For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே? எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா?

கிரிக்கெட் மாவு என்று ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? அந்த மாவைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் நாம் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

கிரிக்கெட் மாவு என்று ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? நிறைய மக்கள் இந்த மாவை தங்கள் உணவில் சேர்த்து வருகிறார்கள்.

What Is Cricket Flour And Health Benefits

காரணம் இதில் அதிகளவில் புரோட்டீன் சத்து உள்ளது. ஆனால் இதை சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம். இதுவரை நீங்கள் கேள்விபட்டிராத மாவு? இதை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரிக்கெட் மாவு அப்படின்னா என்ன?

கிரிக்கெட் மாவு அப்படின்னா என்ன?

இந்த கிரிக்கெட் மாவு கிரிக்கெட் என்ற நுண்ணுயிரை பவுடராக்கி தயாரிக்கப்படுகிறது. இந்த மாவை வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்கள் கூட இதன் ஊட்டச்சத்துக்களால் பயன்படுத்தி வருகின்றனர். இதன் சுவை மைல்டு, நட்டி டேஸ்டுடன் காணப்படும்.

MOST READ: மக்காசோளம் தவிர இந்த 5 பொருள்ல கூட பாப்கார்ன் செய்யலாம்... அதவிட சூப்பரா இருக்கும்...

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

இதில் மற்ற மாவுகளைப் போன்று அதிகளவு கார்போஹைட்ரேட்டுக்கு பதிலாக புரோட்டீன், நார்ச்சத்துகள், அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உள்ளன. இதிலுள்ள புரோட்டீன் மாமிச புரோட்டீனாகும். இதில் 13 கிராம் புரோட்டீன் அளவு உள்ளது.

இந்த மாவை எப்படி தயாரிக்கலாம்?

இந்த மாவை எப்படி தயாரிக்கலாம்?

கடைகளில் இந்த மாவை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த மாவை நாம் தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை

ஒரு 200-300 எண்ணிக்கையில் கிரிக்கெட் பூச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த பூச்சியை உலர வைக்க வேண்டும். ப்ரீஷரில் வைத்தோ அல்லது ஓவனில் வைத்தோ செய்யலாம்.

இப்பொழுது உலர்ந்த கிரிக்கெட்டுகளை நன்றாக அரைத்து பவுடராக்கி கொள்ளுங்கள்.

கிரிக்கெட் பூச்சியின் கடினமான பகுதிகளையும், கீழ் பகுதியையும் நீக்கி விட்டு அரையுங்கள்.

நன்றாக அரைத்தால் மென்மையான மாவு போன்ற பதம் கிடைக்கும்.

அதற்கு அப்புறம் இந்த மாவைக் கொண்டு பிரட், பேன் கேக், ஸ்மூத்தி, குக்கீஸ் போன்று நிறைய செய்து சுவைக்கலாம். இதை மற்ற மாவுக்களைப் போன்று தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

MOST READ: சனிபகவானின் கோரப்பார்வை விழப்போகிற அந்த ரெண்டு ராசிகள் எது தெரியுமா?

பயன்கள்

பயன்கள்

அதிகளவு புரோட்டீன் சத்து இருப்பதால் தசைகளை வலிமையாக்குகிறது

உடல் எடை குறைப்பிற்கும், பசியை ஆற்றவும் பயன்படுகிறது.

க்ளூட்டன் இல்லாத, தானிய மாவு இல்லை என்பதால் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் அதிகளவில் விட்டமின் பி12 மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.

புரதங்களின் இருப்பிடம் என்பதால் பாடி பில்டிங் செய்ய விரும்புபவர்கள் தாராளமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Cricket Flour And Health Benefits

Cricket Flour is not new to this world by any means, but is a relatively new food source for Western cultures. Having spent the entire second year of business school studying the possibilities and value propositions of cricket flour, I can tell you this, it isn’t a matter of “if” cricket flour will permeate Western diets, it is simply a matter of “when.
Story first published: Saturday, May 18, 2019, 14:46 [IST]
Desktop Bottom Promotion