For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டை இப்படி சாப்பிடுவது உங்களுக்கு மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்... கவனமா சாப்பிடுங்க...!

உலகின் மிகச்சிறந்த ஆரோக்கியமான பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் மசாலா பொருட்களில் பூண்டு ஒன்றாகும்.

|

உலகின் மிகச்சிறந்த ஆரோக்கியமான பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் மசாலா பொருட்களில் பூண்டு ஒன்றாகும். பூண்டு சுவையான ஒன்றாக மட்டுமில்லாமல் அளவில்லா ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பூண்டு பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Harmful Effects of Garlic That You Should Know in Tamil

இருப்பினும், பூண்டு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் பூண்டால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலைப் பாதிக்கலாம்

கல்லீரலைப் பாதிக்கலாம்

இரத்த சுத்திகரிப்பு, கொழுப்பு வளர்சிதை மாற்றம், புரத வளர்சிதை மாற்றம் மற்றும் நம் உடலில் இருந்து அம்மோனியாவை அகற்றுவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்வதால் கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். பல ஆய்வுகளின்படி, பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது பெரிய அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். பூண்டில் கந்தகம் போன்ற வாயு-உருவாக்கும் கலவைகள் உள்ளன, இது வயிற்றுப்போக்கைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல்

வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல்

பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பூண்டில் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படுத்தும் சில கலவைகள் உள்ளன.

இரத்தப்போக்கை அதிகரிக்கும்

இரத்தப்போக்கை அதிகரிக்கும்

பூண்டு இரத்தத்தை மெல்லியதாக ஆக்குகிறது, எனவே வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் அதிக அளவில் பூண்டை உட்கொள்ளக்கூடாது. இதற்குக் காரணம் இரத்தத்தை மெலிக்கும் மருந்து மற்றும் பூண்டின் கூட்டு விளைவு ஆபத்தானது, மேலும் இது உள் இரத்தப்போக்கு ஆபத்தை அதிகரிக்கலாம்.

தலைச்சுற்றலை ஏற்படுத்தும்

தலைச்சுற்றலை ஏற்படுத்தும்

நிபுணர்களின் கூற்றுப்படி, பூண்டை அதிகமாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் மற்றும் பல தொடர்புடைய அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

யோனி நோய்த்தொற்றை அதிகரிக்கிறது

யோனி நோய்த்தொற்றை அதிகரிக்கிறது

யோனி ஈஸ்ட் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது யோனியின் மென்மையான திசுக்களை எரிச்சலூட்டுவதன் மூலம் ஈஸ்ட் தொற்றுநோயை மோசமாக்கும்.

கண்பார்வையைப் பாதிக்கலாம்

கண்பார்வையைப் பாதிக்கலாம்

பூண்டின் அதிகப்படியான அளவு ஹைபீமாவை ஏற்படுத்தும், இது கண்ணின் முன்புற அறைக்குள் இரத்தப்போக்கு ஏற்படுத்தும் (கருவிழிக்கும், கார்னியாவுக்கும் இடையே உள்ள இடைவெளி). இந்த நிலை பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Harmful Effects of Garlic That You Should Know in Tamil

Check out the harmful effects of garlic that you should know.
Story first published: Monday, March 7, 2022, 17:07 [IST]
Desktop Bottom Promotion