For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் எலும்புகள் இரும்பு போல மாற இந்த எளிய பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்...!

உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது அனிமியா ஏற்படாமல் உங்களை பாதுகாக்கிறது.

|

பல்வேறு வகையான திராட்சைகளை வெயிலில் காய வைத்து தயாரிக்கப்படுவதுதான் உலர் திராட்சை ஆகும். பல இனிப்புகளில் இதனை பார்க்கலாம். இது சேர்க்கப்பட காரணம் இதனை சுவை மட்டும்மல்ல இது வழங்கும் ஆரோக்கியமும்தான். பார்ப்பதற்கு சிறிய பொருபொருளாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் இது எதற்கும் குறைந்ததல்ல.

why you should eat raisins everyday

நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்களின் ஆற்றல், சரும பொலிவு மற்றும் முடி ஆரோக்கியம் என அனைத்தையும் அதிகரித்து ஒளிர செய்யும். இதனை சாப்பிட சிறந்த வழி அப்படியே வாயில் போட்டு மெல்லுவதுதான். இதனை தினமும் சேர்த்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல அற்புதங்கள் ஏற்படுத்தும். தினமும் உலர் திராட்சையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியதற்கான அவசியத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனிமியா சிகிச்சை

அனிமியா சிகிச்சை

உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது அனிமியா ஏற்படாமல் உங்களை பாதுகாக்கிறது. தினமும் சிறிது திராட்சைகளை சாப்பிடுவது உங்களை இரும்புச்சத்து குறைபாட்டிலிருந்து பாதுகாக்கும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

இந்த உலர் திராட்சையில் இயற்கையான இனிப்பு சுவையும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் உங்களுக்கு நீண்ட நேரம் பசியெடுக்கலாமல் பார்த்துக்கொள்ளும். இதில் உள்ள இனிப்பு சுவை உங்கள் சுவை மொட்டுக்களுக்கு திருப்தியை ஏற்படுத்துவதுடன் இதிலுள்ள நார்ச்சத்துக்கள் எடைகுறைப்பிற்கும் உதவும்.

கண்பார்வை

கண்பார்வை

உலர் திராட்சையில் இருக்கும் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும். பாலிபினோலிக் பைட்டோனிச்சிரிய்கள் பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கண் தசைகளை பலவீனமாக்கும் நச்சு பொருட்களை தடுக்கிறது. இது கண்பார்வையை அதிகரிப்பதுடன் கண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

MOST READ: இந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?

எலும்புகளை வலிமையாக்கும்

எலும்புகளை வலிமையாக்கும்

உங்களுக்கு மூட்டு வலிகள் இருந்தாலோ அல்லது எலும்புகள் பலவீனமாக இருந்தாலோ அதனை சரி செய்ய சிறந்த வழி இதுதான். இதில் இருக்கும் கால்சியம் உங்களின் எலும்புகளை வலிமைப்படுத்த உதவும்.உலர் திராட்சை சாப்பிடுவது உங்கள் எலும்பின் அடர்த்தியை அதிகரிப்பதுடன் ஆர்திரிடிஸ் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

செரிமானம்

செரிமானம்

முன்னரே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது இது உங்கள் வயிற்றுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது. போதுமான அளவு உலர்திராட்சை சாப்பிடுவது உங்களின் மலச்சிக்கலை தீர்க்கும், குடல் இயக்கங்களை சீராக்குவதுடன் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

அமிலத்தன்மையை குறைக்கிறது

அமிலத்தன்மையை குறைக்கிறது

உலர் திராட்சையில் அதிகமிருக்கும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இது உங்கள் உடலின் pH அளவை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் நச்சு நச்சுத்தன்மையையும், பல பிரச்சினைகளை உண்டாக்கும் இரத்தத்தில் இருக்கும் தீய வாயுக்களையும் வெளியேற்ற உதவுகிறது.

MOST READ: உங்கள் கைரேகையில் ஒளிந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா?

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

உலர் திராட்சை பல ஊட்டச்சத்துக்களாலும், தாதுப்பொருட்களாலும் நிரப்பப்பட்டுளது. இது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும், தொற்றுநோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. இதில் இருக்கும் எதிர் அழற்சி பண்புகள் மற்றும் பாக்ட்ரியா எதிர்ப்பு பண்புகள் உங்களை காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: weight loss immunity eye digestion
English summary

why you should eat raisins everyday

Check out the reasons for why you should eat raisins every day.
Story first published: Saturday, May 18, 2019, 14:42 [IST]
Desktop Bottom Promotion