For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹை-கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க சரியாயிடும்...

கீழே உயர் கொலஸ்ட்ரால் அளவை திறம்பட குறைக்க உதவும் சில பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

|

இன்று கொலஸ்ட்ரால் பிரச்சனை மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஏனெனில் இந்த கொலஸ்ட்ரால் தான் பல்வேறு இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. ஆயினும் இந்த கொலஸ்ட்ரால் அதிளவில் இருந்தால், அது உடலில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Fruits That Can Lower Your Cholesterol Level In Tamil

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருந்தால் குமட்டல், உயர் இரத்த அழுத்தம், மார்வு நெரிசல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதிகப்படியான சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த கொலஸ்ட்ரால் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவற்றால் அதிகரிக்கிறது.

உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், முதலில் உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும். உணவுகளைப் பற்றி பேசுகையில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் பழங்களை சாப்பிடலாமா என்ற ஒரு கேள்வி எழும். நிச்சயம், சாப்பிடலாம். கீழே உயர் கொலஸ்ட்ரால் அளவை திறம்பட குறைக்க உதவும் சில பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி நிர்வகிக்க உதவுகின்றன. எனவே பப்பாளியை உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஒரு பௌல் பப்பாளியை சாப்பிடுவது நல்லது.

அவகேடோ

அவகேடோ

உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட மருத்துவர் பரிந்துரைக்கும் பழங்களில் ஒன்று தான் அவகேடோ. இந்த பழத்தில் என்ன தான் கொழுப்புக்கள் அதிகம் இருந்தாலும், அந்த கொழுப்புக்கள் நல்ல கொழுப்புக்கள். இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கின்றன. முக்கியமாக இது உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிள் சருமத்திற்கும், தலைமுடிக்கும் மட்டுமின்றி, இதயத்திற்கும் நல்லது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்று சொல்வதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, பல நோய்களால் இதயத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதை உறுதி செய்கிறது. இந்த பழங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு மட்டும் நல்லதல்ல. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைப் நிர்வகிக்க உதவுகிறது. எனவே இந்த வகை பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வர கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

தக்காளி

தக்காளி

பழங்கள் மற்றும் காய்கறிகளின் சிறந்த கலவையான தக்காளியில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவாக கருதப்படுகின்றன. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits That Can Lower Your Cholesterol Level In Tamil

Here are some fruits that can lower your cholesterol level. Read on..
Story first published: Tuesday, September 6, 2022, 17:58 [IST]
Desktop Bottom Promotion