For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?

|

கலாக்காய் என்ற இந்த காய் கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது அப்போசினேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் புதர் தாவரமாகும்.

Karonda

மலாயாவில் கெரெண்டா என்ற பெயரிலும், வங்காள திராட்சை வத்தல் அல்லது தென்னிந்தியாவில் கலாக்காய் என்றும், தாய்லாந்தில் நம்டெங், காரம்பா, கராண்டா, கராண்டா மற்றும் பிலிப்பைன்ஸில் பெருங்கிலா போன்ற வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒட்டுமொத்த தாவரம்

ஒட்டுமொத்த தாவரம்

இந்த கலாக்காய் மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் எல்லாம் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பார்ப்பதற்கு பெர்ரி வடிவில் சின்னதாக இருந்தாலும் இதன் பயன்பாடு ஏராளம். இதை நீங்கள் பழ வடிவிலோ, பொடி வடிவிலோ ஏன் மாத்திரை வடிவில் கூட மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம். பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதன் விதைகளை நீக்கி விட வேண்டும்.

பாதி காயாக இருக்கும் போது இது சாப்பிட சுவையாக இருக்கும். இதன் புளிப்பு மட்டும் அசிடிக் சுவையுடன் லைட்டாக உப்பை தொட்டு சாப்பிட்டால் போதும் நாக்கு சொட்டை போடும். நன்றாக பழுத்த பிறகு இனிப்பு சுவை உடையதாக இருக்கும். இந்தியாவில் இந்த கலாக்காயை நிறைய மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் இதன் நன்மைகள் பற்றியும் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

MOST READ: முழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பெர்ரியில்

0.2 மில்லி கிராம் - மாங்கனீஸ்

0.4 கிராம்- கரையக் கூடிய நார்ச்சத்துகள்

1.6 கிராம் - நார்ச்சத்துகள்

80.17 கிராம் - தண்ணீர்

10.33 மில்லி கிராம் - இரும்புச்சத்து

81.26 மில்லி கிராம் - பொட்டாசியம்

3.26 கிராம் - ஜிங்க்

1.92 மில்லி கிராம் - காப்பர்

51.27மில்லி கிராம் - விட்டமின் சி

உள்ளன.

உடல் நல நன்மைகள்

உடல் நல நன்மைகள்

இந்த தம்மா துண்டு கலாக்காய் ஆஸ்துமா நோயி லிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்துகிறது.

அடிவயிற்று வலி

இந்த காயில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. உலர வைத்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

சீரண சக்தியை மேம்படுத்துதல்

சீரண சக்தியை மேம்படுத்துதல்

இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்ற சத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. கரையக் கூடிய நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகப்படுத்தும் மேலும் பசியை ஏற்படுத்தும்.

காய்ச்சலை குறைத்தல்

இதில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் காய்ச்சலுக்கு எதிரான கிருமிகளை எதிர்த்து போரிடுகிறது. 10 மில்லி கிராம் அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் காய்ச்சல் தானாக குறைந்து விடும்.

MOST READ: கடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்? என்ன கூடாது?

மூளைத்திறன் ஆரோக்கியம்

மூளைத்திறன் ஆரோக்கியம்

மூளைத்திறன் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ட்ரைப்டோஃபோன் போன்றவை செரோடோனின் சுரப்பிற்கு உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மூளையின் திறனும் அதிகரிக்க்கிறது.

இதய தசைகளின் வலிமை

இதய தசைகளின் வலிமை

இந்த கலாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 15-20 மில்லி லிட்டர் ஜூஸ் குடித்து வந்தால் இதய தசைகளின் வலிமை அதிகரித்து விடும்.

அழற்சிக்கு மருந்து

அழற்சிக்கு மருந்து

இந்த கலாக்காயிற்கு இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட வலிமை உள்ளது.

இது போக அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. அதீத தாகம் மற்றும் பசியற்ற தன்மை போக்க இது உதவுகிறது. சரும நோய்கள், அரிப்பு, அல்சர் மற்றும் எபிலப்ஸி போன்ற நோய்களுக்கும் மருந்தாகிறது.

கலாக்காய் ஜூஸ் ரெசிபி

கலாக்காய் ஜூஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்

10 கலாக்காய் பழங்கள்

1 கப் தண்ணீர்

உப்பு மற்றும் சர்க்கரை தேவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

பழங்களை வெட்டி விதைகளை நீக்கி கொள்ளுங்கள்

இப்பொழுது இதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாற்றை வடிகட்டி கொள்ளுங்கள்.

அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள்.

MOST READ: வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

இந்த காயை அதிக அளவிலோ அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தாலோ பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் விரைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படும்.

அதிகளவு எடுத்துக் கொள்ளும் போதுமான அசிடிட்டி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.

பழுக்காத பழங்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

இரத்த சம்பந்தமான நோய்களை இது மிகவும் பெரிதாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Karonda (Carissa carandas), Nutrition And Recipe

Karonda, scientifically termed as Carissa carandas, is a flowering shrub belonging to the family Apocynaceae. Known by different names such as kerenda in Malaya, Bengal currant or Christ's thorn in South India, namdaeng in Thailand, caramba, caranda, caraunda and perunkila in the Philippines, the entire plant has medicinal values
Story first published: Saturday, August 10, 2019, 16:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more