For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுங்கள். அத்துடன் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ளுங்கள்.

|

தற்போது இந்தியாவில் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை இந்தியாவில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், பலர் உயிரை இழந்து வருகின்றனர். பொதுவாக எந்த ஒரு கிருமியும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரைத் தான் எளிதில் தாக்கும். அப்படி தான் கொரோனா வைரஸும்.

Coronavirus: Top 10 Natural Antiviral Herbs

எனவே கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுங்கள். அத்துடன் வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

முக்கியமாக நம் இந்தியாவில் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த மூலிகைகள் அதிகம் உள்ளன. இந்த மூலிகைகளை கொரோனா வைரஸ் பரவும் இத்தருணத்தில் அதிகம் உட்கொண்டு வந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். இப்போது கொரோனா வைரஸை தாக்கத்தைக் குறைக்க உதவும் இந்திய மூலிகைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

புதினா குடும்பத்தைச் சேர்ந்த கற்பூரவள்ளி இலைகளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இதில் உள்ள தாவர வகை பொருளான கார்வாக்ரோல் ஆன்டி-வைரல் பண்புகளை வழங்குகின்றன. எனவே நற்பதமான கற்பூரவள்ளி இலையை காலையில் எழுந்ததும் நீரில் கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.

சேஜ்

சேஜ்

புதினா குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மூலிகை தான் சேஜ். இது ஒரு நறுமணமிக்க மூலிகை. பாரம்பரிய மருத்துவத்தில் வைரஸ் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்க இது நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேஜ் மூலிகையில் சஃபிசினோலைடு என்னும் பொருள் தான் ஆன்டி-வைரல் பண்புகளை வழங்குகின்றன. பெரும்பாலும் இது இதன் இலைகள் மற்றும் தண்டுகளில் தான் காணப்படுகின்றன.

துளசி

துளசி

துளசியில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகைகளிலும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. துளசியை ஒருவர் அன்றாடம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, கிருமி தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

சோம்பு

சோம்பு

சமையலில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் சோம்பு குறிப்பிட்ட வகை வைரஸ்களை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆய்வு ஒன்றில், சோம்பு நோயெதிர்பபு மண்டலத்தை வலிமைப்படுத்தி, வைரஸ் தொற்றுகளால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே உடலில் ஆன்டி-வைரல் சக்தியை அதிகரிக்க, சோம்பை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டு மிகவும் பிரபலமான, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருளாகும். இந்த பூண்டு பல வகைகளில் உடலுக்கு நன்மை புரிகிறது. குறிப்பாக மற்ற பொருட்களை விட, பூண்டில் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமாக உள்ளது. மேலும் இது ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். ஆகவே உங்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்க்க தவறாதீர்கள்.

புதினா

புதினா

புதினாவில் சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இந்த புதினாவை ஒருவர் டீயாகவோ, சமையலில் சேர்த்தோ உட்கொள்ளலாம். இது ஒரு நறுமணமிக்க மூலிகை என்பதால், பிரியாணி போன்ற ரெசிபிக்களில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி

நறுமணமிக்க மூலிகைப் பொருளான ரோஸ்மேரி சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஓலியானோலிக் அமிலம் உள்ள ஏராளமான தாவர கலவைகள் காரணமாக இது, சிகிச்சைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதிமதுரம்

அதிமதுரம்

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் அதிமதுரம் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரத்தில் கிளைசிரைசின், லிகுரிடிஜெனின் மற்றும் கிளாபிரிடின் ஆகியவை சக்திவாய்ந்த ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்ட சில பொருட்கள் உள்ளன.

இஞ்சி

இஞ்சி

மருத்துவ குணம் கொண்ட மற்றொரு மூலிகைப் பொருள் தான் இஞ்சி. இதில் பல்வேறு சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமான அளவில் உள்ளன. கூடுதலாக, இஞ்சியில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்களான ஜின்ஜெரோல் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை வைரஸ் நகலெடுப்பைத் தடுக்கின்றன மற்றும் வைரஸ்கள் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

 ஜின்செங்

ஜின்செங்

கொரிய மற்றும் அமெரிக்க வகைகளில் காணக்கூடிய ஜின்செங், பனாக்ஸ் குடும்பத்தில் உள்ள தாவரங்களின் வேர். பாரம்பரிய சீன மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே ஆன்டி-வைரஸ் பண்புகளை ஏராளமாக கொண்டவைகள். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, எப்பேற்பட்ட வைரஸ் தாக்கத்தில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: Top 10 Natural Antiviral Herbs

Here are some indian herbs with powerful antiviral properties that helps to fight against coronavirus. Read on...
Desktop Bottom Promotion