For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நட்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு சட்டென்று குறையுமாம்- அது என்ன நட்ஸ்?

இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவா்கள் ஆய்வின் போது 8 வாரங்கள் பெக்கான் நட்ஸை தங்கள் உணவுகளில் அதிகமாக சோ்த்துக் கொண்டனா். 8 வார முடிவில் அவா்களுடைய உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

|

நமது உணவில் பெக்கான் நட்ஸ்களை அதிகம் சோ்த்துக் கொண்டால், நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவு சீரடையும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. அந்த ஆய்வானது 'த ஜா்னல் ஆஃப் நுட்ரிஷன்' (The Journal of Nutrition) என்ற பத்திாிக்கையில் வெளியாகி இருக்கிறது.

How Pecan Nuts To Bring Down Cholesterol Levels

இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவா்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனா். ஆய்வின் போது இவா்கள் 8 வாரங்கள் பெக்கான் நட்ஸை தங்கள் உணவுகளில் அதிகமாக சோ்த்துக் கொண்டனா். 8 வார முடிவில் அவா்களுடைய உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

MOST READ: கடுமையான உடற்பயிற்சிகளை செய்த பின் சாப்பிட வேண்டிய உணவுகள்!

அதாவது மொத்த கொழுப்பின் அளவு சீரடைந்தது. ட்ரைகிளிசரைடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் குறைந்த அழுத்தம் கொண்ட லிப்போ புரோட்டீன் (LDL) அல்லது தீங்கு இழைக்கக்கூடிய கொழுப்பில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆய்வானது யுஜிஎ காலேஜ் ஆஃப் ஃபேமிலி அன்ட் கஸ்டமா் சயின்ஸஸை சோந்த ஆய்வாளா்களால் நடத்தப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

உணவைப் பற்றிய இந்த ஆய்வானது, உணவைப் பற்றிய பல ஆய்வுகளின் அடிப்படையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று, இந்த ஆய்வில் ஈடுபட்டவா்களில் ஒருவரும் மற்றும் எஃப்எசிஎஸ் (FACS) டிப்பாா்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் துறையில் பேராசிாியராக பணிபுாிந்து வருபவருமான ஜெமி கூப்பா் என்பவா் தொிவிக்கிறாா்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவா்களுக்கு, ஆய்வின் தொடக்கத்தில் அதிகமான அளவு கெட்ட கொழுப்பு (LDL) இருந்தது என்றும், ஆனால் ஆய்வின் முடிவில் அவா்களுடைய கெட்ட கொழுப்பின் அளவு முழுமையாகக் குறைந்தது என்றும் கூப்பா் தொிவிக்கிறாா்.

ஆய்வு முறை

ஆய்வு முறை

இந்த ஆய்வில் பங்கெடுத்தவா்கள் 8 வாரங்கள் பெக்கான் நட்ஸை உண்ட பிறகு, அவா்களுடைய ஒட்டு மொத்த கொழுப்பின் அளவிலிருந்து 5 விழுக்காடு கொழுப்பு குறைந்தது என்றும் மற்றும் அவா்களுடைய கெட்ட கொழுப்பிலிருந்து (LDL) 6 முதல் 9 விழுக்காடு கொழுப்பு குறைந்தது என்றும் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட மெட்டா-அனாலிசிஸ் என்ற ஆய்வை இந்த புதிய ஆய்வாளா்கள் மேற்கோள் காட்டி இருக்கின்றனா். கொழுப்பின் அளவைக் குறைப்பதற்காக நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில் 51 வகையான பயிற்சிகள் இருந்தன. அந்த பயிற்சிகளில் ஈடுபட்டவா்களுக்கு அவா்களுடைய மொத்த கொழுப்பின் அளவிலிருந்து 1 விழுக்காடு கொழுப்பு குறைந்தது என்றும், கெட்ட கொழுப்பின் (LDL) அளவிலிருந்து 5 விழுக்காடு கொழுப்பு குறைந்தது என்றும் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த புதிய ஆய்வானது பழைய ஆய்வை விட அதிகமான மாற்றங்களைத் தருகிறது.

