For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...!

தனிப்பட்ட விருப்பங்கள், கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், அலர்ஜிகள் என பல காரணங்களால் முட்டை சாப்பிடாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். முட்டையில் இருக்கும் புரதச்சத்திற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும்.

|

உலகில் அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஒரு ஊட்டச்சத்துள்ள பொருள் என்றால் அது முட்டைதான். உடலின் ஆரோக்கியத்திற்கு புரோட்டின்கள் மிகவும் அத்தியாவசியமானது. எனவே அது அதிகமிருக்கும் முட்டையை மக்கள் விரும்பி சாப்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் எல்லோராலும் முட்டையை சாப்பிட முடியாது.

 Veg food items that can easily substitute eggs

தனிப்பட்ட விருப்பங்கள், கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், அலர்ஜிகள் என பல காரணங்களால் முட்டை சாப்பிடாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் முட்டையில் இருக்கும் புரதச்சத்திற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சைவ பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டோஃபு

டோஃபு

முட்டை அதிகம் சாப்பிட்டு சலித்து விட்டதா அல்லது அதனால் ஏதாவது அலர்ஜிகள் ஏற்படுகிறதா? ஆனால் அதேசமயம் அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க மனமில்லையா? ஆம் எனில், முட்டைக்குப் பதிலாக டோஃபுவை சாப்பிடுங்கள். மிளகு மற்றும் ஆர்கனோவுடன் சேர்த்து இதனை வறுத்து சாப்பிடும்போது அது சுவையான காலை உணவாக இருப்பதுடன் உங்களின் புரத தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

பூசணிக்காய்

பூசணிக்காய்

முட்டைக்கு மிகசிறந்த மாற்றுப்பொருளாக பூசணிக்காய் இருக்கும். டோஃபுவின் விதிகள் இதுக்கு பொருந்தும். பூசணிக்காயை எந்த உணவுப்பொருளிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தவும், பிணைப்பை ஏற்படுத்தவும் உதவும். முட்டைக்குப் பதிலாக 1/3 கப் பூசணிக்காயை எடுத்துக் கொள்ளலாம். இரண்டிலும் ஒரே அளவு ஊட்டச்சத்துக்கள்தான் உள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு முட்டைக்கு மிகச்சிறந்த மாற்றாகும். உங்களின் சுவையான எந்த உணவிலும் வேகவைத்த உருளைக்கிழங்கை முட்டைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது உணவிற்கு அதே வடிவத்தையும், சுவையையும் கொடுக்கும். 1/4 கப் உருளைக்கிழங்கு 1 முட்டைக்கு சமம்.

MOST READ:பேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா? யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்?

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

கேக் தயாரிக்கும்போது முட்டையின் வெள்ளைக் கருவிற்கு பதிலாக 1/4 கப் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். இதனால் கேக்கின் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

1 ஸ்பூன் ஆளி விதைகள் 1 முட்டையின் வெள்ளைக்கருவிற்கு சமமாகும். சுட்டு சாப்பிடும் எந்த உணவிலும் முட்டைக்குப் பதில் இதனை பயன்படுத்தலாம். இது முட்டையை போன்ற ஊட்டச்சத்தை வழங்குவதுடன் உங்கள் உணவிற்கு சிறிது முறுமுறுப்பான அமைப்பையும் வழங்குகிறது.

 சோள மாவு

சோள மாவு

GMO அல்லாத சோள மாவு வாங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இது ஒரு சிறந்த பிணைப்பு குணம் கொண்ட பொருளாகும். அனைத்து உணவையும் இது பிணைக்கும். 4 ஸ்பூன் சோள மாவுடன் 4 ஸ்பூன் தண்ணீரை கலப்பது இரண்டு முட்டைக்கு சமமாகும். இது அனைத்து வகையான பேக்கிங் ரெசிபிகளுக்கும் ஏற்றது.

சியா விதைகள்

சியா விதைகள்

தண்ணீரில் ஊறவைத்த 1 ஸ்பூன் சியா விதைகளை சேர்ப்பது 1 முட்டையை சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் சமமான அளவு ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.

MOST READ:சிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா?

வாழைப்பழம்

வாழைப்பழம்

பிசையப்பட்ட வாழைப்பழங்கள் எந்த உணவிலும் பிணைப்பையும், ஈரப்பதத்தையும் ஏற்படுத்தும். இதனால்தான் ஊட்டச்சத்து நிபுணர்கள் முட்டைக்குப் பதிலாக 1/4 கப் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Veg food items that can easily substitute eggs

Try these easily available egg substitutes that carry equivalent nutritional values and add similar texture to the dish.
Desktop Bottom Promotion