For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயத்தாள் சாப்பிடலாமா கூடாதா?... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்?

|

நாம் பெரும்பாலும் சமையலில் பெரிதும் பயன்படுத்தும் பொருள் இந்த சின்ன வெங்காயம் தான். இதன் அறிவியல் பெயர் அல்சியம் செபா வர். இந்த வெங்காயத்தில் பல வகைகள் காணப்படுகிறது. இனம் ஒன்றாக இருந்தாலும் தோற்றத்தை பொருத்து வேறுபடுகின்றன. வெங்காயம் பூண்டு குடும்பத்துடன் தொடர்புடையது. இது தங்க நிறத்தில் இருந்து ரோஜாப் பூ நிறம் வரைக்கும் கூட வேறுபடும்.

Shallots

இந்த வெங்காயம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. இதை சாலட் மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள் ஏராளம்

நன்மைகள் ஏராளம்

இதன் தனித்துவமான சுவை உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. குறிப்பாக பிரெஞ்சு மற்றும் தெற்கு ஆசியா மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்களால் இது நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது,டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இன்னும் நிறைய உடல் நல நன்மைகளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

MOST READ: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்? இதோ அந்த பட்டியல்...

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் வெங்காயத்தில் 72 கலோரிகள் ஆற்றல் உள்ளது

16.8 கிராம் கார்போஹைட்ரேட்

3.2 கிராம் நார்ச்சத்துகள்

7.87 கிராம் சர்க்கரை

79.8 கிராம் நீர்ச்சத்து

2.5 கிராம் புரோட்டீன்

37 மில்லி கிராம் கால்சியம்

1.2 மில்லி கிராம் இரும்புச் சத்து

21 மில்லி கிராம் மக்னீசியம்

60 மில்லி கிராம் பாஸ்பரஸ்

334 மில்லி கிராம் பொட்டாசியம்

12 மில்லி கிராம் சோடியம் உள்ளது.

இரத்த ஓட்டத்தை சீராக்குதல்

இரத்த ஓட்டத்தை சீராக்குதல்

வெங்காயத்தில் அதிகளவு இரும்புச் சத்து,காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் இது இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. உடல் ஆற்றலுக்கும், செல்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்

இந்த வெங்காயத்தில் அல்சின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் உருவாகும் என்சைம்னான ரிடெக்டேஸ் கல்லீரலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதால் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு குறையும் போது பக்கவாதம், ஆந்த்ரோக்ளிரோஸஸிஸ், கரோனரி இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

MOST READ: உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அல்சின் ஒரு வாஸோடைலேட்டர் மாதிரி செயல்படுகிறது. இது வெளிப்படுத்தும் நைட்ரிக் ஆக்ஸைடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பொட்டாசியம் இரத்தக் குழாய்களை ரிலாக்ஸ் ஆக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்துதல்

டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்துதல்

அல்லியம் மற்றும் அல்லில் டிஸல்பைடு, வெங்காயத்தில் காணப்படும் இரண்டு பைட்டோ கெமிக்கல் கலவைகள். இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்கள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த

வெங்காயத்தில் உள்ள காமா - அமினோபியூட்டிரிக் அமிலம் ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர் மாதிரி செயல்பட்டு மூளையை ரிலாக்ஸ் செய்கிறது. அதே மாதிரி இதிலுள்ள விட்டமின்கள், மினரல்கள் மற்றும் பைரிடாக்ஸின் போன்றவைகள் நரம்புகளை அமைதிப்படுத்த மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது.

எலும்பின் அடர்த்தி

எலும்பின் அடர்த்தி

வெங்காயத்தில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே அடிக்கடி நீங்கள் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் வெங்காயம் கூந்தலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது.

MOST READ: கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்

வெங்காய ரெசிபிகள்

வெங்காய ரெசிபிகள்

வெங்காயம், பச்சை பீன்ஸ் மற்றும் பாதாம் ரெசிபி

தேவையான பொருட்கள்

10-12 பச்சை பீன்ஸ்

1 பெரிய வெங்காயம், நறுக்கியது

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

உப்பு சுவைக்கேற்ப

மிளகு சுவைக்கேற்ப

3 டேபிள் ஸ்பூன் பார்சிலி நறுக்கியது

2 டேபிள் ஸ்பூன் உடைத்த பாதாம் பருப்புகள்

பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதாம் பருப்பு சேர்த்து பொன் மொறுவலாக வறுக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஊற்றி அதிக தீயில் உருக வைக்கவும்

இப்பொழுது அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பச்சை பீன்ஸை போட்டு தண்ணீர் விட்டு 3-4 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு அதை வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்

அதனுடன் நறுக்கிய பார்சிலி மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் சேருங்கள்

உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்

3-4 நிமிடங்கள் சூடு படுத்தவும்

இப்பொழுது வறுத்த பாதாம் பருப்புகளை அதன் மேல் தூவி அழகாக அலங்கரித்து சாப்பிடுங்கள். சுவையான ஆரோக்கியமான ரெசிபி ரெடி.

கேரட் இஞ்சி சூப் மற்றும் மொறுமொறுப்பான வெங்காயம், கோக்கனெட் க்ரீம்

கேரட் இஞ்சி சூப் மற்றும் மொறுமொறுப்பான வெங்காயம், கோக்கனெட் க்ரீம்

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் அவகேடா ஆயில்

1 மீடியம் வெங்காயம் நறுக்கியது

3 பூண்டு பற்கள், நறுக்கியது

3 டேபிள் ஸ்பூன் இஞ்சி

4 கேரட் தோலுரித்தது, நறுக்கியது

4 கப் வெஜிடபுள் ப்ரோத்

1 பிரியாணி இலை

1 டேபிள் ஸ்பூன் பட்டை

1 டேபிள் ஸ்பூன் உப்பு

பயன்படுத்தும் முறை

மிதமான சூட்டில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதில் வெங்காயத்தை சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும்

அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கிளறவும்

நறுக்கிய கேரட்டுகளை போட்டு 10 நிமிடங்கள் சமைக்கவும். நன்றாக கிளறவும்

அதில் ப்ரோத், உப்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்

நன்றாக கொதிக்க விட்டு தீயை குறைத்து 20-30 நிமிடங்கள் வரை சமைக்கவும்

இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு பிரியாணி இலையை எடுத்து விடுங்கள்

சூப்பை நன்றாக கலக்குங்கள்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவகேடா ஆயிலை சேருங்கள். அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

1-2 நிமிடங்கள் வதக்கி விட்டு தொடர்ந்து கிளறவும்

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை சூப்பில் சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். சுவையான வெங்காய சூப் ரெடி.

MOST READ: லீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா? கண்ட்ரோல் பண்ண முடியலயா? இத செய்ங்க போதும்...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இரத்தக் கசிவு உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது இரத்தம் கட்டுதலை தடுத்து அதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட செய்து விடும்

குறைந்த இரத்த சர்க்கரை கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது மேலும் இரத்த சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Fascinating Health Benefits Of Shallots, Nutrition And Vegan

aggregatum is considered a variety of onions, mainly because of the appearance and of the same species, Allium cepa. Shallots are related to garlic and vary in colour from golden brown to rose-red.
Story first published: Tuesday, August 20, 2019, 12:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more