For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் தெரியுமா?

நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகள் நம் சிறுநீரகங்களை நேரடியாக சேதப்படுத்துகின்றன. இங்கு சிறுநீரகங்களை நேரடியாக சேதப்படுத்தும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற கெமிக்கல்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்குகின்றன மற்றும் எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன.

Things That Can Damage Your Kidneys Directly

இப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் சில நேரங்களில் தவறான உணவுப் பழக்கங்கள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்கூறுகள் போன்றவற்றால் மோசமாக பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் தான் சிறுநீரக கற்கள், சிறுநீரக புற்றுநோய் மற்றும் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கின்றன. இன்னும் சில நேரங்களில் இப்பிரச்சனை அதிகரிக்கும் போது சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். ஆகவே சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகள் நம் சிறுநீரகங்களை நேரடியாக சேதப்படுத்துகின்றன. இங்கு சிறுநீரகங்களை நேரடியாக சேதப்படுத்தும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு என்ன?

உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியைச் செய்கிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே அதை கண்டறிந்தால், அவர்கள் தங்கள் உணவில் உடனடி மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் சிலருக்கு இருக்கும் சிறுநீரக பிரச்சனையானது முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு, அதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். இத்தகையவர்கள் உணவில் சிறிதும் அலட்சியம் காட்டக்கூடாது. இல்லாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.

சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்

சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்

* உடல் வீக்கம்

* சரும அரிப்பு

* சிறுநீர் கழிப்பதில் சிரமம்

* எரிச்சல்

* குளிர்ச்சி உணர்வு

* பசியின்மை

இப்போது சிறுநீரகங்களை நேரடியாக சேதப்படுத்தும் உணவுகளைக் காண்போம்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதுவும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுவதோடு, மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக ஆல்கஹால் சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, பிற உறுப்புக்களிலும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.

காபி

காபி

காபியில் அதிகளவு காப்ஃபைன் உள்ளது. ஆய்வு ஒன்றில், அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோயில் மோசமான விளைவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். எனவே காபியை அதிகமாக குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

உப்பு

உப்பு

உப்பில் சோடியம் அதிகம் உள்ளது. இது பொட்டாசியத்துடன் சேர்த்து உடலில் உள்ள திரவத்தைப் பராமரிக்கிறது. ஆனால் உணவில் அதிகளவு உப்பை சேர்த்து உட்கொண்டால், அது திரவத்தின் அளவை அதிகரித்து, சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. இப்படி சிறுநீரகங்களில் தொடர்ச்சியாக அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படும் போது, அது சேதமடைகிறது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் புரோட்டீன் அதிகளவு உள்ளது. இந்த புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இதன் வளர்சிதை மாற்ற செயல்முறை மிகவும் கடினமானது என்பதால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. புரோட்டீன் அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

செயற்கை சுவையூட்டி

செயற்கை சுவையூட்டி

தற்போது கடைகளில் விற்கப்படும் இனிப்புகள், குக்கீஸ் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த செயற்கை சுவையூட்டிகள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் சர்க்கரை நோயாளிகள் தான் சிறுநீரகம் தொடர்பான நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இம்மாதிரியான உணவுகளை இவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Can Damage Your Kidneys Directly

Here are some things that can damage your kidneys directly. Read on to know...
Story first published: Tuesday, December 14, 2021, 17:30 [IST]
Desktop Bottom Promotion