For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க...நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!

இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் கூடுதல் நீரை அகற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன; எனவே ஆரோக்கியமான மனதையும் உடலையும் பராமரிக்க அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

|

நம் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். சிறுநீரகம் செயலிழந்தால், நம்மால் உயிரோடு வாழ முடியாது. நாம் உயிர்வாழ ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடு அவசியம். நமது உடலை சமநிலையில் வைத்திருப்பதில் நமது சிறுநீரகங்கள் பல முக்கியப் பங்காற்றுகின்றன. அவை கழிவுகள் மற்றும் நச்சுகள், இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான நீர், சிறுநீரகத்தின் மூலமாக உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் கூற்றுப்படி, மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

Best Indian Foods To Keep Kidneys Healthy in tamil

இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் கூடுதல் நீரை அகற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன; எனவே ஆரோக்கியமான மனதையும் உடலையும் பராமரிக்க அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

நாம் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் இன்றியமையாதது. தண்ணீர் என்பது உயிர் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஒரு அதிசய மருந்தாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்கள் 10-13 கிளாஸ் மற்றும் பெண்கள் 8-10 கிளாஸ் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் இலைக் காய்கறியில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தவும். சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

சிவப்பு குடை மிளகாய்

சிவப்பு குடை மிளகாய்

சிவப்பு குடை மிளகாயில் பொட்டாசியம் குறைவாக இருப்பதாலும், சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் லைகோபீன் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டிருப்பதாலும் அவை சிறுநீரகத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் குர்செடின் இருப்பதால் சிறுநீரகத்திற்கு நல்லது. மேலும், இது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் க்யுர்செட்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் அவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

குருதிநெல்லிகள்

குருதிநெல்லிகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, குருதிநெல்லி சாறு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (யுடிஐ) ஒரு பிரபலமான வீட்டு வைத்திய தீர்வாகும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கிரான்பெர்ரிகள் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளாகக் கருதப்படுகின்றன. அவை செரிமானப் பாதை அல்லது சிறுநீரகங்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன. கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆற்றல் குருதிநெல்லிக்கு இருப்பதாக ஒரு ஆராய்ச்சி ஆய்வு காட்டுகிறது.

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்

மீன் புரதம் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும். இது சிறுநீரகங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது மற்றும் எந்த வகையான சேதத்திலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகள் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, துத்தநாகம், புரதம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றில் நிறைந்துள்ளன. அவை சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும் சிறுநீரகத்தை வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

செர்ரிஸ்

செர்ரிஸ்

செர்ரிஸ் இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும் பைட்டோ கெமிக்கல்களின் வளமான மூலமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, செர்ரிகளின் வழக்கமான நுகர்வு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, குறிப்பாக சிறுநீரகங்களின் வீக்கத்தை குறைக்கிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிக அளவில் உள்ளதால், உட்புற பிஎச் அளவை பராமரிக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் எலுமிச்சை சாறு உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Indian Foods To Keep Kidneys Healthy in tamil

Here we are list out the Best Indian Foods To Keep Kidneys Healthy in tamil.
Story first published: Wednesday, May 25, 2022, 16:06 [IST]
Desktop Bottom Promotion