Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
அடிக்கடி தலைவலிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த கொடிய பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்...
Headache Reasons In Tamil: தற்போது பெரும்பாலானோர் தினமும் சந்திக்கும் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனை தான் தலைவலி. ஆனால் இந்த தலைவலி மிதமானதாக இருந்து, ஒய்வெடுக்கும் போது சரியாகிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அடிக்கடி தாங்க முடியாத அளவில் தலைவலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவருக்கு தலைவலி பல காரணங்களால் ஏற்படலாம். அதில் மன அழுத்தம், மோசமான தூக்கம், நீரிழப்பு மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர உடலில் ஒருசில தீவிர பிரச்சனைகள் இருந்தாலும், அதன் விளைவாக தலைவலியை சந்திக்க நேரிடும்.

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், உங்களுக்கு பின்வரும் ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயம் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது எந்த பிரச்சனைகள் இருந்தால், தலைவலியை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
இரத்த அழுத்தம்
ஒருவரது உடலில் இரத்த அழுத்த அளவானது சீராக இல்லாவிட்டால், அந்நபர் அடிக்கடி தலைவலியை சந்திக்க நேரிடும். எனவே காரணமின்றி திடீர் திடீரென்று தலைவலியை சந்தித்தால், உங்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து பாருங்கள்.
மன அழுத்தம்
தற்போதைய நவீன உலகில் மன அழுத்தம் ஒரு மிகப்பெரிய தொற்றுநோயாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் அலுவலகத்தில் கொடுக்கப்படும் இலக்குகள், நிதி தேவைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றால் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். இப்படி மன அழுத்தத்தில் இருப்பதனால், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் கடுமையான தலைவலியை அவ்வப்போது சந்திக்க நேடுகிறது.
அஜீரண கோளாறு
சொன்னால் நம்பமாட்டீர்கள், அஜீரண கோளாறு தீவிரமாக இருந்தாலும், அதன் விளைவாக அடிக்கடி தலைவலியால் அவதிப்படக்கூடும். எனவே உங்களுக்கு தலைவலி தொடர்ச்சியாக மற்றும் அடிக்கடி ஏற்பட்டால், அதற்கு உங்களின் தீவிரமான செரிமான பிரச்சனையும் ஒரு முதன்மையான காரணமாக இருக்கலாம். இந்நிலையில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கண் பிரச்சனைகள்
ஒருவர்து பார்வை பலவீனமாகவோ அல்லது மோசமாகவோ இருந்தால், அது தலையில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒருவருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை பிரச்சனை இருந்தால், அது அடிக்கடி மிதமான தலைவலியை சந்திக்க வைக்கும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி கண்களை பரிசோதனை செய்து பாருங்கள்.
ஒற்றைத் தலைவலி
ஒற்றை தலைவலியானது மூளையில் ஏற்படும் ஒரு வேதியியல் இடையூறு ஆகும். இந்நிலையில் தலைவலி மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால், தலைவலியுடன், குமட்டலும் சேர்ந்திருக்கும். அதோடு இந்த வகை தலைவலி அதிகப்படியான சப்தம், அதிக வெளிச்சம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவற்றால் எளிதில் தூண்டப்படும்.
மூளைக்கட்டி
நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது உடலில் உள்ள தீவிரமான ஒரு பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். முக்கியமாக அடிக்கடி காரணமில்லாமல் தலைவலியை சந்தித்தால், அதற்கு மூளையில் உள்ள கட்டியும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் மூளைக்கட்டியின் முக்கியமான அறிகுறிகளுள் தலைவலியும் ஒன்றாகும்.
எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியை சந்தித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











