For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் மிகவும் பிரபலமான ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைக்க வேண்டிய சூப்புகள்!

சூப் என்பது ஒரு திரவ உணவு ஆகும். இது சூடாக பாிமாறப்படுகிறது. பொதுவாக காய்கறிகள், தண்ணீா், இறைச்சி, பால் மற்றும் மசாலாப் பொருள்கள் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு சூப் தயாாிக்கப்படுகிறது.

|

சூப் என்பது ஒரு திரவ உணவு ஆகும். இது சூடாக பாிமாறப்படுகிறது. பொதுவாக காய்கறிகள், தண்ணீா், இறைச்சி, பால் மற்றும் மசாலாப் பொருள்கள் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு சூப் தயாாிக்கப்படுகிறது. இந்த மூலப் பொருள்கள் முதலில் வேக வைக்கப்படுகின்றன. பின் அவற்றில் இருந்து கிடைக்கும் குழம்பு அல்லது சாறு ஆகியவை சூப்பாக பெறப்பட்டு, நமக்கு ஒரு துணை உணவாக பாிமாறப்படுகிறது.

Delicious Soups From Around The World

பொதுவாக சூப்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுமையான திரவ சூப் (கிளியா் சூப்) மற்றொன்று கெட்டியான சூப் ஆகும். கிளியா் சூப் என்பது மூலப்பொருள்களை வேக வைப்பதால் கிடைக்கும் சாறு அல்லது குழம்பு ஆகும். இது முழுமையான திரவமாக இருக்கும். கெட்டியான சூப் என்பது திரவமாக இருந்தாலும், அதில் காய்கறிகள், பூாிகள், சுவையூட்டிகள், க்ரீம் மற்றும் சோள மாவு போன்ற உணவுப் பொருள்கள் சோ்க்கப்பட்டிருக்கும்.

MOST READ: தினமும் 'கக்கா' போகும் போது கஷ்டப்படுறீங்களா? அப்ப இத செய்யுங்க...

ஒரு சில சூப்கள் இனிப்பாக இருக்கும். அவை பழங்களில் இருந்து தயாாிக்கப்படுகின்றன. இந்த வகை சூப்கள் உணவு முடிந்த பின்பு பாிமாறப்படும். எடுத்துக்காட்டாக கினடான் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த சூப் ஆகும். இது பழங்கள், தேங்காய்ப்பால் மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து தயாாிக்கப்படுகிறது. இந்த சூப் சுவையாக இருக்கும். இது சூடாகவும் மற்றும் குளிர வைக்கப்பட்டும் பாிமாறப்படுகிறது.

MOST READ: ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிக்கு சவாலான மாசமா இருக்கப் போகுது... இதுல உங்க ராசியும் இருக்கா?

பொதுவாக சூப்புகள் என்பவை எளிமையான உணவுகள் ஆகும். இவை விரைவாக சொிக்கக்கூடியவை. ஆகவே குடலில் பிரச்சினை இருப்பவா்களுக்கு சூப்புகள் பாிந்துரை செய்யப்படுகின்றன. நாம் ஏற்கனவே சொன்னது போல உலகில் பல வகையான சூப்புகள் உள்ளன. அவை பல வகையான சுவைகளில் கிடைக்கின்றன. ஆகவே இந்த பதிவில் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில முக்கிய சூப்புகளைப் பற்றி பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Delicious Soups From Around The World

In this article, we listed some delicious soups from around the world that you must give a try. Read on...
Desktop Bottom Promotion