Just In
- 2 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 4 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 4 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
- 5 hrs ago
2020-இல் இந்த ராசிக்காரங்க தான் அதிக பணப்பிரச்சனையை சந்திப்பாங்களாம்... தெரியுமா?
Don't Miss
- Movies
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- News
இரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு
- Sports
முடியலைடா சாமி! கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Finance
கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம் போட்ட CEO..! கம்பெனி என்ன செய்தது..?
- Technology
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.
பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.
இது தவிர காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. ‘ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 களில் இதயநோய் ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இதயநோயை தவிர்க்கலாம்
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது. தன் மனதை புரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசலாம். பணத்தின் பின்னால் ஒடுவதால்தான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே சக்திக்குத் தகுந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி செய்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.