வாயு பிரச்சனையை தவிர்க்க.. காலையில் இதுபோன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள்..!

வாயு பிரச்சனை, வயிற்று பிரச்சனை, அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல்.. ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக தலை சுற்றுவது சிலருக்கு இருக்கலாம். இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கோ, கர்ப்பிணிகளுக்கோ, வீட்டு பெரியவர்களுக்கோ இருக்கும். இந்த வாயு தொல்லையை எப்படி விரட்டி அடிப்பது? வாயு பிரச்னையை விரட்ட என்ன செய்யலாம்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

நீங்கள் நாள் முழுவதும் வாயு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா என்பது, காலை உணவு அல்லது அன்றைய முதல் உணவை நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தது. ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் கூறுகையில், சில உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்கிறார். காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம் என்கிறார்.

gas bloating problem can be prevented if these foods are avoided at breakfast

காலை 11மணி மாலை 4மணி போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது. காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும். இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம். அவல், தேங்காய்ப் பால், கைக்குத்தல் அரிசி, சிறுதானிய பொங்கல், வெண் பொங்கல் சாம்பார், இட்லி சாம்பார், நவதானிய கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

நம்மில் பெரும்பாலோர் டீ அல்லது காபியுடன் நாளைத் தொடங்குகிறோம். பால் இல்லாமல் குடிப்பது நல்லது. பால் வாயு பிரச்சனைகளை உண்டாக்கும். லாக்டோஸ் சகிப்புத்தன்மையும் உங்களை பாதிக்கலாம். உங்களுக்கு க்ரீன் டீ பிடிக்கவில்லை என்றால் மூலிகை டீயையும் குடிக்கலாம்.

காலை உணவாக முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது. இந்த இலைக் காய்கறியில் சிக்கலான கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் விளைவாக, செரிமானம் கடினமாகிறது. இதனால் வாயு பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு பதிலாக, குறைந்த கார்ப் காய்கறிகளான சுரைக்காய் மற்றும் கீரை போன்றவற்றை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்கள் மிகவும் சத்தானவை, சந்தேகமில்லை. ஆனால் அதை அன்றைய முதல் உணவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆப்பிள் பழங்களில் பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வாயு, வாயு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். அதற்கு பதிலாக சில பெர்ரிகளை சாப்பிடுங்கள். உங்கள் உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து நிறைந்த வெள்ளரி, வெங்காயம் போன்ற காய்கறிகளை காலை உணவாக பச்சையாக சாப்பிடக்கூடாது. இது வாயு உற்பத்திக்கு காரணமாக இருக்கலாம். ஆரோக்கியத்திற்கு வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள்.

சோளத்தில் செல்லுலோஸ் உள்ளது. இந்த நார்ச்சத்து பெரும்பாலான மக்களுக்கு ஜீரணிக்க கடினமாக உள்ளது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு பதிலாக கினோவா அல்லது அரிசி போன்ற முழு தானியங்களை உண்ணலாம்.

வாயு பிரச்சனையை சரிச்செய்ய சில முக்கியமான டிப்ஸ்...

1. அதிக பசி வந்த பின்னும் சாப்பிடாமல் இருக்க கூடாது.

2. காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம்.

3. மிளகாய்க்கு பதிலாக மிளகு தூள் எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள்.

4. எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல.

5. வேலை காரணமாகவோ மற்ற காரணத்துக்காகவோ காலை, மதியம், இரவு உணவைத் தவிர்க்க வேண்டாம்.

6. தலைவலி, வயிறு வலி, சளி என நீங்களே அடிக்கடி மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

7. புகை பிடிக்கும் நபர்கள் அருகில் செல்ல கூடாது.

8. எப்போதும் டென்ஷன், படபடப்பு, பயம், அவசரம் போன்றவை இருந்துகொண்டே இருந்தால் நிச்சயம் செரிமான பிரச்னை வரும். வாயு பிரச்னையும் வரும்.

9. மனதை எப்போது அமைதியாக, சீராக வைத்திருக்கப் பழகுங்கள்.

10. வாயு பிரச்னை இருந்தால் பஜ்ஜி, போண்டா சமோசா, மசாலா வடை உருளைக்கிழங்கு காராமணி முட்டைக்கோஸ் கொத்தவரை துரித உணவுகள் பீசா, பர்கர் பிஸ்கெட் பலாப்பழம் மாம்பழம் ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 15, 2024, 12:30 [IST]
Desktop Bottom Promotion