4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சளி மருந்துகளை அதிரடியாக தடை செய்த அரசு - எந்தெந்த மருந்துகள்? ஏன்?

Govt Bans Cold And Flu Syrups for Children Below 4 Years: நாட்டின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த மருந்துகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் தான்.

உலகெங்கிலும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளை உட்கொண்டதில் சுமார் 141 குழந்தைகள் பலியானதன் காரணமாக குறிப்பிட்ட சளி, இருமல் மருந்துகளுக்கு இந்திய அரசு தடை விதிதுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளுக்கும் உயிர் காக்கும் மருந்துகளை இந்திய அரசு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வந்தது.

Govt Bans Cold And Flu Syrups for Children Below 4 Years: Check This List

மருந்துகளை விலைக் குறைவில் கொடுத்து வந்ததால் நல்ல பெயரை இந்தியா பெற்று வந்தது. இந்நிலையில் இந்தியாவின் பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஒருசில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அது என்னவெனில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நாடும், உலக சுகாதார அமைப்பும் இந்திய மருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதுவும் இந்த சர்ச்சையானது 2019 ஆம் ஆண்டு முதலாகவே இருந்து வருகின்றன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த சளி, இருமல் மருந்துகள் இந்தியாவில் விற்கப்படவில்லை என்றாலும், அதே மருந்து கலவையை உட்கொண்ட இந்தியாவில் உள்ள சில குழந்தைகள் இறந்து போயிருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (Drug Controller General of India (DCGI)) ராஜீவ் ரகுவன்ஷி, டிசம்பர் 18 ஆம் தேதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் Chlorpheniramine Maleate IP 2mg + Phenylephrine Hcl IP 5mg Drop/ml ஆகியவற்றின் 'நிலையான மருந்து கலவை' (FDC) உற்பத்தியாளர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் GlaxoSmithKline's T-Minic Oral Drops, Glenmark's Ascoril Flu Syrup மற்றும் IPCA லேபரேட்டரீஸின் Solvin Cold Syrup போன்றவற்றை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள், அந்த மருந்தின் அட்டைகளில் 'எச்சரிக்கை'-யை செருகுமாறு கூறப்பட்டுள்ளன.

ஏனெனில் இந்த மருந்துகள் அனைத்தும் பெற்றோர்களால் மருத்துவரின் பரிந்துரையில்லாலேயே குழந்தைகளுக்கு பயன்பத்தப்பட்டு வருகின்றன. எனவே Chlorpheniramine Maleate IP 2mg + Phenylephrine Hcl IP 5mg Drop/ml ஆகியவற்றின் கலவைகளைக் கொண்ட மருந்துகளின் அட்டைகளில் எச்சரிக்கை செய்தியை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மருந்து கலவைகள் சளி, இருமல் அறிகுறிகளான கண்களில் நீர் வடிதல், மூக்கு ஒழுகல், தும்மல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்க உதவுகின்றன. அதில் Chlorpheniramine Maleate ஒரு ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தாகச் செயல்படும், அதே வேளையில், Phenylephrine ஒரு மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

தடைசெய்யப்பட்ட FDCகளின் பட்டியல்:

டிசம்பர் 2023 வரை, இந்தியாவில் மொத்தம் 14 FDC மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

* நிம்சுலைடு + பாராசிட்டமால் மாத்திரைகள்
* அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின்
* போல்கோடின் + ப்ரோமெதாசின்
* குளோர்பெனிரமைன் மாலேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + காஃபின்
* டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு
* அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + குய்பெனெசின் + லெவோசல்புடமால் + மெந்தோல்
* டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + குய்பெனெசின்
* டிஃபென்ஹைட்ரமைன் ஹைட்ரோகுளோரைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + அம்மோனியம் குளோரைடு
* டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
* டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோபிரோமைடு + டாக்ஸிலாமைன் சுசினேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு
* போல்கோடின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட்
* அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குய்பெனெசின்
* டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + டாக்ஸிலமைன் சுசினேட் + குய்ஃபெனெசின்
* டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + குய்ஃபெனெசின்

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion