For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World AIDS Day 2022: எய்ட்ஸ் நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நாள் உயிர் வாழ முடியும் தெரியுமா?

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக எந்த ஒரு உணவும் இல்லை. இருப்பினும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது, அது எய்ட்ஸ் தொற்றின் போதும் நோயெதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.

|

World AIDS Day 2022: எய்ட்ஸ் என்பது எச்.ஐ.வி என்னும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸால் ஏற்படும் நாள்பட்ட நோயெதிர்ப்பு மண்டல நோயாகும். இது உலகிலேயே மிகவும் கொடிய ஆட்கொல்லி நோயாகும். எச்.ஐ.வி.க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும். இந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவிலேயே தென்னிந்தியாவில் தான், குறிப்பாக ஆந்திராவில் தான் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர். எச்.ஐ.வி-யானது தொற்று உள்ளோரின் இரத்தம், விந்து அல்லது யோனி திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த எச்.ஐ.வி/எய்ட்ஸிற்கு எந்த ஒரு பிரத்யேக சிகிச்சையும் இல்லை. ஆனால் மருந்துகளின் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

HIV/AIDS Diet Plan: Healthy Foods For People Living With HIV

எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட ஆரோக்கியான வாழ்க்கை முறை, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் நீண்ட காலம் வாழ முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக எந்த ஒரு உணவும் இல்லை. இருப்பினும் ஊட்டச்சத்தான உணவுகளை உண்ணும் போது, அது எய்ட்ஸ் தொற்றின் போதும் நோயெதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.

பொதுவாக எச்.ஐ.வி வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. ஆனால் எய்ட்ஸ் நோயாளிகள் எச்.ஐ.வி மருந்துகளுடன், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் ஆரோக்கியம் மோசமாவதை ஓரளவு தடுக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் நோக்கம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவது தான். ஆகவே உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பழங்கள் மற்றும் காய்கறிகள்

1. பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இவற்றில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் தங்கள் உணவுகளில் சேர்க்க வேண்டும். இதனால் மூலம் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.

2. புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்ணவும்

2. புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்ணவும்

உடலானது தசைகளை உருவாக்கவும், வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும் புரோட்டீனை பயன்படுத்துகிறது. எனவே ஆரோக்கியமான புரோட்டீனை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இந்த புரோட்டீன் தோல்நீக்கப்பட்ட மாட்டிறைச்சி, தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன், முட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் உள்ளன.

3. முழு தானியங்கள்

3. முழு தானியங்கள்

உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். எனவே கைக்குத்தல் அரிசி, முழு தானிய பிரட் போன்ற முழு தானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, பி வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, எச்.ஐ.வி-யின் சாத்தியமான பக்க விளைவானலிபோடிஸ்ட்ரோபி எனப்படும் கொழுப்புகள் படிவதற்கான வாய்ப்புகள் குறையும்.

4. உப்பு மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும்

4. உப்பு மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும்

உணவில் உப்பு மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் இவை இரண்டுமே வைரஸ்களுக்கு எதிராக எடுக்கும் மருந்துகளுக்கு இடையூறை ஏற்படுத்தி, இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே எய்ட்ஸ் நோயாளிகள் தினமும் உண்ணும் உணவுகளில் குறைவான உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை தவிர்ப்பது இன்னமும் நல்லது.

5. ஆரோக்கியமான கொழுப்புக்கள்

5. ஆரோக்கியமான கொழுப்புக்கள்

கொழுப்புக்கள் கெட்டதாக இருந்தாலும், ஆரோக்கியமான கொழுப்புக்களை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கொழுப்புக்களும் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. எனவே ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், மீன்கள், அவகேடோ, வெஜிடேபிள் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

6. நீர் அதிகம் அருந்தவும்

6. நீர் அதிகம் அருந்தவும்

தினமும் போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் போதுமான அளவு நீரை அருந்துவதில்லை. எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் திரவங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்லவும், உடலில் பயன்படுத்திய மருந்துகளை வெளியேற்றவும் உதவுகின்றன.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை தவிர, எய்ட்ஸ் நோயாளிகள் சுத்தத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். பழங்களை சாப்பிடும் முன்பு அவற்றையும் நன்கு கழுவ வேண்டும். இறைச்சி உணவுகளை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும். உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிய உணவுகளை நன்கு சூடேற்றிய பின்னரே சாப்பிட வேண்டும். பச்சை முட்டைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World AIDS Day 2022: HIV/AIDS Diet Plan: Healthy Foods For People Living With HIV

World AIDS Day 2022: HIV/AIDS Diet Plan: Here are some healthy foods for people living with HIV. Read on to know more...
Desktop Bottom Promotion