For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலும்புகளை வலுப்படுத்துவதிலிருது புற்றுநோயைத் தடுப்பது வரை அனைத்திற்கும் இந்த ஒற்றை பழம் போதுமாம்...!

இந்த கோடைகாலத்தில் நீங்கள் தவற விடக்கூடாது ஒரு பழம் சப்போட்டா ஆகும். நம் உடலுக்கு அத்தியாவசியத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவற்றின் ஆதாரம் சப்போட்டா ஆக

|

பருவகால பழங்களை சாப்பிட கோடை காலம் சிறந்த நேரமாகும், ஏனெனில் அவை உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் குடலை நிதானமாகவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன. இந்த கோடைகாலத்தில் நாம் தவற விடக்கூடாது ஒரு பழம் சப்போட்டா ஆகும்.

Reasons to Add Chikoo to Your Summer Diet

நம் உடலுக்கு அத்தியாவசியத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவற்றின் ஆதாரம் சப்போட்டா ஆகும். மேலும், இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவற்றில் நிறைந்துள்ளது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய இந்த பருவகால பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

நிபுணர்களின் கூற்றுப்படி சப்போட்டா பழத்தில் உள்ள பொட்டாசியம் ஏராளமாக இருப்பது சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

இது பாலிபினாலைக் கொண்டுள்ளது, இது குடலில் அமில சுரப்பை நடுநிலையாக்குகிறது மற்றும் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள்... உங்க குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க...!

எலும்புகளை வலுப்படுத்தும்

எலும்புகளை வலுப்படுத்தும்

சப்போட்டாவில் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் வளமான மூலமாகும். தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. அதிகளவு துத்தநாகம் உள்ளடக்கம் எலும்பு, தசை மற்றும் திசு வலிமையை ஊக்குவிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை தடுக்கிறது

புற்றுநோயை தடுக்கிறது

வைட்டமின் ஏ மற்றும் பி இருப்பது, சளி புறணியை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது மற்றும் நுரையீரல் மற்றும் வாய்வழி புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

உடனடி ஆற்றல்

உடனடி ஆற்றல்

பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும் சப்போட்டாவை, தினமும் காலையில் சாப்பிடுவது உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. வொர்க்அவுட்டின் போது சப்போட்டாவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, இது இயற்கையான ஆற்றலின் மூலம் உடலை உடனடியாக நிரப்புகிறது.

MOST READ: ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா?

ஒளிரும் சருமம்

ஒளிரும் சருமம்

வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் இருப்பு சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் தோல் செல்களை புத்துயிர் பெற வைக்கிறது. இதில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக உள்ளன, இது உங்கள் சருமத்தை சுருக்கமில்லாமல், மெதுவாக வயதானதாக மாற்றுவதோடு இயற்கையான பளபளப்பையும் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons to Add Chikoo to Your Summer Diet

Check out the reasons to add chiku to your summer diet.
Story first published: Wednesday, May 12, 2021, 11:34 [IST]
Desktop Bottom Promotion