுக்கே மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என கண்டறிப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

By Saranraj
|

இப்பொழுது இருக்கும் அவசர உலகில் தினம் தினம் புதுப்புது நோய்கள் உருவாகி மற்றும் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோய் மாரடைப்பு ஆகும். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சமூகத்தில் மாரடைப்பு என்பது 30 வயதிலேயே ஏற்பட தொடங்கிவிட்டது.

உணவு பழக்கவழக்கம், வேலைச்சுமை, முன்னோர்கள் மூலம் என மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பெரும்பாலும் திரைப்படங்களில் மாரடைப்பு ஏற்பட்டவுடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுவது போல காட்டுவார்கள். ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
SCAD

SCAD

ஸ்பான்டேனியஸ் கரோனரி ஆர்ட்டெரி டிசெக்சன்(SCAD) என்பது இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வரும் ஒரு அவசர நிலையாகும். இதனால் இரத்த ஓட்டம் குறைவாகவோ அல்லது முழுவதும் தடுக்கப்படுவதால் உடனடி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது குறிப்பாக புதிதாய் தாயான பெண்களுக்கு மிக அதிகம்.

"ப்ரோக்கன் ஹார்ட்"

இதய நிபுணர்கள் இந்த மன அழுத்தத்தை தூண்டப்பட்ட கார்டியோமயோபதி என அழைக்கிறார்கள். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களை எளிதாக தாக்கக்கூடியது. இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் எளிதில் உணர்ச்சிவசபடக் கூடியவர்கள். குடும்ப உறவுகளில் பிரச்சினை, நெருங்கியவர்களின் இழப்பு போன்ற காரணங்கள் அவர்களை நிலைகுலையைச் செய்யும். இந்த சூழ்நிலையில் அவர்கள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய மிகவும் சிரமப்படும். இது மாரடைப்பிற்கு வழிவகுக்கும். இதற்கு தகுந்த நேர சரியான சிகிச்சையின் செய்வதன் மூலம் பூரண குணமடைய வாய்ப்புகள் உண்டு.

அதிக எடை

அதிக எடை

அதிக எடை கொண்ட பெண்களுக்கு, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று அர்த்தம் அல்ல. அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு இருந்தால் நீங்கள் ஒல்லியாக இருந்தாலும் மாரடைப்பு வரலாம், புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளது.

சர்க்கரைவியாதி

சர்க்கரைவியாதி

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று சர்க்கரை வியாதி ஆகும். இரத்தத்தில் உள்ள அதிகளவு சர்க்கரை இரத்தத்தின் ஆக்சிஜன் அளவை குறைப்பதால் தமனிகளில் வீக்கத்தை ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி நீரிழிவு நோயாளிகள் பருமனாக இருப்பதோடு அதிக இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு கொண்டவர்களாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். மருத்துவரின் உதவியோடு உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இதயத்தை பாதுகாக்க உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். இந்த மன அழுத்தம் உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்புகளை இருமடங்காக்கிவிடும். சுறுசுறுப்பு, ஆரோக்கியத்தில் அக்கறை, அன்றாட வேலைகள் என அனைத்திலும் இருந்து உங்களை விலக்கி வைத்துவிடும். இந்த சூழ்நிலையில் உங்கள் இதயம் எளிதாக தாக்குதலுக்கு ஆளாகிவிடும். முடிந்தவரை மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 5 Reasons for women heart attack

Top 5 Reasons for women heart attack
Story first published: Friday, July 6, 2018, 14:08 [IST]
Desktop Bottom Promotion