For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!

உணவுகளுக்கும், பிசிஓஎஸ்-க்கும் இடையே நெருங்கிய தொடா்பு உண்டு. பிசிஓஎஸ்-ன் காரணமாக ஏற்படும் உடல் பருமன் அதிகாிப்பை பராமாிக்கவும், இன்சுலின் சுரக்கும் அளவைக் கட்டுப்படுத்தவும், அதற்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டும்.

|

சினைப்பை நோய்க்குறி/பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic Ovary Syndrome) என்பது பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினை ஆகும். இதை பிசிஓஎஸ் (PCOS) என்று சுருக்கமாக கூறுவர். ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய கருமுட்டை வெளியேறுவது (ovulation) சீராக நடைபெறாமல் இருப்பதாலும், ஆண்ட்ரோஜன்களின் (ஆண் ஹாா்மோன்கள்) அளவு அதிகாிப்பதாலும், இந்த சினைப்பை நோய்க்குறி பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை ஏற்படுகிறது.

Keep Your Weight And Insulin In Check With This PCOS Friendly Diet

ஏறக்குறைய 5 முதல் 10 விழுக்காடு பெண்களுக்கு இந்த சினைப்பை நோய்க்குறி பிரச்சினை இருக்கிறது. இந்த நோய்க்குறி உள்ள பெண்களுக்கு உடல் எடை அதிகாித்தல் அல்லது உடல் குண்டாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பிரச்சினை உள்ளவா்களுக்கு மிக எளிதாக சா்க்கரை நோய் தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பெரும்பாலான பெண்களுக்கு சினைப்பை நோய்க்குறி இருக்கிறது. ஆனால் அவா்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பாிசோனையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறும் போதுதான் தமக்கு சினைப்பை நோய்க்குறி பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றனா். பெண்களுக்கு அவா்கள் கா்ப்பம் தாிக்கக்கூடிய காலமான 15 வயது முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சினைப்பை நோய்க்குறி பிரச்சினை ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

PCOS Friendly Diet to Keep Your Weight And Insulin In Check

Two primary ways that diet affects PCOS are weight management and insulin resistance. Insulin plays a significant role in PCOS, so managing insulin levels with a PCOS-friendly diet is one of the best steps to manage PCOS.
Desktop Bottom Promotion