For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்?

விட்டமின் டி ஊட்டச்சத்து இருந்தால் போதும் பெண்களுக்கு இனி மார்பக புற்று நோய் வராதாம், வாங்க பார்க்கலாம்.

|

விட்டமின் டி நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது 'சன் சைன் ஊட்டச்சத்து' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தை சூரிய ஒளியில் இருந்து பெற முடியும். அதே மாதிரி இதை சில உணவுகளிலிருந்தும் நாம் பெறலாம். இந்த விட்டமின் டி பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவி செய்கிறது. மேலும் நமது நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.

Vitamin D May Help Reduce The Risk Of Breast Cancer

இதுமட்டுமல்லாமல் தற்போதைய ஆராய்ச்சி படி இந்த விட்டமின் டி சத்தைக் கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மார்பகத்தில் தேவையில்லாமல் வளரும் செல்கள் இணைந்து புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட புற்றுநோய் செல்களை விட்டமின் டி சத்து எவ்வாறு அழிக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்

மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்

விட்டமின் டி மற்றும் மார்பக புற்றுநோய் இடையே நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மார்பக புற்றுநோயும், விட்டமின் டியும் எதிர்மறை தன்மை கொண்டிருந்தது. அதாவது உங்கள் உடம்பில் போதுமான விட்டமின் டி சத்து இருந்தால் மார்பக புற்று நோய் வராமல் தடுத்து விட முடியும்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

இந்த விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து நிறையவே கிடைக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறை கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி சத்தை அதிகம் பெற்ற பெண்களுக்கு 45% மார்பக புற்று நோய் வருவதற்கான ஆபத்து குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஆய்வுத் தகவல்

மற்றொரு ஆய்வுத் தகவல்

இது குறித்து மற்றொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட 1666 பெண்களுக்கு மார்பக புற்று நோய் இருந்தது. இதில் போதிய விட்டமின் டி சத்து உடைய பெண்கள் மற்ற பெண்களைக் காட்டிலும் சீக்கிரமே மார்பக புற்று நோயி லிருந்து மீண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.

பல்கலைக்கழக ஆய்வு

பல்கலைக்கழக ஆய்வு

விட்டமின் டி யையும் மார்பக புற்று நோயையும் இணைக்கும் மற்றொரு ஆய்வை கிரெய்டன் பல்கலைக்கழகம், தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கிராஸ்ரூட்ஸ் ஹெல்த் ஆகியவற்றுடன் இணைந்து கலிபோர்னியா சானடியாகோ 6பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். அந்த ஆராய்ச்சியிலும் விட்டமின் டி மார்பக புற்று நோயை தடுப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விட்டமின் டி இன் நிலைகள்

விட்டமின் டி இன் நிலைகள்

விட்டமின் டியின் பல்வேறு நிலைகளை தற்போதைய ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. இந்த விட்டமின் டி மார்பக புற்று நோயை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதம். இதை இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தி இருப்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

விட்டமின் டி பற்றாக்குறை

விட்டமின் டி பற்றாக்குறை

மார்பக புற்று நோய் வருவதற்கு விட்டமின் டி பற்றாக்குறை மட்டுமே காரணம் கிடையாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உணவு, வாழ்க்கை முறை,, மரபணு போன்ற காரணங்களால் புற்றுநோய் உருவாகிறது. விட்டமின் டி பற்றாக்குறை என்பது அதன் ஒரு பகுதியே.

தெளிவான ஆய்வு

தெளிவான ஆய்வு

மேற்கண்ட ஆராய்ச்சிகளின் கருத்துப்படி விட்டமின் டிக்கும் மார்பக புற்று நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ள மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin D May Help Reduce The Risk Of Breast Cancer

Also known by the name 'sunshine vitamin', vitamin D is a fat-soluble vitamin produced by your body when exposed to sunlight. It can also be attained from certain types of food and supplements.
Desktop Bottom Promotion