Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எச்சரிக்கை! இந்த உணவுகளை உயர் தீயில் சமைச்சு சாப்பிடாதீங்க.. இல்ல அது புற்றுநோயை உண்டாக்கிடும்...
Cancer Causing Foods: யாருக்கு தான் சாப்பிட பிடிக்காது. சொல்லப்போனால் நாம் சம்பாதிப்பதே நன்கு சாப்பிடத் தானே! ஆனால் உணவுகளை நாம் சமைத்து சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைக்கும் போது, அது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
அதுவும் குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக உயர் தீயில் சமைக்கும் போது, அதன் விளைவாக அந்த உணவில் புற்றுநோயை உண்டாக்கும் குறிப்பிட்ட சில பொருட்கள் உருவாகின்றன. எனவே சமைப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிந்து, அதன் படி சமைத்து சாப்பிட வேண்டும்.

தற்போது புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதெனில், எந்த உணவை அளவுக்கு அதிகமாக சமைத்தால் மற்றும் உயர் தீயில் சமைத்தால் புற்றுநோய் வரும் என்பதை அறிந்து, அந்த உணவுகளை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள். இப்போது எந்த உணவுகளை அதிகமாக சமைத்தால் புற்றுநோய் வரும் என்பதைக் காண்போம்.
உருளைக்கிழங்கு
கிழங்குகளில் உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விருப்பமான காய்கறி. சொல்லப்போனால் உருளைக்கிழங்கு பிரியர்கள் தினமும் ஏதாவது ஒரு வடிவில் உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை உயர் தீயில் நீண்ட நேரம் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், அது அக்ரிலமைடு என்னும் புற்றுநோயை உண்டாக்கும் தீங்குவிளைவிக்கும் கெமிக்கலை உற்பத்தி செய்யும். எனவே உருளைக்கிழங்கை எப்போதும் குறைவான தீயில் வேக வைத்து சாப்பிடுங்கள்.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்களை உருவாக்கும். எனவே இந்த கொடிய நோயின் அபாயத்தைத் தவிர்க்க, மாட்டிறைச்சியை குறைவான வெப்பநிலையில் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிடுங்கள். முக்கியமாக நீங்கள் சாப்பிடும் மாட்டிறைச்சி புற்றுநோயாக மாறாமல் இருக்க கருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
பிரட்
இன்று பெரும்பாலானோரின் காலை உணவாக பிரட் உள்ளது. என்ன தான் நவதானிய பிரட்டாக இருந்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக டோஸ்ட் செய்யும் போது, அது அக்ரிலாமைடு என்னும் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்களை உற்பத்தி செய்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே பிரட்டை டோஸ்ட் செய்யும் போது குறைவான தீயில் வைத்து, லேசாக டோஸ்ட் செய்யுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
சிக்கன்
பெரும்பாலானோரின் விருப்பமான இறைச்சியாக சிக்கன் உள்ளது. இந்த சிக்கனை நிறைய பேர் 65 செய்து சாப்பிடுவார்கள். அப்படி 65 செய்யும் போது எண்ணெயில் நீண்ட நேரம் உயர் தீயில் ப்ரை செய்தால், அது கார்சினோஜெனை உருவாக்கி, புற்றுநோய் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில், சிக்கனை எப்போதும் சமைக்கும் போது, குறைவான தீயில் வைத்து, சரியான அளவில் சமைத்து சாப்பிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பொதுவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும். இந்நிலையில் அந்த இறைச்சிகளை உயர் தீயில் நீண்ட நேரம் சமைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் மோசமான உணவாக மாறிவிடும். எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குறைவான தீயில் சமைத்து சாப்பிடுங்கள். முடிந்தவரை இந்த மாதிரியான இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
மீன்
மீனை குழம்பு வைத்து சாப்பிட விரும்புபவர்களை விட, அதை ப்ரை செய்து சாப்பிட விரும்புபவர்களே அதிகம். இப்படி மீனை ப்ரை செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உயர் தீயில் நீண்ட நேரம் மீனை வேக வைக்கும் போது, தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்களை மீன் வெளியிட்டு, புற்றுநோயை வரவழைத்துவிடும். எனவே முடிந்தவரை மீனை குறைவான வெப்பநிலையில் வேக வைத்து சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











