Latest Updates
-
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும்.. புற்றுநோய் முதல் இதய நோய் வரை தடுக்க முடியும்..
Malabar Spinach Benefits In Tamil: கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் மலபார் கீரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா. இந்த மலபார் கீரையை ஆயுர்வேதத்தில் பாசெல்லா அல்பா என்று கூறுவர். இந்த மலபார் கீரை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சத்தான கீரையாக பயன்பட்டு வருகிறது.
இந்த மலபார் கீரை சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு நிறங்களில் கிடைக்கும். பெரும்பாலான இடங்களில் இந்த மலபார் கீரை கிடைக்கிறது. தென்னிந்தியாவில் வாய்ப் புண்களை சரி செய்ய இந்த மலபார் கீரையை பயன்படுத்துகின்றனர்.

மலபார் கீரையை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
மலபார் கீரை 10 அடி நீளம் வரை வளரக் கூடிய தாவரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது. இந்த மலபார் கீரையை கறிகள், பொரியல் மற்றும் சூப்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். இந்த மலபார் கீரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
இந்த மலபார் கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, கே இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. மலபார் கீரையில் அதிகளவு ஆக்ஸலேட்டுகள் காணப்படுகிறது. இந்த ஆக்ஸலேட்டுகள் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதில் தலையிடுகிறது.
பராம்பரிய மருத்துவ குணங்கள்
மலபார் கீரையில் செரிமானக் கோளாறுகளை சரி செய்யும் சத்துக்கள் உள்ளன. செரிமானக் கோளாறுகள், சுவாச பிரச்சினைகள், தோல் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த மலபார் கீரை உலகெங்கிலும் உள்ள பலரால் விரும்பப்படுகிறது.
மலபார் கீரையின் ஊட்டச்சத்து அளவுகள்
மலபார் கீரையில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. கீரையில் நிறைய அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. இந்த கீரையில் பினோலிக் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகிறது. எனவே வளரும் குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க மலபார் கீரை உதவுகிறது.
மலபார் கீரை பற்றிய ஆராய்ச்சிகள்
மலபார் கீரை என்பது தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க உணவு வகைகளில் பிரபலமான உணவு வகையாகும். இந்த மலபார் கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
மலபார் கீரையின் இலைகளில் ஃபீனால்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பை கொண்டு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
மலபார் கீரையை உட்கொள்வது இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக மலபார் கீரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மலபார் கீரை
மலபார் கீரை வாய்ப்புண்ணை குணப்படுத்த உதவுகிறது. மலபார் கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது வாய்ப் புண்களை குணப்படுத்த உதவுகிறது. மலபார் கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உள்ளன. இவை வாய்த் திசுக்களை பராமரிக்க உதவுகிறது.
மலச்சிக்கலை போக்கும்
மலபார் கீரையில் நிறையளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமான அமைப்பை மேம்படுத்தி உணவை சீராக்க உதவுகிறது. மலபார் கீரையில் நீர் உள்ளடக்கம் இருப்பதால் பெருங்குடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இது எளிதான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மலபார் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் செரிமான மண்டலத்தின் வீக்கத்தைக் தணிக்க உதவுகிறது. எனவே மலபார் கீரை மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது
மலபார் கீரை கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான கீரையாக அமைகிறது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. எனவே இது தாய் மற்றும் குழந்தையின் இருவரின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் உதவுகிறது. மலபார் கீரையில் உள்ள இரும்புச்சத்து சத்து இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மலபார் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் அழற்சியில் இருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்யும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications