For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயின்றி ஆரோக்கியமாக இருக்க தினமும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டிய உணவுகள்!

|

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால், நம் வாழ்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலை செய்யும் நேரமும் அதிகரித்துவிட்டது. இதனால் பலரின் உணவுப் பழக்கவழக்கமும் மாறியுள்ளது. அதுவும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகளை நொறுக்கும் பழக்கம் அதிகரித்து, அதனால் அசிடிட்டி மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று உலக உணவு தினம் என்பதால், நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

போதுமான புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த ஓர் உணவுப் பொருள் தான் பாதாம். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் போன்ற நட்ஸ்களை வாரத்திற்கு ஏழு முறையாவது சாப்பிடுபவர்களுக்கு, நட்ஸ் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும் போது, ​​அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு விகிதம் 20% குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. எனவே, இதுபோன்ற உணவுகளை உட்கொள்வது முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது.

பாதாமில் வைட்டமின் ஈ, மக்னீசியம், புரோட்டீன், ரிபோஃப்ளேவின், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது. இவை தசைகளின் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கு பங்களிக்கும் புரோட்டீன்களைக் கொண்டுள்ளன. கூடுதலாக, தினமும் பாதாம் சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை நொறுக்குவதற்கு பதிலாக பாதாம் சப்பிடுங்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

பீசா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அன்றாட உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்வது இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளதால், இது செல்கள் சேதமடைவதைக் குறைத்து, சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகுக்கிறது. இது தவிர, ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நோய்கள் அண்டாமல் தடுக்கிறது. அதற்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் எடுக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

விலைக் குறைவில் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியது தான் வெள்ளரிக்காய். இதில் 96% நீர்ச்சத்து உள்ளதால், உடலை வறட்சியின்றி நீரேற்றத்துடன் வைக்கிறது. வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் தினமும் வெள்ளரிக்காயை உணவு உண்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் உண்பது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகளை வலிமையாக்குகிறது. மேலும் இதில் வைட்டமின்களான ஏ, பி, சி, மாங்கனீசு, காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகின்றன. முக்கியமாக வெள்ளரிக்காயில் வைட்டமின் பி1, பி5 மற்றும் பி7 ஆகியவை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை தளர்த்துகிறது மற்றும் மன அழுத்தம் மற்றும் மனக் கவலையை குறைக்கிறது.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ்களில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது மற்றும் இதில் செரிமானத்தை சீராக்க, கொழுப்புக்களின் அளவைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. தினமும் உணவில் சிறிது பீன்ஸ் சேர்த்துக் கொண்டால், அது தேவையில்லாமல் அதிகமாக உண்பதைத் தடுத்து, எடை இழப்புக்கு உதவுகின்றன. எனவே உங்கள் அன்றாட உணவில் சிறிது பீன்ஸ் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். இதில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் பிற நன்மை பயக்கும் பொருட்கள் உள்ளதால், இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். இஞ்சியை நற்பதமாகவோ, பொடியாகவோ பயன்படுத்தலாம். ஆனால் இதை நற்பதமான வடிவில் பயன்படுத்தும் போது, அதில் ஜிஞ்செரால் அதிகமாக இருக்கும். இது தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும். இஞ்சியை டீ தயாரிக்கும் போது அதில் தட்டிப் போட்டு குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் டீ நல்ல ப்ளேவருடனும் இருக்கும். நீங்கள் டீ பிரியர்கள் இல்லாவிட்டால், நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, இரவு தூங்கும் முன் குடித்தால், சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Food Day 2021: Foods You Should Eat Everyday

World Food Day 2021: Here we listed some foods that you should have everyday. Read on...
Story first published: Saturday, October 16, 2021, 11:50 [IST]