For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க ரொம்ப சோர்வா ஃபீல் பண்றீங்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

பொதுவாக மழைக்காலத்தில் நாம் அனைவருமே உடல் சோர்வுடன், மந்தமாக இருப்பதை உணர்வோம். ஆனால் இந்த உடல் சோர்வு மிகுதியாக இருந்தால், அது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

|

பொதுவாக மழைக்காலத்தில் நாம் அனைவருமே உடல் சோர்வுடன், மந்தமாக இருப்பதை உணர்வோம். ஆனால் இந்த உடல் சோர்வு மிகுதியாக இருந்தால், அது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது என்று அர்த்தம். ஒருவரது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் இருந்தால், அது இரத்த சோகை, தூக்கமின்மை, உடல் சோர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த பிரச்சனைகளை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் தீர்க்க முடியும். குறிப்பாக மழைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதற்கு பதிலாக, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதே நல்லது.

Iron-Rich Foods To Boost Energy During Monsoon

இரும்புச்சத்துள்ள உணவுகள் இரத்த சோகையை குணப்படுத்துவதோடு, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இரைப்பை குடல் செயல்பாடுகளுக்கு உதவி புரியும் மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்கும். கீழே மழைக்காலத்தில் மந்தமாக உணரும் மக்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சில இரும்புச்சத்துள்ள உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

MOST READ: ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் இன்று இதெல்லாம் செஞ்சா சனி பகவானின் பாசத்தை பெறலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

மழைக்காலத்தில் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் பசலைக்கீரையை மட்டுமின்றி, கேல், ப்ராக்கோலி போன்றவற்றையும் அன்றாட உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நீங்கள் எப்போது மந்தமாக, மிகுந்த உடல் சோர்வை உணர்கிறீர்களோ, அப்போது முந்திரி, உலர் ஆப்ரிகாட், பாதாம், வால்நட்ஸ், உலர் திராட்டை மற்றும் பேரிச்சம் பழம் போன்றவற்றை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள். ஏனென்றால் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் புரோட்டீன்கள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுவும் சோயா பீன்ஸ் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சோயா பீன்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் டோஃபு சாப்பிடுவது இன்னும் நல்லது மற்றும் சுவையானதும் கூட.

விதைகள்

விதைகள்

பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை மழைக்காலங்களில் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அதுவும் இதை ஸ்நாக்ஸ் ஆகவோ அல்லது சமைத்த உணவுகள் அல்லது சாலட்டுகளின் மீது தூவியோ சாப்பிடலாம். இதனால் அந்த உணவு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

சிக்கன்

சிக்கன்

தோல் நீக்கப்பட்ட சிக்கனில், குறிப்பாக சிக்கன் ஈரலில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஹீம் இரும்புச்சத்து உள்ளது. இந்த வகை இரும்புச்சத்து நமது உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. எனவே அடுத்த முறை சிக்கன் வாங்க சென்றால், சிக்கன் ஈரலை வாங்க மறக்காதீர்கள்.

மீன்

மீன்

மட்டி, நண்டு, டுனா மற்றும் மத்தி போன்றவை உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கக்கூடியவை. இருப்பினும், அனைத்து வகையான கடல் உணவுகளிலும் இரும்புச்சத்து வளமாக உள்ளதால், உங்களுக்கு கிடைக்கும் மீன்களை வாங்கியும் சாப்பிடலாம்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் என்பது வழக்கமான சாக்லேட்டை விட உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. டார்க் சாக்லேட்டில் குறைந்தது 55% கொக்கோ உள்ளது. இது தான் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளை வழங்குகிறது.

இன்னும் எதற்கான காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்துமே நாம் விரும்பி சாப்பிடும் சுவையான உணவுகள் தான். எனவே இன்று முதலே இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு, உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Iron-Rich Foods To Boost Energy During Monsoon

Iron helps cure anaemia, boosts immunity and elevates energy levels. So this rainy season, load up on some iron-rich foods and enjoy your days the healthier way!
Desktop Bottom Promotion