For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதற்கு நல்ல தூக்கம், சுறுசுறுப்பாக இருப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, மன அழுத்தத்தை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது போன்ற நல்ல பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

|

கொரோனா பெருந்தொற்று நமக்கு நல்ல நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. ஏனெனில் நல்ல வலிமையான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் கொரோனா வந்தாலும், அதிலிருந்து விரைவாக மீண்டு வந்துள்ளனர். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் அவதிப்பட்டுள்ளனர். ஆகவே ஒருவருக்கு நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

Everyday Immunity-Boosting Foods That Can Help Fight Diseases

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை வெளியிடுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதற்கு நல்ல தூக்கம், சுறுசுறுப்பாக இருப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, மன அழுத்தத்தை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது போன்ற நல்ல பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உலக சுகாதார அமைப்பு மூலம் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கொரோனா போன்ற வைரஸ்களை குணப்படுத்தவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியாமல் போகலாம். ஆனால் இந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் குறைக்க உதவும். இப்போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் உணவுகள்

சிட்ரஸ் உணவுகள்

சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி நோய்களை எதிர்த்துப் போராடாமல் இருக்கலாம். ஆனால் இது இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உடலானது இதை உற்பத்தி செய்யவோ அல்லது சேமிக்கவோ செய்யாது. ஆகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமின் சி ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட், திராட்சை, பெர்ரி பழங்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

பூண்டு

பூண்டு

பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் பூண்டு. பூண்டு நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தமனிகள் தடிமனாவதைத் தடுப்பதில் சிறந்ததாக அறியப்படுகிறது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்கள் மற்றும் பிற தொற்றுக்களை எதிர்த்துப் போராடக்கூடியது. எனவே தினமும் பூண்டு சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துங்கள்.

இஞ்சி

இஞ்சி

உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் சிறப்பான பொருளாக இஞ்சி கருதப்படுகிறது. இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், நாள்பட்ட வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினந்தோறும் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு அதில் உள்ள குர்குமின் என்ற பொருள் தான் காரணம். இந்த குர்குமின் அழற்சி எதிர்ப்பு திறன் கொண்டது. அன்றாட உணவில் மஞ்சள் சேர்ப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பிரச்சனைகளுக்கு எதிராக போராட உதவும். எனவே உங்களின் அன்றாட உணவில் மஞ்சளை சேர்க்க மறவாதீர்கள்.

தயிர்

தயிர்

தயிர் மற்றும் யோகர்ட்டில் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோபயோடிக்குகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் குடல் பாதையில் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் இதில் வைட்டமின் டி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒழுங்குமுறையை மேம்படுத்துகிறது.

முட்டை

முட்டை

வைட்டமின் டி எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியை உணவுகளில் இருந்து பெறுவது என்பது கடினம் தான். ஆனாலும் இந்த வைட்டமின் டி முட்டையில் அதிகமாக உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

காளான்

காளான்

காளான்கள் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் அறியப்படுகிறது. குறிப்பாக நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு காளான்கள் மிகவும் உதவி புரியும். காளான்கள் மிகவும் சுவையானதும் கூட. எனவே அடிக்கடி இதை வாங்கி சாப்பிட்டு, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

மிளகு

மிளகு

மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது குடல் வாயுவை ஊக்கப்படுகிறது. மேலும் மிளகு வியர்வையை சீராக்க உதவுகிறது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியிடும் போது, உடலை வெப்பப்படுத்துகிறது. அதோடு இது ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருளாக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

துளசி

துளசி

புனிதமான செடியாக கருதப்படும் துளசியில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. இதனால் இது ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள், காய்ச்சல் மற்றும் நுரையீல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க நாட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நீரில் துளசியைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், அது உடலினுள் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

குடைமிளகாய்

குடைமிளகாய்

தற்போது குடைமிளகாய் மக்களிடையே பிரபலமான காயாக உள்ளது. ப்ரைடு ரைஸ்களில் பயன்படுத்தப்படும் குடைமிளகாயின் சுவையை சுவைத்த பின்னர், ஏராளமான மக்கள் அந்த குடைமிளகாயை வாங்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். இத்தகைய குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்று தெரியுமா? அதோடு இதில் பீட்டா கரோட்டீனும் உள்ளது. எனவே உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடைமிளகாயை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyday Immunity-Boosting Foods That Can Help Fight Diseases

What foods boost your immunity? Here are a few of the top foods that boost your immune system.
Story first published: Friday, July 30, 2021, 14:24 [IST]
Desktop Bottom Promotion