For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா?

வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் மிதமானது முதல் மோசமான பக்க விளைவுகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

|

வெள்ளரிக்காய் பிடிக்காது என்று கூறுபவர்கள் மிகவும் குறைவுதான். அதிக குளிரிச்சியைக் கொடுக்கும் வெள்ளிரிக்காய் நமது அன்றாட வாழ்வில் பல நன்மைகளை வழங்குகிறது. வெள்ளரிக்காய் உணவுகளில் இருந்து அழகுசாதன பொருட்கள் வரை பல வழிகளில் நமக்கு உதவுகிறது. எவ்வளவுதான் நன்மைகளை வழங்கினாலும் வெள்ளரிக்காயில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது.

Side Effects of Cucumber

வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் மிதமானது முதல் மோசமான பக்க விளைவுகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீர்ச்சத்து உடலுக்கு ஆரோக்யமானதுதான் ஆனால் நம் உடலில் அதிகளவு நீர் இருப்பது நம் உடலின் செயல்பாடுகளில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பதிவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை

வெள்ளரிக்காயில் குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற நச்சுகள் இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சிறிது கசப்பான சுவைக்கு இந்த நச்சுக்கள்தான் காரணம். இந்த நச்சுக்களை அதிகளவு எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே மிதமான அளவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் உறுதியாக இருக்கவும்.

அதிக நீர்ச்சத்து இழப்பு

அதிக நீர்ச்சத்து இழப்பு

வெள்ளரி விதைகள் கக்கூர்பிட்டின் மூலமாகும், இது உள்ளார்ந்த டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. டையூரிடிக் இயல்பு லேசானதாக இருந்தாலும், அதிகப்படியான உட்கொள்ளல் உங்களுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும். பெரிய அளவில் உட்கொள்ளும்போது, இந்த டையூரிடிக் பொருட்கள் உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி உங்கள் உடலின் எலெக்ட்ரோலைட்டுகளின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அதிகரிக்கும்போது உங்கள் உடலில் நீர்சத்து முழுவதுமாக இருக்காது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். நமது உடலை பல நோய்களில் இருந்து ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்படும் இது அளவை தாண்டும் போது ஆபத்தை ஏற்படுத்தும் ஊட்டச்சத்தாக மாறுகிறது. அதிகளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும்போது அது அதன் இயல்பு நிலையில் இருந்து மாறி எதிராக செயல்படத் தொடங்குகிறது. இதனால் நமது உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக புற்றுநோய், முகப்பருக்கள், முன்கூட்டியே வயதாகுதல் போன்ற ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

MOST READ: ஆற்று நீர் சுவையாக இருக்குறப்ப கடல் தண்ணீர் மட்டும் ஏன் உப்பா இருக்குனு கண்டுபிடிச்சாச்சு...!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

ஹைபர்கேமியா என்பது உடலில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் ஏற்படும் ஓர் நிலை ஆகும். இது ஆரம்பத்தில் வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாயுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நாளடைவில் இதன் நிலை மோசமாகி சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் சிறுநீரக அமைப்பை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

வெள்ளரிக்காயில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. அதிக மது அருந்தும் பழக்கம் இதை அதிகம் சாப்பிட தூண்டக்கூடும். அதிகளவு நீர் இருப்பது, இரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்களிலும், இதயத்திலும் அழுத்தம் ஏற்படும். இதனால் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தேவையற்ற சேதங்களை ஏற்படும். தண்ணீரின் அதிகப்படியான இருப்பு இரத்தத்தின் எலக்ட்ரோலைட் அளவிலும் ஏற்றத்தாழ்வை உருவாக்கக்கூடும், இது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கிறது. இது அடிக்கடி மூச்சுத்திணறல் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும்.

வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு

வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு

முன்னரே கூறியது போல வெள்ளரிக்காயில் கக்கூர்பிட்டாசின் எனப்படும் ஒரு மூலப்பொருள் உள்ளது. இது சிலருக்கு கடுமையான அஜீரணத்தை ஏற்படுத்தும், குறிப்பாக செரிமான மண்டலம் பலவீனமாகி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு ஆகியவற்றைத் தூண்டுகிறது. வெங்காயம், முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்றவையால் உங்களுக்கு வாயுக்கோளாறு ஏற்பட்டால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

MOST READ: உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...!

வாய் மற்றும் சரும ஒவ்வாமைகள்

வாய் மற்றும் சரும ஒவ்வாமைகள்

மனிதர்களுக்கு வெள்ளரிக்காயின் ஒவ்வாமை எதிர்விளைவுகள் குறித்து அமெரிக்கன் அகாடமி ஆஃப் அலர்ஜி ஆஸ்துமா மற்றும் இம்யூனாலஜி நடத்திய ஆய்வில், ராக்வீட் மகரந்தம், முலாம்பழம்கள், கெமோமில் தேநீர், வாழைப்பழங்கள் மற்றும் சூரியகாந்தி விதைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பச்சை நிற காய்கறியை உட்கொண்ட பிறகு ஒவ்வாமையை பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

சைனசிடிஸை ஏற்படுத்தக்கூடும்

சைனசிடிஸை ஏற்படுத்தக்கூடும்

உங்களுக்கு சைனசிடிஸ் அல்லது சுவாசக் கோளாறுகள் இருந்தால், வெள்ளரிக்காய் சாப்பிடுவதிலிருந்து விலகி இருப்பது நல்லது. இந்த காய்கறிகளின் குளிரூட்டும் விளைவுகள் இத்தகைய நிலைமைகளை மோசமாக்குகின்றன, இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

கர்ப்ப காலத்தில் வெள்ளரிக்காய்

கர்ப்ப காலத்தில் வெள்ளரிக்காய்

கர்ப்ப காலத்தில் வெள்ளரிக்காய் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வெள்ளரிகள் அதிகமாக உட்கொண்டால் உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காய்கறிகளின் டையூரிடிக் தன்மை அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தூண்டும், இதனால் உங்களுக்கு எரிச்சலும், சங்கடமும் ஏற்படும்.

வெள்ளரிகள் நார்ச்சத்து அதிகமுள்ள ஒன்றாகும், எனவே இதனை அதிகமாக சாப்பிடுவது உங்களை வீக்கமடையச் செய்யலாம்.

MOST READ: ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா?

பக்க விளைவுகளை எப்படி தவிர்ப்பது?

பக்க விளைவுகளை எப்படி தவிர்ப்பது?

வெள்ளரிக்காயை ஓடும் நீரின் கீழ் நன்கு கழுவ வேண்டும். வெள்ளரிக்காயின் நச்சுத்தன்மையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதை உறுதி செய்யவும். பச்சை வெள்ளரி சாப்பிடுவது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினால் அதனை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Side Effects of Cucumber

Here is the list of surprising side effects of cucumber
Desktop Bottom Promotion