For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமடங்கு நோயெதிர்ப்பு சக்தி வேண்டுமா? இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

கொரோனா பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மழைக்காலத்தில் சாதாரணமாக உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

|

நம் அனைவருக்குமே மழைக்காலத்தைப் பிடிக்கும். ஆனால் இந்த மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பல நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கி, குளிர், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது. ஏற்கனவே நாம் கோவிட்-19 தொற்றுநோயால் ஒரு வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான சூழ்நிலையில் மழைக்காலத்தில் சாதாரணமாக உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயல வேண்டும்.

Food Items That Can Increase Immunity During The Monsoon Season

அதற்கு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் வலிமையாக்க உதவும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், ஏற்கனவே உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள். எனவே இவர்கள் மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். கீழே மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

MOST READ: தாகம் அதிகமா எடுக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி, புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். அதோடு தர்பூசணியில் குளுதாதயோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்பமுத்தி, மழைக்காலத்தில் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே மழைக்காலமாக உள்ளதே தர்பூசணி சாப்பிடலாமா என்று யோசிக்காமல், வாங்கி சாப்பிடுங்கள்.

இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிரிக்கும். அதோடு, இதில் சல்போரஃபேன் போன்ற பல ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் வளமான அளவில் இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தவும் தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மழைக்காலத்தில் பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் உடலை ஆரோக்கியமாக மாற்றக்கூடிய பல நன்மைகளால் நிரம்பியுள்ளது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மட்டுமின்றி, பொட்டாசியம் மற்றும் பிற கனிமச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. அதோடு இது உடலின் நோயெதிப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், உடல் செல்களை பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது. இந்த பழத்தில் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதோடு இது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. எனவே இரத்தசோகை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு மிகவும் அற்புதமான உணவுப் பொருள்.

கொழுப்பு குறைவான யோகர்ட்

கொழுப்பு குறைவான யோகர்ட்

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு அற்புதமான உணவுப் பொருள் கொழுப்பு குறைவான யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் உள்ள புரோபயோடிக்குகள், தீவிரமான சளியில் இருந்து விடுவிக்கும். அதோடு இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை உட்கொண்டால் விரைவில் அதிலிருந்து விடுபடலாம்.

காளான்

காளான்

காளான்கள் சுவையான உணவுப் பொருள் மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான உணவுப் பொருள். மேலும் காளான்கள் குறைப்பிட்ட புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Items That Can Increase Immunity During The Monsoon Season

Here we listed some food items that can increase immunity during the monsoon season. Read on...
Desktop Bottom Promotion