Just In
- 6 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 41 min ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 57 min ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Movies
மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
- News
பீகார்: தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்தார் நிதிஷ்குமார்! புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
- Automobiles
விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
இந்த விஷயம் செய்யுறதுக்கு முன்னும் பின்னும் இத சாப்பிட்டாதான்... நல்லா செயல்பட முடியுமாம்...!
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் நாம் அவதியடைகிறோம். இந்த நேரத்தில் நம் உடல் குளிர்சியான காலநிலைக்கு ஏங்கும். பொதுவாக கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது பெரும்பாலான மக்கள் குளிக்கிறார்கள். இக்காலத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் வெப்பத்திலிருந்து நம்மை காக்கிறது. நீச்சல் குளத்தில் நீங்கள் இறங்குவதற்கு முன்பு சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கனமான உணவுகளை சாப்பிட பிறகு உடனடியாக குளத்தில் குதிப்பது ஒரு மோசமான முடிவாக இருக்கலாம்.
ஏனெனில் அது குடல் இயக்கம், அமிலத்தன்மை மற்றும் சோர்வை ஏற்படுத்தும். ஆதலால், நீச்சல் குளத்தில் பயிற்சி செய்வதற்கு முன்பும் நீந்திய பிறகும் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

நீச்சலுக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்
நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய பழங்கள், நட்ஸ்கள், தயிர் மற்றும் ஒரு சிறிய அளவு காஃபின் ஆகியவற்றை உள்ளடக்கிய இலகுவான உணவுகளை உண்ண வேண்டும். நீச்சலுக்கு முன் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை இங்கே காணலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழம் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது நீச்சல் பயிற்சியின் போது உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும்.

முட்டை
முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும். இது தண்ணீருக்கு அடியில் நீச்சல் செய்யும்போது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்களுக்கு உடனடி ஆற்றலையும் தருகிறது.

பேகல்
பேகல் கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும். மேலும் புரதத்தின் கூடுதல் டோஸுக்கு வேர்க்கடலை வெண்ணெயுடன் அதை சேர்த்து சாப்பிடலாம்.

காஃபின்
நீச்சல் வீரர்களின் முயற்சி உணர்வைக் குறைப்பதன் மூலம் சோர்வைத் தாமதப்படுத்த உதவுகிறது மற்றும் செறிவு சக்தியை அதிகரிக்கிறது என்பதால், சிறிய அளவிலான காஃபின் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.

நீச்சல் செய்த பிறகு என்ன சாப்பிட வேண்டும்?
நீச்சலுக்குப் பிறகு, வளர்சிதை மாற்றம் 30 சதவிகிதம் அதிகரிக்கும். எனவே மதிய உணவு மற்றும் இரவு உணவு போன்ற கனமான உணவுகளில் ஈடுபட இதுவே சரியான நேரம். சிக்கன், பாஸ்தா மற்றும் கனமான எதையும் சாப்பிடலாம். நீச்சலுக்குப் பிறகு நீங்கள் உண்ணக்கூடிய உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.

ஒல்லியான கோழி
அதிக நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்ளாமல் புரதத்தின் நல்ல மூலமான ஒல்லியான கோழி இறைச்சியை சாப்பிடுங்கள். சிக்கனை வதக்கி அல்லது குழம்பு செய்து பிரவுன் ரைஸுடன் சேர்த்து சுவைக்கலாம்.

முட்டை
நீச்சல் பயிற்சியை முடித்த பிறகும் புரதத்திற்காக நீங்கள் முட்டையை எடுத்துக்கொள்ளலாம். இது நீச்சல் அமர்வுக்குப் பிறகும் அடுத்த அமர்வுக்கு முன்பும் தசைகளை மீட்டெடுக்க உதவும்.

சாதம் மற்றும் கறி
உங்களின் வழக்கமான இந்திய உணவை நீங்கள் விரும்பினால், சாதம், பருப்பு, சப்ஜி மற்றும் சாலட் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, சீரான செரிமானத்திற்காக படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது நேரம் நடப்பதை உறுதிசெய்யவும்.

நீச்சலுக்கு முன்னும் பின்னும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுடன் கொழுப்பு மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை அனைத்தும் நீந்தும்போது அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.