Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
நைட் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப மாரடைப்பு வரப்போகுதுன்னு அர்த்தம்... உஷார்....
Heart Attack Signs In Tamil: மாரடைப்பு என்பதை மருத்துவ ரீதியாக மயோகார்டியல் இன்ப்ராக்ஷன் என்று அழைப்பர். இது ஒரு மிகவும் அவசர நிலையாகும். எப்போது ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறதோ, அப்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த நிலைக்கு உடனடி சிகிச்சையை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக போதுமான இரத்தம் கிடைக்காமல் இதய தசைகள் மீள முடியாத அளவில் சேதமடையும் அல்லது இறப்பை சந்திக்க நேரிடும்.
சமீப காலமாக இந்த மாரடைப்பால் ஏராளமானோர் அதிகம் இறக்கிறார்கள். இப்படி மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உடற்பயிற்சி செய்யாமை, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த மாரடைப்பு வயதானவர்களுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. இளம் வயதினருக்கும் வரக்கூடும்.

எனவே ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக ஆரோக்கியத்தில் சிறு அசௌகரியத்தை திடீரென்று சந்தித்தாலும், அதைப் புறக்கணிக்காமல், மருத்துவரை அணுகி காண்பித்துவிட வேண்டும். பெரும்பாலும் மாரடைப்பு இரவு நேரத்தில் ஏற்படுகிறது. எனவே இரவு மாரடைப்பு ஏற்படப் போகிறது என்றால் ஒருவர் ஒருசில அறிகுறிகளை முன்கூட்டியே சந்திக்க நேரிடும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. நெஞ்சு வலி
மாரடைப்பு வரப்போகிறது என்றால் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இப்படியான அசௌகரியத்தை இரவு நேரத்தில் காரணமின்றி சந்தித்தால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் இந்த வலி இதய பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து லேசானது முதல் மிதமானது வரை இருக்கும். சில சமயங்களில் வலி வந்து வந்து போவதையும் உணரலாம்.
2. மூச்சுத்திணறல்
இரவு நேரத்தில் திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மூச்சுத்திணறல் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் ஒன்று தான் மாரடைப்பு. அதுவும் ஒருவர் நெஞ்சு பகுதியில் லேசான வலியுடன், மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்தால், மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.
3. வாந்தி அல்லது குமட்டல்
வாந்தி, குமட்டல் போன்றவை அஜீரண கோளாறின் அறிகுறியாக பெரும்பாலும் கருதப்படுகிறது. இதனால் நிறைய பேர் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த வாந்தியும், குமட்டலும் மாரடைப்பின் அறிகுறிகளுள் ஒன்றும் கூட. எனவே நெஞ்சு பகுதியில் அசௌகரியத்துடன் ஒருவர் வாந்தி, குமட்டல் போன்றவற்றையும் சந்தித்தால், இரவில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
4. உடல் சோர்வு
ஒருவர் பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் உணர்ந்து, அதையே இரவு நேரத்திலும் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எனவே விவரிக்க முடியாத உடல் சோர்வை திடீரென்று சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. அஜீரண கோளாறு
செரிமான பிரச்சனைகளானது மோசமான குடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். அதே வேளையில் மோசமான குடல் ஆரோக்கியம் இதய பிரச்சனைகளுடனும் தொடர்புடையது. ஆகவே இரவு நேரத்தில் காரணமின்றி குமட்டல், அஜீரண கோளாறு ஆகியவற்றுடன் மூச்சு திணறல், நெஞ்சு பகுதியில் அழுத்தம் போன்றவற்றை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
