For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாத 6 உணவுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ விரும்பும் போது, ஆண், பெண் என இருபாலருக்கும் உண்ணும் உணவுகள் அதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை ஆண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

|

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ விரும்பும் போது, ஆண், பெண் என இருபாலருக்கும் உண்ணும் உணவுகள் அதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை ஆண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் ஆண்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. குறிப்பாக இவை ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தை குறைக்கும்.

Foods Men Should Not Eat And Why

கீழே ஆண்கள் சாப்பிடக்கூடாத சில முக்கிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதோடு அந்த உணவுகளை ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சோயா பொருட்களின் பைட்டோஈஸ்ட்ரோஜென் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? பைட்டோஈஸ்ட்ரோஜென் என்றால் என்ன? இவை ஆபத்தானதா? என்பன போன்ற கேள்விகள் நிச்சயம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் என்பவை தாவரங்களில் இருந்து பெறப்படும் ஈஸ்ட்ரோஜென் போன்ற பொருளாகும். அதிகளவிலான பைட்டோஈஸ்ட்ரோஜென்களை உட்கொண்டால், அது உடல் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு உண்டாக்கி இடையூறை ஏற்படுத்தலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாஸ்டனில் உள்ள கருவுறுதல் கிளினிக்கில் 99 ஆண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அதிகளவிலான சோயா பொருட்களை உட்கொள்வது ஆண்களின் விந்து செறிவை குறைக்கக்கூடும் என தெரிய வந்தது. அதோடு, அதிகளவு சோயா உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸ்

நல்ல சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் ஓர் சுவையான உணவுப் பொருள் தான் பிரெஞ்சு ப்ரைஸ். மேலும் இது டிரான்ஸ் கொழுப்புக்களை ஏராளமாக கொண்ட உணவுப் பொருளும் கூட. இந்த டிரான்ஸ் கொழுப்புக்கள் தான் ஒருவருக்கு ஏற்படும் இதய நோய்கள் மற்றும் மாரடைப்புக்கு முக்கிய காரணம். உருளைக்கிழங்குகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. இது இன்சுலின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. இது தவிர பிரெஞ்சு ப்ரைல் அக்ரிலாமைடு உள்ளது. இது நன்கு அறியப்பட்ட கார்சினோஜென் ஆகும். பொதுவாக உணவுகளை பேக்கிங் செய்யும் போது அல்லது உயர் வெப்பநிலையில் வறுத்தெடுக்கும் போது இந்த அக்ரிலாமைடு உருவாகிறது. 2011 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் ஆய்வின் படி, டிரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது குறைவான விந்தணுக்களிக் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை அதிகம் உட்கொண்டால் விந்தணு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

பாப்கார்ன்

பாப்கார்ன்

பாப்கார்னை சாப்பிட்டுக் கொண்டே திரைப்படம் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், பெரும்பாலான நேரங்களில், பாப்கார்ன் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள், அதிக சோடியம் மற்றும் கார்சினோஜென்களால் நிறைந்திருக்கின்றன. எனவே சுபல செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் பாப்கார்னை சாப்பிடுவது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அனைத்து வகையான நோய்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அனைவருமே அறிவோம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் என்றால் என்ன? ஹாட் டாக்ஸ், பேகன், சலாமி போன்றவை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பல ஆய்வுகளில் இம்மாதிரியான இறைச்சிகளை உட்கொள்வது, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதை அறவே தவிர்ப்பது நல்லது.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (BPA)

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (BPA)

இவை உணவுகளாக இல்லாவிட்டாலும், பூச்சிக்கொல்லிகள் நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளன. ஆனால் பூச்சிக்கொல்லிகளில் உள்ள அதே கெமிக்கல்களை நாண்ஸ்டிக் பாத்திரங்களில் இருந்தும் பெறக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், BPA நல்லதல்ல. இது பெரும்பாலான உணவுகளை அடைத்து வைக்கும் கேன்களில் காணப்படுகிறது. BPA மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள கெமிக்கல்கள் ஆகிய இரண்டுமே ஜீனோஈஸ்ட்ரோஜென்களாக செயல்படுகின்றன. ஜீனோஈஸ்ட்ரோஜென்கள் என்றால் என்ன? இவை ஈஸ்ட்ரோஜென்களைப் பிரதிபலிக்கும் கெமிக்கல்கள் ஆகும். சோயாவில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜென்களைப் போலவே, ஜீனோஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு செறிவை அழிக்கக்கூடும்.

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

அடுத்ததாக பட்டியலில் இருப்பது கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள். ரோசெஸ்டர் இளம் ஆண்கள் ஆய்வின்படி, 18-22 வயதுக்குட்பட்ட 189 ஆண்கள் மீது விந்து மற்றும் உணவு பற்றிய பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதில் அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் விந்து இயக்கத்தை குறைப்பதோடு, அசாதாரண விந்து வடிவத்துடனும் இணைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உண்மையில், இதற்கு காரணம் சில பசுக்களுக்கு கொடுக்கப்பட்ட செக்ஸ் ஸ்டெராய்டுகளாக இருக்கலாம்.

முடிவு

முடிவு

எந்த ஒரு உணவுப் பொருளையும் அதிகமாக உட்கொள்வது நிச்சயம் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இதனால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இவ்வுலகில் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Men Should Not Eat And Why

In this article, we have compiled a list of five foods that men should avoid eating for a healthier body, according to various studies. Check them out here.
Desktop Bottom Promotion