For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா? இந்த அளவைத் தாண்டுனா ஆபத்துதான்...!

பூமியின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாக முட்டை உள்ளது. ஒவ்வொரு முட்டையிலும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

|

பூமியின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாக முட்டை உள்ளது. ஒவ்வொரு முட்டையிலும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது புரதத்தின் முழுமையான மூலமாகும், இதில் வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இவை ஒன்றாக நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

The Number of Eggs You Can Have In a Day

முட்டையில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு இருப்பதால் ஒரு நாளில் அதிக முட்டைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை. இதுதவிர முட்டைகள் பல வயிறு தொடர்பான பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான முட்டை சாப்பிடுவது எப்போது ஆபத்துதான். இந்த பதிவில் ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடுவது உங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மற்றும் கொழுப்பின் அளவு

முட்டை மற்றும் கொழுப்பின் அளவு

ஒரே நாளில் அதிக முட்டைகளை உட்கொள்வது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் தான் இது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 200 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது மற்றும் அதன் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 300 மி.கி.க்கு மேல் இல்லை. ஆனால் சமீபத்திய ஆய்வுகள், உடலில் மொத்த மற்றும் மோசமான கொழுப்பின் அளவுகளில் உணவு கொழுப்பு சிறிதளவு செல்வாக்கு செலுத்துவதை உறுதிப்படுத்தியது. உண்மையில், இது எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்தும் உணவு நிறைவுற்ற கொழுப்புகளாகும்.

எத்தனை முட்டை சாப்பிடுவது ஆபத்தானது?

எத்தனை முட்டை சாப்பிடுவது ஆபத்தானது?

ஒரு நாளில் எத்தனை முட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதைப் பற்றி நாம் பேசும்போது குறிப்பிட்ட பதில் இல்லை. இது நபருக்கு நபர் வேறுபடுகிறது மற்றும் இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தது. சமீபத்திய ஆய்வின்படி, ஒரு சராசரி ஆரோக்கியமான நபர் வாரத்திற்கு ஏழு முட்டைகள் வரை பாதுகாப்பாக உட்கொள்ளலாம். நீங்கள் எந்தவொரு உடல்நலப் பிரச்சினையினாலும் பாதிக்கப்படவில்லை அல்லது எந்தவிதமான பக்க விளைவுகளையும் காணவில்லை என்றால், ஒரு நாளில் மூன்று முட்டைகள் வரை எளிதாக உட்கொள்ளலாம்.

அதிகமான முட்டைகளை சாப்பிடலாமா?

அதிகமான முட்டைகளை சாப்பிடலாமா?

முட்டைகள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை, ஆனால் நீங்கள் விரும்பும் அளவுக்கு அவற்றை சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, ஒவ்வொரு வகையான உணவையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். எந்தவொரு உணவையும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இது முட்டைகளுக்கும் பொருந்தும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ஒரு நாளில் அதிக முட்டைகளை உட்கொள்வது, குறிப்பாக கோடைகாலத்தில் சாப்பிடுவது உடலில் வெப்பத்தை உருவாக்கக்கூடும், இது குடல் இயக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.இதுதவிர, இது வயிற்றுப்போக்குக்கு கூட வழிவகுக்கும், குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தும். எனவே உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

அலர்ஜி

அலர்ஜி

அதிகளவு முட்டை உட்கொள்ளலின் முக்கியமான பக்க விளைவு அலர்ஜியாகும். பல சந்தர்ப்பங்களில், முட்டையின் வெள்ளைக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் அல்புமின் புரதங்களுக்கு ஒவ்வாமை உள்ளது. இதனால் தடிப்புகள், சருமத்தின் வீக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, மூச்சுத்திணறல், இருமல், தும்மல், பிடிப்புகள் போன்றவை ஏற்படலாம். சிலசமயம் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை, வாய் மற்றும் காற்றுப்பாதைகள் வீக்கம், அத்துடன் திடீர் இரத்த அழுத்தம் வீழ்ச்சி உள்ளிட்ட தலைச்சுற்றல் மற்றும் நனவு இழப்பு உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளும் ஏற்படலாம்.

அதிகளவு புரோட்டின்

அதிகளவு புரோட்டின்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக புரத உணவை உட்கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முட்டையில் அதிகளவு புரதம் இருப்பதால் இது இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்ட சிறுநீரகங்களின் திறனை பல சேதப்படுத்தும். இது இரத்தத்தில் அம்மோனியா அதிக சுமைக்கு வழிவகுக்கும் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

எத்தனை சாப்பிடலாம்?

எத்தனை சாப்பிடலாம்?

ஒரு நபர் ஒரு நாளில் உண்ணக்கூடிய அதிகபட்ச முட்டைகளின் எண்ணிக்கையை இதுவரை எந்த ஆய்வும் ஆராய்ச்சியும் தெளிவாகக் கூற முடியவில்லை. எந்தவொரு முடிவுக்கும் வர இந்த பகுதியில் மேலும் ஆராய்ச்சி தேவை. எந்தவொரு உணவையும் மிதமாக சாப்பிட எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. அதிகப்படியான ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Number of Eggs You Can Have In a Day

Read to know how many eggs you can eat safely in a day.
Desktop Bottom Promotion