For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

நாம் உண்ணும் சில உணவுகள் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலிமையாக்கும் திறன் கொண்டவை. அந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், பல மோசமான நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

|

நம் உடலில் உள்ள இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் போன்றே கணையத்தின் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாதது. கணையமானது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். இது வயிற்றிற்கு வரும் அமில உணவுகளை ஒழுங்குபடுத்துவதோடு, நடுநிலையாக்குகிறது. மேலும் இது கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் லிப்பிட்டுக்களை ஜீரணிக்க உதவுகிறது. கணையத்தில் இரண்டு முக்கியமான செயல்பாடு என்றால், ஒன்று செரிமானத்திற்கு உதவும் நொதிகளை உற்பத்தி செய்வது. மற்றொன்று இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனன்களை அனுப்புவது. எனவே தான் கணையத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.

Things To Make The Pancreas Strong In Tamil

கணையத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது பல தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், ஹைப்பர் கிளைசீமியா, கணைய புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கும். நாம் உண்ணும் சில உணவுகள் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலிமையாக்கும் திறன் கொண்டவை. அந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், பல மோசமான நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம் என்று ஆய்வுகளும் கூறுகின்றன. இப்போது கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதை அனைவரும் அறிவோம். இது கணையத்தில் எரிச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயைத் தடுக்கிறது.

பூண்டு

பூண்டு

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆய்வு ஒன்றின் படி, பூண்டு ஒரு நேச்சுரல் ஆன்டி-பயாடிக். இதை சத்து நிறைந்த பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது அதன் நன்மை பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த பூண்டை தேன், வெங்காயம், வெந்தயம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. குறிப்பாக இந்த உணவுக் கலவைகள் கணையத்திற்கு மட்டுமின்றி, உடலின் பிற உள்ளுறுப்புக்களின் திசுக்களை சரிசெய்து, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்ற கணையத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இரும்புச்சத்து அழற்சியைத் தடுக்க உதவுகிறது. பி வைட்டமின்கள் கணையத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் பசலைக்கீரையில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், கணைய புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கின்றன.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் கேல் பிற குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. எனவே இந்த காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் கணையத்தை ஃபிட்டாகவும், நோயின்றியும் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த காய்கறிகளில் உள்ள ப்ளேவோனாய்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை வலுப்படுத்த உதவுகிறது.

சிவப்பு திராட்சைகள்

சிவப்பு திராட்சைகள்

சிவப்பு திராட்சைகளில் ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக அறியப்படுகிறது. இது கணையத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, கணைய புற்றுநோய் செல்களை அழிக்கிறது. எனவே தான் தினமும் ஒரு கையளவு சிவப்பு திராட்சையை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதன் மூலம் கணைய புற்றுநோயின் அபாயம் 50% வரை குறையும். மேலும் இது இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது.

உலர்ந்த கற்பூரவள்ளி

உலர்ந்த கற்பூரவள்ளி

கற்பூரவள்ளியில் பீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்துப் பொருளாக உள்ளது. அதேப் போல் ஓமம் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஹைப்பர் கிளைசெமிக் பொருள் மற்றும் இது கணையத்திற்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Make The Pancreas Strong In Tamil

Here are some foods that make the pancreas strong. Read on to know more...
Story first published: Tuesday, August 9, 2022, 19:16 [IST]
Desktop Bottom Promotion