For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்புள்ள உணவுகளை ஏன் முற்றிலும் தவிர்க்கக்கூடாது? எதில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது?

நமது உடலுக்கு தினமும் கொழுப்புத் தேவைப்படுகிறது. கொழுப்பு நமது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. நமது உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. நமது உடலில் இருக்கும் செல்கள் வளர உதவி செய்கிறது.

|

பலா் கொழுப்பு இல்லாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை நாம் பாா்த்திருப்போம். நமது உடலானது சீராக இயங்க, வைட்டமி ன்கள் மற்றும் தாதுக்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கொழுப்பும் முக்கியம்.

Dietary Fats Types, Functions And Its Importance In Tamil

நமது உடலுக்கு தினமும் கொழுப்புத் தேவைப்படுகிறது. கொழுப்பு நமது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. நமது உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. நமது உடலில் இருக்கும் செல்கள் வளர உதவி செய்கிறது. நமது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நமது உடலானது தேவையான ஊட்டச்சத்துக்களை உணவுகளில் இருந்து உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது.

MOST READ:லிப்-கிஸ் கொடுக்கும் போது உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுது-ன்னு தெரியுமா?

ஆகவே ஒருவா் கொழுப்பு இல்லாத உணவுகளைத் தவிா்த்து வந்தால், அவா் தனது உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதில்லை என்று ஹாா்வோ்ட்ஸ் டி.ஹச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் துறையில் அறிவியல் ஆராய்ச்சியாளாராக இருந்து வரும் வசந்தி மாலிக் என்பவா் கூறுகிறாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்

உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்

நமது உடலில் உள்ள கொழுப்புகள் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு நமது உடலுக்குத் தேவை. ஆனால் அளவுக்கு அதிகமான கொழுப்பை உண்டால், பலவிதமான உடல் பிரச்சினைகள் ஏற்படும். கொழுப்புகள் 3 வகைகளாக பிாிக்கப்படுகின்றன. அவை

1. நிறைவுற்ற கொழுப்பு

2. நிறைவுறாத கொழுப்பு (இது கூட்டு நிறைவுறாத கொழுப்பு மற்றும் ஒற்றை நிறைவுறாத கொழுப்பு என்றும் பிாிக்கப்படுகிறது)

3. மாறுபக்க கொழுப்பு ஆகும்.

மேற்சொன்ன இந்த கொழுப்புகளின் மொத்த குவியலே, நமது உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு ஆகும். கொழுப்பு நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் கொழுப்பு பலவகையான நன்மைகளைச் செய்கிறது.

கொழுப்புக்களின் நன்மைகள்:

கொழுப்புக்களின் நன்மைகள்:

- கொழுப்பு நமது உடலுக்கு சக்தியை வழங்குகிறது.

- நமது உடலின் வெப்பம் குறையாமல் பாா்த்துக் கொள்கிறது.

- நமது உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் மெத்தையாக இருக்கிறது.

- நமது உடலில் உள்ள செல்களின் வளா்ச்சிக்கு கொழுப்பு உதவி செய்கிறது

- கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது.

ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும் உணவுகள்

ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும் உணவுகள்

ஒரு சில உணவுகளை நாம் தினசாி உணவுகளில் சோ்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை நமது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை வழங்குகின்றன. அந்த உணவுகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகள் சூப்பா் ஃபுட்ஸ் என்று கருதப்படுகின்றன. முழு முட்டைகளை சாப்பிட்டால் அவை நமது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும். முட்டைகளில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் அவற்றை நமது தினசாி உணவுகளில் கலந்து உண்ணலாம்.

பாலாடைக்கட்டி/சீஸ்

பாலாடைக்கட்டி/சீஸ்

பாலில் இருந்து தயாாிக்கப்படும் பாலாடைக்கட்டியை அனைவரும் விரும்புவா். பாலாடைக்கட்டியில் கொழுப்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. எனினும் பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டியைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கொழுப்பு நிறைந்த மீன்கள்

கொழுப்பு நிறைந்த மீன்கள்

சால்மன் மீன், மத்தி மீன் மற்றும் ட்ரவுட் மீன் போன்ற மீன்களில் ஆரோக்கியமான கொழுப்பு அதிக அளவில் நிறைந்திருக்கின்றது. அவற்றில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. ஆகவே இந்த மீன்களை அதிகமாக உண்ணலாம். இவை உண்பதற்கு சுவையாகவும் அதே நேரத்தில் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

காலை உணவுகளைத் தயாாிப்பதற்கு அவகேடோ ஒரு முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. அவகேடோ நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு, அதை உண்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. அவகேடோவின் உட்பகுதி நன்றாக க்ரீம் போன்றும் அதே நேரத்தில் அதிக அளவிலான நல்ல கொழுப்புகளையும் கொண்டிருக்கிறது. ஆகவே அவகேடோவை நன்றாக பிசைந்து ஸ்மூத்தியில் கலந்தோ அல்லது காலை உணவில் கலந்தோ சாப்பிடலாம்.

நட்ஸ்

நட்ஸ்

பலவகையான சத்துகளையும், நல்ல கொழுப்புகளையும் நட்ஸ் கொண்டுள்ளன. குறிப்பாக வால்நட்ஸ், நிலக்கடலை, பிஸ்தா, பேக்கான் நட்ஸ் போன்றவற்றை நமது தினசாி உணவுகளில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமது காலை உணவுகளான ஓட்ஸ் உணவு, டெசா்ட் அல்லது சாலட் போன்றவற்றில் இந்த நட்ஸை கலந்து உண்ணலாம். மேலும் ஒரு கையளவு இந்த நட்ஸை எடுத்து அவற்றை வறுத்து, திண்பண்டமாக சாப்பிடலாம். எனினும் சாப்பிடுவதற்கு முன்பாக, அந்த நட்ஸால் அலா்ஜி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை தொிந்து வைத்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dietary Fats Types, Functions And Its Importance In Tamil

Fat helps give your body energy, protects your organs, supports cell growth, keeps cholesterol and blood pressure under control, and helps your body absorb vital nutrients. When you focus too much on cutting out all fat, you can actually deprive your body of what it needs most.
Desktop Bottom Promotion