உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க இதயத்தில் அடைப்பு இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!

Heart Blockage Symptoms In Tamil: உலகளவில் ஏராளமானோர் இறப்புக்கு காரணமாக இதய நோய் உள்ளது. இப்படி இதய நோய் வருவதற்கு தமனிகளில் ஏற்படும் அடைப்பு தான் முக்கிய காரணமாக உள்ளது. இதயத்திற்கு செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்பட நாம் உண்ணும் கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகளும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம்.

தற்போது நம்மைச் சுற்றி ஏராளமான ஜங்க் உணவுகள் விற்கப்படுகின்றன. இதனால் வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதன் சுவைக்கு அடிமையாகி, வாங்கி சாப்பிடுகிறோம். இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள கொழுப்புக்கள் சரியாக ஜீரணமாகாமல், இரத்தக்குழாய்களில் படிந்து, நாளடைவில் அடைப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

Heart Blockage Symptoms Early Signs That Your Heart Arteries Might Be Blocked

ஆனால் ஒரு நற்செய்தி என்னவென்றால், இதயக் குழாய்களில் அடைப்பு இருந்தால், ஒருசில ஆரம்ப கால அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகளை கவனித்து, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொண்டு வந்தால், இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். இப்போது இதய குழாய்களில் அடைப்பு இருந்தால், தெரியும் சில ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

நெஞ்சு வலி அல்லது இறுக்கம்

இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் தெரியும் அறிகுறிகளுள் முதன்மையானது நெஞ்சுப் பகுதியில் வலி அல்லது இறுக்கம் ஆகும். அதுவும் இப்படியான அசௌகரியத்தை ஏதாவது செயல்பாடுகளான நடக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது அனுபவித்தால் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது அனுபவித்தால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். சில சமயங்களில் இந்த வலி ஓய்வு எடுக்கும் போதும் ஏற்படலாம். ஒருவேளை இந்த வலி நீடித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மூச்சுவிடுவதில் சிரமம்

இதயத்தில் அடைப்பு இருந்தால், இதயத்திற்கு போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை பெற முடியாமல் போகும். இம்மாதிரியான சூழ்நிலைகளில் மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அதுவும் இப்படியான மூச்சுத்திணறல் ஏதேனும் வேலை செய்யும்போதோ அல்லது ஓய்வு நிலையிலோ ஏற்படலாம்.

மிகுந்த உடல் சோர்வு

அதிக வேலை செய்யாமல் ஒருவர் மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை அனுபவித்தால், இதயத்தால் சரியாக இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு அழுத்த முடியவில்லை என்று அர்த்தம். எப்போது ஒருவரது இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறதோ, அப்போது தான் இரத்த ஓட்டத்தில் இப்படியான இடையூறு ஏற்பட்டு, சிறு வேலை செய்தாலும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.

தலைச்சுற்றல் அல்லது மயக்கம்

இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, இதயத்தால் போதுமான இரத்தத்தை மூளைக்கு அனுப்ப முடியாமல் போகும். இதன் விளைவாக தலைச்சுற்றல் அல்லது அவ்வப்போது மயக்கத்தை சந்திக்க நேரிடும்.

வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்பு

இதயத்துடிப்பு மிகவும் வேகமாகவோ அல்லது சீரற்ற முறையில் துடிப்பதை அனுபவித்தால், இதயமானது இரத்தத்தை பம்ப் செய்ய போராடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான், இதயத்தால் அதன் பணியை திறம்பட செய்ய முடியாமல் போகும். எனவே இப்படியான சீரற்ற இதயத்துடிப்பை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உடலின் பிற உறுப்புக்களில் வலி

சில சமயங்களில் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அதனால் ஏற்படும் வலி நெஞ்சு பகுதியில் மட்டும் ஏற்படுவதில்லை. அந்த வலி தோள்பட்டை, கை, கழுத்து, தாடை அல்லது முதுகு வரை பரவியிருக்கும். அதுவும் பெரும்பாலும் இப்படியான வலி உடலின் இடது பக்கத்தில் தான் தோன்றும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, March 5, 2025, 14:13 [IST]
Desktop Bottom Promotion