For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை சித்த வைத்தியத்தின் படி குறைப்பது எப்படி...?

உடலில் சேருகின்ற கெட்டக்கொழுப்பினை கரைக்க நீங்கள் சாப்பிட வேண்டியவையும், கடைபிடிக்க வேண்டியவையும்.

|

நமது உடலில் நீண்ட நாட்கள் தங்கி விட கூடிய கொழுப்புகள் தான் நமக்கு அதிக அளவில் நோய்களை தருகிறது. நாம் உண்ணும் உணவில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருந்தால் அதுவும் இதே போன்று நம்மை பாதிக்க கூடும். இது ஆரம்ப கால கட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பை தராது. ஆனால், பின்னாளில் உங்கள் உயிருக்கே ஆபத்தை தர கூடிய தன்மை இதற்கு உள்ளதாம்.

அடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை சித்த வைத்தியத்தின் படி குறைப்பது எப்படி..?

நாம் சாப்பிட கூடிய உணவுகளை விட சித்தர்கள் அவர்களின் குறிப்பில் பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே சில அற்புத மூலிகைகளை பற்றிய குறிப்புகளை கூறியுள்ளனர். இவற்றில் ஒரு சில வகையான மூலிகைகள் நம் வீட்டிலே கிடைக்கின்றன. அதே போன்று இந்த குறிப்பின் மூலம் தயாரிக்கப்படும் முறையை நாம் பின்பற்றி வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இனிமையான வாழ்வை மேற்கொள்ளலாம். என்னென்ன மூலிகை வைத்தியங்கள் நம் வீட்டிலே கிடைக்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெட்ட கொழுப்பு :

கெட்ட கொழுப்பு :

பிற கொலஸ்ட்ரால் துகள்களை விட எல் டி எல் கொலஸ்ட்ராலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் எளிதாக இவை ரத்த நாளங்களில் படிந்திடும், இவை ஒரு நாளிலோ அல்லது குறிப்பிட்ட குறுகிய காலத்தில் நிகழ்வது அல்ல, இப்படி கொழுப்பு படியும் வேலை உங்களது குழந்தை பருவத்திலிருந்தே துவங்கி விடுகிறது.

வெள்ளை அணுக்கள் :

வெள்ளை அணுக்கள் :

நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இந்த எல் டி எல் கொலஸ்ட்ராலை கிரகித்துக் கொள்ள ஆரம்பிக்கும்,அதனை டாக்ஸிக்காக மாற்றிடும். ஆரம்பத்தில் எல் டி எல் கொலஸ்ட்ரால் மிகக்குறைந்த அளவு இருக்கும் போது எந்தப் பிரச்சனையும் தெரியாது, நாளடைவில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது வெள்ளை அணுக்களுக்கும் வேலை அதிகரிக்கிறது. அந்த கிரகிப்புத் தன்மையையும் தாண்டி கொலஸ்ட்ரால் படிய ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனை துவங்குகிறது.

இதனால் இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு இயற்கையாகவே ரத்தம் குறைந்திடும், அதோடு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லப்படும் பாதைகளில் தடையிருப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

திரிகடுகு சூரணம்

திரிகடுகு சூரணம்

கொலஸ்ட்ராலை மிக எளிமையான வழியில் குறைக்க இந்த திரிகடுகு சூரணம் நன்கு உதவுகிறது. இதனை இந்த குறிப்பில் கூறுவது போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

தேவையானவை...

மிளகு

திப்பிலி

சுக்கு

தேன்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

முதலில் மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சமமான அளவு எடுத்து கொண்டு வாணலில் 2 முதல் 3 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும். அடுத்து இதனை பொடியாக அரைத்து கொண்டு காற்று புகாத பாத்திரத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

தினமும் அரை ஸ்பூன் இந்த பொடியுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் விரைவில் குறையும்.

MOST READ: ஆண்மை குறைவு பிரச்சினைக்கு இந்த ஒரு பழம் எப்படி தீர்வை தரும்..?

குண சிங்கி (ஜின்செங்)

குண சிங்கி (ஜின்செங்)

கெட்ட கொலஸ்ட்ராலை நம் உடலில் இருந்து வெளியேற்ற கூடிய தன்மை இந்த குண சிங்கி என ஜிங்கெங்கிற்கு உள்ளதாம். இந்த மூலிகையை பல ஆயிரம் வருடமாகவே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் பயன்படுகிறது.

இலவங்க பொடி வைத்தியம்

இலவங்க பொடி வைத்தியம்

நமது வீட்டில் இருக்க கூடிய இந்த மூலிகையும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்ட கூடும். இவற்றுடன் இன்னும் சில மூலிகைகளை சேர்த்து சாப்பிட்டால் பலன் உடனடியாக கிடைக்கும். இதற்கு தேவையானவை...

இலவங்க பொடி 1 ஸ்பூன்

திரிகடுகு 1/4 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

நீர் 1 கிளாஸ்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

நீரை வெது வெதுப்பான சூட்டில் சூடு செய்து இறக்கி கொள்ளவும். அவற்றில் இலவங்க பொடி, திரிகடுகு, ஆகிய மூலிகைகளை சேர்த்து கொண்டு, பின்னர் தேனையும் சேர்த்து நன்றாக கலந்து தினமும் குடித்து வரலாம். இந்த குறிப்பு உடனடியாக உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விடும்.

கையிலே பலன்..!

கையிலே பலன்..!

நம் வீட்டில் இருக்க கூடிய ஒரு சில மூலிகைகள் இந்த கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக நீக்கி விடுமாம். இதற்கு தேவையான பொருட்கள்...

பூண்டு 1 பல்

துருவிய இஞ்சி அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

MOST READ: இரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..

தயாரிப்பு முறை...

தயாரிப்பு முறை...

பூண்டை நன்றாக நறுக்கி கொள்ளவும். அடுத்து இஞ்சியை சிறிது சிறிதாக துருவி கொண்டு இதனுடன் சேர்க்கவும். இறுதியாக எலுமிச்சை சாற்றை சேர்த்து கொண்டு ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து விடும்.

வீட்டின் முற்றத்தின்...

வீட்டின் முற்றத்தின்...

பல வீடுகளின் முற்றத்தில் துளசி செடியை வைத்திருப்போம். ஆனால், அதன் பயன் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சளியை மட்டுமே இந்த துளசி செடி குணப்படுத்தும் என நாம் இத்தனை நாட்களாக எண்ணி கொண்டிருந்தோம்.

ஆனால், இந்த துளசி கொலஸ்ட்ராலையும் குறைக்கும் தன்மை கொண்டதாம். எனவே, தினமும் 5 துளசி இலைகளை சாப்பிட்டாலே போதும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

உங்களின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய ஆற்றல் இந்த ஆளி விதைகளுக்கு உண்டு. மேலும், இவை இதய நோய்களையும் கட்டுப்படுத்த கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. சில கடைகளில் இது மாத்திரை போன்றும் விற்கப்படுகிறது.

கற்றாழை

கற்றாழை

உடல் எடை எப்படி கற்றாழை குறைக்க உதவுகிறதோ அதே போன்று நமது உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் இது கரைக்க உதவுகிறது என சித்தர்களின் குறிப்புகள் கூறுகின்றன. கற்றாழை ஜெல்லை நன்றாக அலசி அப்படியே சாப்பிட்டு வந்தாலே இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: ஆண்களே..! 30 வயதில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbs To Reduce Bad Cholesterol

Here we listed out some herbs to reduce the bad cholesterol.
Desktop Bottom Promotion