For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் இத தினமும் ஒன்னு சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரிக்குமாம்... அதென்ன?

வைட்டமின் சி உணவுகள் என்றதும் நினைவிற்கு வருவது எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை தான். ஆனால் இவற்றை விட ஏராளமான வைட்டமின் சியைக் கொண்ட ஓர் சூப்பர்ஃபுட் தான் நெல்லிக்காய்.

|

குளிர்காலம் நன்கு குளுகுளுவென்று இருந்தாலும், இந்த காலத்தில் தான் வறண்ட சருமம், சளி, இருமல் மற்றும் பிற பருவகால நோய்கள் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால் தான் மற்ற பருவ காலங்களைக் காட்டிலும் குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக குளிர்காலத்தில் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள். சரி, குளிர்காலத்தில் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

Reasons Why You Must Eat Amla During Winter In Tamil

இந்த பருவத்தில் ஏராளமான காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. வைட்டமின் சி உணவுகள் என்றதும் நினைவிற்கு வருவது எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை தான். ஆனால் இவற்றை விட ஏராளமான வைட்டமின் சியைக் கொண்ட ஓர் சூப்பர்ஃபுட் தான் நெல்லிக்காய். சொல்லப்போனால், இது பழங்காலத்தில் இருந்தே இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நெல்லிக்காயை குளிர்காலத்தில் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, நோயின்றி உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போது தினமும் ஒரு நெல்லிக்காயை குளிர்காலத்தில் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது உடலினுள் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது தவிர பருவகால சளியை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம் மேம்படும்

சரும ஆரோக்கியம் மேம்படும்

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் இரத்தத்தை சுத்திகரித்து, கறை இல்லாத மற்றும் ஊட்டமிக்க சருமத்தைப் பெற உதவுகிறது. மேலும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், சரும வறட்சியால் ஏற்படும் முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தை அழகாகவும் இளமையாகவும் வெளிக்காட்டும். எனவே நீங்கள் இளமையாக காட்சியளிக்க நினைத்தால், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

எடை இழப்பை ஊக்குவிக்கும்

எடை இழப்பை ஊக்குவிக்கும்

குளிர்காலத்தில் நல்ல சுவையான மொறுமொறுப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகரிப்பதால், எடை வேகமாக அதிகரிக்கும். ஆனால் நெல்லிக்காயை தினமும் குளிர்காலத்தில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவி புரிந்து, எடை இழப்பையும் ஊக்குவிக்கும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

குளிர்காலத்தில் பலர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை அஜீரண கோளாறு. ஆல் குளிர்காலத்தில் ஒரு நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், இப்பிரச்சனையே ஏற்படாது. மேலும் நெல்லிக்காய் செரிமானத்தையும், குடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவித்து, எவ்வித செரிமான பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவும்

சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவும்

நெல்லிக்காயில் குரோமியம் அதிகம் உள்ளது. இது இன்சுலினுக்கு பதிலளிக்க நம் உடலுக்கு உதவுகிறது. ஆகவே தான் சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிகவும் நல்லதாக கூறப்படுகிறது. இருப்பினும், சர்க்கரை நோய் மருந்துக்கு மாற்றாக இந்த நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Must Eat Amla During Winter In Tamil

Here are some reasons why you must eat amla during winter. Read on...
Desktop Bottom Promotion