For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவுக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்!

|

இதுவரை நீங்கள் உடலுறவின் போது சிறப்பாக செயல்படவும், நீண்ட நேரம் துணையை திருப்திப்படுத்தவும் உதவும் உணவுகள் குறித்து படித்திருப்பீர்கள். ஆனால் என்றாவது உடலுறவில் ஈடுபட்ட பின் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தேடியதுண்டா? ஆம், உடலுறவில் ஈடுபட்ட பின் ஒருசில உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதனால் உடலுறவினால் நீங்கள் இழந்த எனர்ஜி மீண்டும் உடலுக்கு கிடைப்பதோடு, உடல் வலி, தசை வலி, களைப்பு போன்றவை நீங்கி, உடல் ஆற்றலுடன் இருக்கும்.

பொதுவாக உடலுறவு உடற்பயிற்சிக்கு இணையானது என்றே கூறலாம். ஏனெனில் உடலுறவில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த உடலும் அதில் ஈடுபடுகிறது. இதனால் வழக்கமான உடற்பயிற்சி செய்வதால் எரிக்கப்படும் கலோரிகளை விட அதிகப்படியான கலோரிகள் உடலுறவில் ஈடுபடுவதால் எரிக்கப்படுகிறது.

MOST READ: அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிடீங்களா? பீரியட் சீக்கிரம் ஆகணுமா? இத செய்யுங்க...

எப்படி உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் உள்ளதோ, அதேப் போல் உடலுறவில் ஈடுபட்ட பின் சாப்பிட வேண்டிய உணவுகளும் உள்ளன. இந்த உணவுகளை உட்கொண்டால், உடலுறவுக்கு பின் சந்திக்கும் உடல் வலி நீங்கி, நாள் முழுவதும் எனர்ஜியுடன் செயல்பட முடியும். சரி, வாருங்கள் இப்போது உடலுறவுக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகள் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் ஆற்றல் நிறைந்தவை. சியா விதைகளை உடலுறவில் ஈடுபட்ட பின் சாப்பிட்டால், உடலுறவில் இழந்த சக்தி மீண்டும் உடலுக்கு கிடைக்கும். அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம்.

தர்பூசணி

தர்பூசணி

பொதுவாக தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா. தர்பூசணியை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, அது இரத்த நாளங்களை ரிலாக்ஸாக்க உதவும். மேலும் இதில் சிட்ருலின் உள்ளது. இது பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு, படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும். மொத்தத்தில், இது உடலுறவுக்கு முன் மற்றும் பின் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான பழம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட் போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விந்துக்களின் நீந்தும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இந்த பழங்களை உடலுறவுக்கு பின் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதோடு, உடல் சோர்வு நீங்கி, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

உடலுறவுக்கு முன் ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும் மற்றும் பற்களில் உள்ள உணவுத்துகள்களை நீக்கும். அதேப் போல் உடலுறவுக்கு பின்னும் ஆப்பிளை சாப்பிட வேண்டும். இதனால் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுடன், நல்ல கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை சாப்பிடுவதற்கான சிறப்பான வழி, அதை எலுமிச்சை சாறுடன் சேர்த்து கலந்து குடிப்பது தான். எலுமிச்சையுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து குடிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் களைப்பைக் குறைக்கும். அதோடு இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

முட்டை

முட்டை

முட்டை என்பது ஒரு திருப்திகரமான உணவு மட்டுமல்ல, நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடியது. இதில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்தால், உங்களுக்கு நிலையான ஆற்றலை வழங்கும். எனவே உடலுறவுக்கு பின் நீங்கள் உங்கள் உடல் ஆற்றலை அதிகரிக்க நினைத்தால், முட்டையை சாப்பிடுங்கள்.

ஈரல்

ஈரல்

ஒருவரது உடலில் போதுமான வைட்டமின் பி12 இல்லாவிட்டால், உங்கள் உடலின் ஆற்றல் மோசமாக இருக்கும். ஆனால் இந்த வைட்டமின் பி12 ஈரலில் அதிகம் உள்ளது. உடலுறவிற்கு பின் உடல் மிகவும் களைப்பாக ஆற்றலின்றி இருப்பது போல் இருந்தால், ஈரல் சாப்பிடுங்கள். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது உடலில் ஆற்றலை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் மிகச்சிறப்பான உணவுகளுள் ஒன்று வாழைப்பழம். உடலுறவிற்கு பின் தசைப் பிடிப்புகள் அல்லது சுளுக்கு ஏற்பட்டிருந்தால், அதைத் தடுக்க வாழைப்பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

உடலுறவில் நல்ல கிளைமாக்ஸ் காண பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி அப்பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஓர் கீரை தான் பசலைக்கீரை. இந்த கீரையை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் சாப்பிட்டால், உடலுறவில் சிறப்பாக செயல்படலாம். அதேப் போல் உடலுறவுக்கு பின்னும் இந்த கீரையை சாப்பிட வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

இரவு நேரத்தில் உடலுறவு கொண்ட பின், காலையில் ஓட்ஸை காலை உணவாக சாப்பிடுங்கள். இது ஒரு சிறப்பான காலை உணவு மட்டுமின்றி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி நீண்ட நேரம் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது. அதோடு ஓட்ஸ் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, ஆண்மை மற்றும் பாலுணர்ச்சியையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Eat After Sex In Tamil

What are the best foods to eat after sex in tamil? Read on...