Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஆண்களே! இந்த 4 மருந்துகள் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்துமாம்... உஷாரா இருங்க...
Erectile Dysfunction In Tamil: தற்போது ஆண்களிடையே ஆண்மைக்குறைவு அல்லது விறைப்புத்தன்மை பிரச்சனையானது அதிகரித்து வருகிறது. இப்பிரச்சனை இருக்கும் ஆண்களால் தனது துணையை திருப்திப்படுத்த முடியாது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான ஆண்கள் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் 40-70 வயதிற்குட்பட்ட ஆண்களில் சுமர் 50 சதவீத ஆண்கள் இப்பிரச்சனையைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆண்களுக்கு இப்படி விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் அதிகப்படியான மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை மட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை, உயர் கொலஸ்ட்ரால் போன்றவைகளும் காரணங்களாக உள்ளன. இது தவிர ஒருசில மருந்து மாத்திரைகளும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கும் போது, அந்த மருந்து அப்பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமின்றி, விறைப்புத்தன்மை பிரச்சனையையும் அதிகரிக்கின்றன. இப்போது எந்த மாதிரியான மருந்துகள் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது என்பதைக் காண்போம்.
1. பீட்டா தடுப்பான்கள்
ஆன்டி-ஹைப்பர்டென்சிவ்கள் என்று அழைக்கப்படும் பீட்டா தடுப்பான்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த மருந்துகளின் முக்கியமாக ஒரு பக்கவிளைவு விறைப்புத்தன்மை பிரச்சனையாகும். ஏனென்றால் இந்த மருந்துகள் டெஸ்டோஸ்டிரோன்களின் அளவைக் குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் குறைக்கின்றன. இதன் விளைவாக ஆணுறுப்புக்கும் போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இந்த மருந்தை எடுக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் தெரிவித்தால், வேறு மருந்தை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
2. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள்
மன அழுத்தத்திற்கு எடுக்கும் சில மருந்துகளின் முக்கியமான பக்கவிளைவு விறைப்புத்தன்மை பிரச்சனை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் Zoloft, Prozac மற்றும் Paxil போன்ற மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் செரடோனின் அளவை அதிகரித்து, ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன், டோபமைனை நேரடியாக பாதித்து, பாலியல் பிரச்சனைகளை வரத் தூண்டுகிறது. எனவே நீங்கள் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை எடுத்து விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் தெரிவியுங்கள்.
3. வலி நிவாரணிகள்
ஆய்வுகளின் படி, நீண்ட காலமாக முதுகு வலிக்காக ஓபியாய்டு வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும் ஆண்களுக்கு 45 சதவீதம் விறைப்புத்தன்மை பிரச்சனையின் அபாயம் அதிகம் உள்ளது. அதில் ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அடங்கும். இந்த வகை மருந்துகள் இரத்த ஓட்டத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, விறைப்புத்தன்மை திறனை மோசமாக பாதிக்கின்றன. எனவே இந்த வகை மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுக்காதீர்கள்.
4. அழற்சி எதிர்ப்பு மருந்துகள்
காலநிலை மாறும் போது சிலர் அழற்சிகளை சமாளிக்க அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுப்பார்கள். இப்படியான மருந்துகளை எடுக்கும் போது, அவை படை, கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் பூச்சி கடித்தால் ஏற்படும் எதிர்விளைவுகளைப் போக்க உதவுகின்றன. இந்த வகையான மருந்துகளை அதிகம் எடுக்கும் போது, சில சமயங்களில் அவை ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனைகளை வரத் தூண்டலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications