For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சினை உள்ளவர்கள் தெரியாமகூட கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்... இல்லனா ஆபத்துதான்...!

கொய்யா நம்பமுடியாத சுவையான மற்றும் சத்தான வெப்பமண்டல பழமாகும். குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த, இது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமே இல்லை.

|

கொய்யா நம்பமுடியாத சுவையான மற்றும் சத்தான வெப்பமண்டல பழமாகும். குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த, இது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பழத்தை பல வழிகளில் எடுத்துக்கொள்ளலாம், பச்சையாக சாப்பிடலாம், காரமான சட்னியாகசமைக்கலாம், இனிப்பு ஜாம் செய்யலாம் அல்லது சமைக்கலாம்.

People Who Should Be Careful About Eating Guava

கொய்யப்பழம் மட்டுமல்ல, கொய்யா இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யா இலை சாற்றை உணவில் சேர்ப்பது உங்கள் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பழத்தில் சில கலவைகள் உள்ளன, இது அனைவருக்கும் நல்லது என்று கருதப்படுவதில்லை, குறிப்பாக குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொய்யாவின் ஊட்டச்சத்து

கொய்யாவின் ஊட்டச்சத்து

கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. 1 கொய்யாவில் வெறும் 112 கலோரிகளும் 23 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. நார்ச்சத்து கிட்டத்தட்ட 9 கிராம் உள்ளது மற்றும் கொய்யாவில் மாவுச்சத்து இல்லை. 1 கப் நறுக்கிய கொய்யாவில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் 1.6 கிராம், ஆனால் அதில் உள்ள புரதத்தின் அளவு 4 கிராமாகும்.

வீக்கத்தால் அவதிப்படுபவர்கள்

வீக்கத்தால் அவதிப்படுபவர்கள்

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பிரக்டோஸ் நிறைந்துள்ளது. இரண்டில் ஏதேனும் ஒன்று அதிகரிக்கும்போது உங்களுக்கு வீக்கம் ஏற்படலாம். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், நம் உடலில் அதிக வைட்டமின் சி உறிஞ்சப்படுவது கடினமாக உள்ளது, எனவே அதிக சுமை அடிக்கடி வீக்கத்தை தூண்டுகிறது. சுமார் 40 சதவீத மக்கள் பிரக்டோஸ் மாலாப்சார்ப்ஷன் என்ற நிலையில் பாதிக்கப்படுகின்றனர். இதில், இயற்கையான சர்க்கரை உடலால் உறிஞ்சப்படுவதில்லை, மாறாக அது நம் வயிற்றில் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. கொய்யா சாப்பிட்டதும் உடனடியாக தூங்குவதும் கூட வீக்கத்தை ஏற்படுத்தும்.

MOST READ: உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க?

குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலை எளிதாக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். ஆனால் கொய்யாவை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பைக் குழப்பலாம், குறிப்பாக நீங்கள் எரிச்சல் கொண்ட குடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால். இது பிரக்டோஸ் மாலாப்சார்ப்ஷன் காரணமாகவும் ஏற்படுகிறது. எனவே, வரையறுக்கப்பட்ட வழியில் சாப்பிடுவது முக்கியம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

குறைந்த கிளைசெமிக் குறியீட்டால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருப்பமான பழங்களில் கொய்யாவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 100 கிராம் நறுக்கிய கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். அளவோடு சாப்பிடுவது சிறந்த தேர்வாகும்.

பாதுகாப்பான அளவு மற்றும் சரியான நேரம்

பாதுகாப்பான அளவு மற்றும் சரியான நேரம்

ஒரு நாளைக்கு ஒரு கொய்யா சாப்பிடுவது பாதுகாப்பானது. அதற்கு மேல் எடுத்துக்கொள்வது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் உடலுக்குத் தேவையான எரிபொருளை நிரப்புவதற்கு இரண்டு உணவுகளுக்கு இடையில் அல்லது பயிற்சிக்கு முன்னும் பின்னும் நீங்கள் பழம் சாப்பிடலாம். இரவில் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும்.

MOST READ: எலும்பு புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது? அதன் ஆபத்தான அறிகுறிகள் என்னனென்ன தெரியுமா?

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாமா?

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாமா?

கொய்யா இலை சாற்றின் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்து வரையறுக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. எந்த முடிவுக்கு வர இன்னும் ஆராய்ச்சி தேவை. உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People Who Should Be Careful About Eating Guava

People with these problems should be careful about eating guava.
Story first published: Thursday, August 5, 2021, 17:09 [IST]
Desktop Bottom Promotion