Just In
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 4 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 9 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 10 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
இதுவரை நான் நடிக்காத கேரக்டர்.. அட்லி படம் குறித்து மெய்சிலிர்த்த ஷாருக்கான்!
- News
அடேங்கப்பா! அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்கும் பாஜக - மகா. காங்கிரஸ் தலைவர் புகார்
- Finance
FASTag-ல் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி பணத்தைத் திருட முடியுமா?
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
பழங்களில் மாம்பழத்தைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான சுவைகளில் இருக்கும். ஆனால் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். இந்த மாம்பழம் சாப்பிட ருசியாக இருப்பதோடு, இதில் பல சத்துக்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக மாம்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
மாம்பழ பிரியர்கள், அதை பல உணவுகளுடன் கலந்தும் சாப்பிடுவார்கள். ஆனால் மாம்பழத்துடன் சில பொருட்களை கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? இப்போது மாம்பழத்துடன் எந்த பொருட்களை கலந்து சாப்பிடக்கூடாது? அப்படி சாப்பிட்டால் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

மாம்பழம் மற்றும் குளிர் பானம்
கோடைக்காலத்தில் குளிர் பானங்களைக் குடிக்க அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் குளிர் பானங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுவும் குளிர் பானங்கள் மற்றும் மாம்பழங்கள் ஒரு மோசமான உணவுச் சேர்க்கையாகும். எக்காரணம் கொண்டும் குளிர் பானங்களை மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்பு சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி கோமாவிற்கு கூட கொண்டு சென்றுவிடும்.

மாம்பழம் மற்றும் தயிர்
தயிர் மற்றும் மாம்பழம் ஆகிய இரண்டுமே கோடைக்காலத்தில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களாகும். அதுவும் நீங்கள் மாம்பழ லஸ்ஸியை விரும்பி குடிப்பவராயின், அதை உடனே நிறுத்துங்கள். ஏனெனில் மாம்பழத்துடன் தயிரை சேர்த்து உட்கொண்டால், அது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மாம்பழம் மற்றும் பாகற்காய்
யாரும் மாம்பழத்தையும், பாகற்காயையும் ஒன்றாக சாப்பிடமாட்டார்கள். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகற்காய் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது குமட்டல், வாந்தி, சுவாசப் பிரச்சனைகள் போன்றவற்றால் அவதிப்பட வைக்கும்.

மாம்பழம் மற்றும் காரமான உணவுகள்
பலருக்கும் மதிய வேளையில் உணவை உண்ணும் போது மாம்பழம் சாப்பிட பிடிக்கும். ஆனால் இந்த பழக்கத்தை கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில் காரமான உணவுகளை உண்ணும் போது மாம்பழத்தை சாப்பிட்டால், அது முகப்பரு, பிம்பிள் மற்றும் பிற சரும நோய்களை ஏற்படுத்தும்.

தண்ணீர்
பலருக்கு எதை சாப்பிடும் போதும் இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் நல்லதல்ல. அதுவும் மாம்பழத்தை சாப்பிடும் போதும், சாப்பிட்ட பின்னரும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.