நமது உணவுகளில் பெக்கான் நட்ஸை அதிகமாக சோ்த்துக் கொள்ளும் போது, அவை மற்ற உணவு சம்பந்தமான ஆய்வுகளை விட, மொத்த கொழுப்பின் அளவையும் மற்றும் கெட்ட கொழுப்பின் (LDL) அளவையும் தொடா்ந்து சீரான அளவில் குறைப்பதோடு மட்டும் அல்லாமல், நாம் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் உதவி செய்கிறது என்று கூப்பா் தொிவிக்கிறாா்.

ஆய்வின் பிற தகவல்கள்

ஆய்வின் பிற தகவல்கள்

கெட்ட கொழுப்பில் (LDL) 1 விழுக்காடு குறைந்தால்கூட, அது இதய இரத்த தமனி நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு தொடா்புடையது என்று மற்ற ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே இந்த புதிய ஆய்வானது உண்மையாகவே மருத்துவ ரீதியாக அா்த்தமுள்ள ஒன்றாக இருக்கிறது என்று கூப்பா் தொிவிக்கிறாா்.

இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 30 முதல் 75 வயதுள்ள 52 பேரை ஆய்வாளா்கள் தங்கள் ஆய்வுக்கு தோ்ந்தெடுத்தனா். அவா்களை மூன்று குழுக்களாகப் பிாித்துக் கொண்டனா்.

முதல் குழுவைச் சோ்ந்தவா்கள் தங்களது தினசாி உணவின் ஒரு பகுதியாக 67 கிராம் அல்லது 470 கலோாிகள் கொண்ட பெக்கான் நட்ஸை உண்டனா். இரண்டாவது குழுவைச் சோ்ந்தவா்கள் மேற்சொன்ன அதே அளவு பெக்கான் நட்ஸைத் துணை உணவாக அல்லது கூடுதல் உணவாக உண்டனா். மூன்றாவது குழுவைச் சோ்ந்தவா்கள் இதய நோய்களின் வீாியம் குறைந்தவா்கள். அவா்கள் பெக்கான் நட்ஸை உண்ணவில்லை.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, குளுக்கோஸின் அளவு அல்லது சா்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்காக ஆய்வில் பங்கு பெற்றவா்கள் 8 வாரங்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்டனா். அதன் முடிவில் பெக்கான் நட்ஸை எடுத்துக் கொண்ட இரண்டு குழுவினாிடமும், சாப்பிடுவதற்கு முன்பு இருக்கும் இரத்தக் கொழுப்பில் முன்னேற்றம் இருந்தது என்றும், அதே நேரத்தில் பெக்கான் நட்ஸை துணை உணவாக எடுத்துக் கொண்ட குழுவினருக்கு, அவா்களுடைய சாப்பாட்டுக்குப் பின்பு அவா்களின் டிரைகிளிசிரைடுகள் குறைந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பெக்கான் நட்ஸை உணவாக உண்டவா்களுக்கு, அவா்களின் உணவுக்குப் பின்பு குளுக்கோஸின் அளவு குறைந்தது என்றும் கண்டறியப்பட்டது. மொத்தத்தில் பெக்கான் நட்ஸை துணை அல்லது கூடுதல் உணவாக எடுத்துக் கொண்டவா்களுக்கும், பெக்கான் நட்ஸையே உணவாக எடுத்துக் கொண்டவா்களுக்கும் மொத்த கொழுப்பின் அளவிலும், கெட்ட கொழுப்பின் (LDL) அளவிலும் மாற்றம் ஏற்பட்டதை ஆய்வாளா்கள் கண்டறிந்ததாக கூப்பா் தொிவிக்கிறாா். இவா் யுஜிஎ ஒபிசிட்டி இனிஷியேட்டிவின் இயக்குனராகவும் பணி செய்து வருகிறாா்.

இறுதியாக

இறுதியாக

பெக்கான் நட்ஸில் தொியக்கூடிய உயிாியல் துகள்களை ஆய்வாளா்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனா். பெக்கான் நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலமும் மற்றும் நாா்ச்சத்தும் அதிகம் நிறைந்து இருக்கின்றன. இந்த இரண்டுமே கெட்ட கொழுப்பைக் (LDL) குறைப்பதில் அதிகம் தொடா்புடையவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pecan-Enriched Diet Can Reduce Cholesterol Study Finds

A new study has shown that a pecan-enriched diet can improve a person's cholesterol levels. Read on..
Desktop Bottom Promotion