Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. உங்க பித்தப்பை ஆபத்துல இருக்கு-ன்னு அர்த்தம்...
Gallbladder Attack Symptoms In Tamil: நமது உடலில் பித்தப்பை கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்த சின்ன பை கல்லீரல் வெளியிடும் பித்த நீரை சேமித்து வைக்கிறது. இந்த பித்த நீர் உணவுகளை ஜீரணிப்பதற்கு உதவுகிறது. இப்படிப்பட்ட பித்த நீரில் இருக்கும் கொழுப்புக்கள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, அது ஒரு கட்டத்தில் பித்தக்கற்களை உருவாக்குகின்றன.
இந்த பித்தக்கற்கள் பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தும் போது பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது. பித்தப்பை தாக்குதலை பிலியரி கோலிக் தாக்குதல் என்று அழைப்பர். இது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். பித்தப்பையில் உள்ள நீர் சரியாக பாயாமல் இருந்தால், அதன் விளைவாக வீக்கம் மற்றும் கடுமையான வலியை உண்டாக்கும்.

பித்தப்பை தாக்குதல்களால் சந்திக்கும் அசௌகரியம் சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடித்திருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இப்போது பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
மேல் வயிற்று வலி
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி வயிற்று வலி தான். அதுவும் இந்த வலியானது வயிற்றின் மேல் பகுதியில், விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும். குறிப்பாக இந்த வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக தாங்க முடியாத அளவில் இருக்கும்.
வலது தோள்பட்டை மற்றும் முதுகு வரை வலி
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால், வயிற்றுப் பகுதியில் வலி தொடங்கி, அந்த வலி அப்படியே மேல் முதுகு மற்றும் வலது தோள்பட்டை வரை பரவும். முக்கியமாக இந்த வலி விவரிக்க முடியாத அளவில் கடுமையானதாக இருக்கும்.
குமட்டல் அல்லது வாந்தி
ஒருவரது பித்தப்பையில் கற்கள் உருவாகி அதனால் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அந்நபருக்கு குமட்டல் வாந்தி, காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படும். எனவே வயிற்று வலியுடன், இப்படி குமட்டல், வாந்தியையும் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வீக்கம்
தொடர்ச்சியாக அஜீரண கோளாறுகளை சந்திக்கிறீர்களா? அஜீரண கோளாறுகளானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதில் ஒன்று தான் பித்தப்பை பிரச்சனை. ஒருவரது பித்தப்பை சரியாக செயல்படாவிட்டால், அது நிறைய இரைப்பை பிரச்சனைகளை உண்டாக்கும் மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது
பித்தப்பையில் இருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால், இரத்த ஓட்டத்தில் பித்தம் படிந்து, அது சருமம் மற்றும் கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். இப்படியான நிலை கடுமையான பித்தப்பையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். இப்படிப்பட்ட அறிகுறியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சாம்பல் அல்லது வெளிர் நிறத்தில் மலம்
பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு, பித்தநீர் ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதன் விளைவாக மலமானது சாம்பல் அல்லது வெளிர் நிறத்தில் வெளியேறும். இப்படியான அறிகுறியை ஒருவர் சந்தித்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
அடர் நிற சிறுநீர்
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகரித்து, அதன் விளைவாக அடர் நிறத்தில் சிறுநீரை கழிக்க நேரிடும். அடர் நிற சிறுநீருக்கு பல காரணங்கள் இருந்தாலும், பித்தப்பை தாக்குதலும் ஒரு முக்கியமான காரணமாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications