For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கே தெரியாமல் உங்களின் காம உணர்வைத் தூண்டுமாம் தெரியுமா?

|

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குணம் உள்ளது என்று நாம் அறிவோம். ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகளுக்குள் நம்முடைய பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் தன்மை உள்ளது என்பது பலரும் அறியாத ஒன்றாகும். அறிவியலின் படி, பாலியல் ஆசைகளைத் தூண்டும் உணவு என்று எதுவும் இல்லை. ஆனால் பண்டைய வரலாறு வேறு கதையைச் சொல்கிறது.

உணவுகள் பாலியல் ஆசையையும், ஆற்றலையும் தூண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உணவுகளில் பெரும்பாலானவை சிறந்த ஆற்றல் மூலங்களாகவும், காதல் மற்றும் பாலியல் உணர்வைத் தூண்டுவம் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதாகவும் உள்ளது. இந்த உணவுகளை இயற்கை வயகராக்கள் என்று கூட சொல்லலாம். இந்த பதிவில் எந்தெந்த உணவுகள் இயற்கை வயகரா வகையை சேர்ந்தவை என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சாக்லேட்

சாக்லேட்

காதல் பரிசாக சாக்லேட் கொடுக்கப்படுவதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது. சாக்லேட் சாப்பிடுவது பாலுணர்வைத் தூண்டுகிறது, இதற்கு காரணம் இது மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள்தான். சாக்லேட்டில் செரோடோனின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையைத் தருகிறது. இது உங்கள் துணையின் மீதான உங்களின் அன்பை அதிகரிக்கும். இதில் இருக்கும் காஃபைன் உங்களை உற்சாகமாகவும், விழிப்புடனும் வைத்திருக்கும். ஆனால் இது பாலியல் ஆசையைத் தூண்ட காரணம் இதிலிருக்கும் ஃபைனிலெதிலாமைன் ஆகும்.

அப்ரிகாட்

அப்ரிகாட்

பாலுணர்வைத் தூண்டும் பொருளாக அப்ரிகாட் ஆஸ்திரலிய பூர்வகுடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய மக்கள் ஏன் இந்த பழத்தை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார்கள் என்பது இன்றும் புரியாத ஒன்றாகும், ஆனால் இந்த கவர்ச்சியான, மென்மையான பழங்கள் பாலுணர்வை அதிகரிக்கும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது என்பது மட்டும் உறுதி. ஒரு அப்ரிகாட் ஒரு நாளைக்கு உங்களுக்குத் தேவையான பீட்டா கரோட்டினில் 50 % வழங்குகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது பெண்களின் கருவுறுத்தலுக்கான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

அவகேடா

அவகேடா

அவகேடா பாலுணர்வை அதிகரிக்க அதன் சுவை முக்கியமான காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி இதில் அதிகளவு இருக்கும் வைட்டமின் ஈ இளமை வீரியம் மற்றும் ஆற்றல் மட்டத்தை பலமடங்கு அதிகரிக்கிறது. உறவுக்கும் முன் ஒரு அவகேடாவை ஜூஸ் வடிவத்தில் எடுத்துக்கொள்வது உறவை சிறப்பானதாக மாற்றும்.

MOST READ:இந்த உணவுகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து உங்களை எளிதில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக்கும்...!

துளசி

துளசி

துளசி உணவின் சுவை மற்றும் வாசனையை மட்டும் அதிகரிக்காமல் இது மனித உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். துளசி ஒரு அற்புதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு பாலுணர்வைத் தூண்டுவதாக கூறப்படுகிறது. இனிப்புத் துளசியை உணவில் சேர்ப்பது உங்களுக்குள் காதல் உணர்வை அதிகரிக்கும்.

தேன்

தேன்

தேன் மகரந்தச் சேர்க்கை மூலம் தயாரிக்கப்படுகிறது மற்றும் இது இனப்பெருக்கத்தின் அடையாளமாகும். உண்மையில், 'ஹனிமூன்' என்ற வார்த்தையின் பெயர் மீட் என்பதிலிருந்து வந்தது, இது மகிழ்ச்சியான புதிய மணமகனுக்கும், மணமகளுக்கும் கொடுக்கப்படும் தேனிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மது பானமாகும். இது போரோனையும் கொண்டுள்ளது, இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இயற்கை ஆற்றல் ஊக்கத்தை வழங்குகிறது.

 பைன் நட்ஸ்

பைன் நட்ஸ்

ஆரோக்கியமான பாலியல் இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள துத்தநாகத்தை அதிகமாக்குவதால், பைன் கொட்டைகள் பாலுணர்வை தூண்டுவதாக கருதப்படுகின்றன. பைன் கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு சிறப்பான பாலியல் வாழ்க்கையை வழங்கும்.

MOST READ:உங்க ராசிப்படி எந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனா உங்க திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா?

முட்டை

முட்டை

புதிய வாழ்க்கையுடனான தொடர்பு காரணமாக, முட்டை கிட்டத்தட்ட ஒவ்வொரு பண்டைய தேசத்திலும் கருவுறுதலின் இறுதி அடையாளமாகக் கருதப்பட்டது. மிகவும் விசித்திரமான உணவுகளில் ஒன்றான முட்டை இன்னும் நவீன மரபுகளில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மத்திய ஐரோப்பாவில், விவசாயிகள் பயிர்களை மேம்படுத்துவதற்கான ஒரு சடங்காக தங்கள் கலப்பைகளில் முட்டைகளைத் தேய்ப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. பிரான்சில், மணப்பெண்கள் ஒரு பெரிய குடும்பத்தின் உத்தரவாதமாக தங்கள் வீட்டு வாசலில் ஒரு முட்டையை உடைத்தனர்.

 குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாய் உங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குடைமிளகாய் போன்ற உணவுகள் பாலியல் உணர்வை அதிகரிக்கும். பொதுவாகவே காரமான உணவுகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்களின் பாலியல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை என்பது அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் அதன் பாலுணர்வின் சக்தி ஆகியவற்றிற்காக அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஜலதோஷத்திலிருந்து பாதுகாக்க ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா, இலவங்கப்பட்டை மரத்தின் பட்டை உலகம் முழுவதும் இனிப்பு மற்றும் சுவையான உணவுகளிலும், நறுமண சிகிச்சை பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குள் "வெப்பத்தை" உற்பத்தி செய்வதற்கு பயனுள்ளதாகக் கருதப்படும் மசாலாப் பொருட்களில், இலவங்கப்பட்டை உடல் மற்றும் பாலியல்ரீதியான உணர்வை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.

MOST READ:கொடூரமாக கொல்லப்பட்ட உலகத்தின் முக்கியமான தலைவர்கள்... உலக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்...!

இளநீர்

இளநீர்

இளநீரில் சராசரி விளையாட்டு பானத்தை விட அதிக எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இளநீரில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும், இது உங்களின் பாலுணர்வைக் அதிகரிக்கும். இதிலிருக்கும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் pH அளவை சமப்படுத்துவதன் மூலம் ஆற்றலை அதிகரிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் பாலுணர்வையும் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

ஊட்டச்சத்து அடிப்படையில், வெள்ளரிகள் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட பாலியல் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இதில் இருக்கும் சிலிகா இளமையை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காய் உடலில் இருந்து நீரிழப்பைத் தடுக்கிறது.

MOST READ:22 வயதில் தன் உயிரை கொடுத்து தன் பயணிகளை காப்பாற்றிய இந்தியாவின் உண்மையான சிங்கப்பெண் யார் தெரியுமா?

பூண்டு

பூண்டு

பெரும்பாலான பாலுணர்வு உணவுகளைப் போலல்லாமல், பூண்டு என்பது காதலர்கள் இருவரும் அதன் மருத்துவ பண்புகளுக்காக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலுணர்வைக் கொண்ட உணவு என்பதைத் தாண்டி, சோம்பல் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணப்படுத்தப் பயன்படும் அற்புத உணவுகளில் பூண்டு ஒன்றாகும். பாலியல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் இது அசாதாரண சகிப்புத்தன்மையையும் கட்டுப்பாடற்ற ஆற்றலையும் ஊக்குவிக்கும். பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பூண்டு அளித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List of Natural Aphrodisiac Foods

Here is the list of natural aphrodisiac foods that act as Desi viagra.
Story first published: Monday, March 16, 2020, 12:35 [IST]