For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க எவ்ளோ ஆசைப்படறீங்களோ அவ்ளோ எடையை குறைக்கும் 5 அதிசய பழங்கள்... தினம் சாப்பிடுங்க

எடையை வேகமாகவும் எளிதாகவும் குறைப்பதற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய குறைந்த கார்போ கொண்ட 5 பழங்கள் பற்றி தான் இங்கே விவாதிக்க இருக்கிறோம். அந்த ஐந்து பழங்கள் மற்றும் அதனுடைய ஊட்டச்சத்துக்கள் பற்றி விளக்க

|

எடை குறைப்பு என்பது ஒரு கடினமான விஷயம். ஆனால் தீவிர எடை குறைப்பு பயிற்சிக்கு பிறகு நீங்கள் விரும்பிய எடையை அடைந்தவுடன் உங்களுக்கு உண்டாகும் உணர்வு வார்த்தையில் அடங்காதது. பல மாத கடின உழைப்பிற்கு ஏற்ற பலனாக உங்கள் எடை குறைந்து, நீங்கள் விரும்பிய ஆடைகளை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அணியும் போது உண்டாகும் சுகமே அலாதிதான்...

Trying to Lose Weight? 5 Low-carb Fruits to Help you

உங்கள் எடை குறைப்பு பயணத்தில், ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருக்க கார்போ சத்து குறைவாக இருக்கும் 5 பழங்களை நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை வேகமா குறையணுமா?

எடை வேகமா குறையணுமா?

இந்த பட்டியலை நீங்கள் காண்பதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எடையை குறைப்பது என்பது முற்றிலும் கார்போ சத்துகளை இழக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. உங்கள் உணவில் இருந்து கார்போ சத்துகளை முற்றிலும் நீக்குவதால் எந்த ஒரு பலனும் இல்லை. ஆரோக்கியமான கார்போ சத்து உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதால் நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.

MOST READ:கர்ப்ப காலத்தில் நார்த்தங்காய் சாப்பிட்டால் குழந்தைக்கு இந்த நோயெல்லாம் வருமாம்... சாப்பிடாதீங்க

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்ட ருசியான ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அன்டி ஆக்சிடென்ட்களின் ஆதாரமாக விளங்கி , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளிடம் போராட உதவுகிறது. இவற்றில் கார்போ சத்து குறைவாக உள்ளது. அதே சமயம் பல்வேறு நோய்களுடன் போராட உதவும் பல்லூட்டச்சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன. மேலும் இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியின் ஒவ்வொரு துண்டும், கொலஸ்ட்ரால் அற்றது. மேலும் இவற்றில் கொழுப்பு சத்து ஒரு கிராம் அளவை விடக் குறைவாக உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் அதிகமான கலோரிகள் இழக்கப்படுகின்றன. மேலும் தர்பூசணியில் வைட்டமின் ஏ சத்து மிக அதிகமாக உள்ளது. நீர்ச்சத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த பழத்தை உட்கொள்வதால் பசியுணர்வு குறைந்து அதிக உணவு உட்கொள்ளும் நிலை குறைகிறது.

MOST READ:தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது

பீச்

பீச்

இந்த சாறு மிகுந்த பழத்தில் அதிக கார்போ சத்து இல்லை. 100 கிராம் பீச் பழத்தில் 9 கிராம் அளவு கார்போ சத்து மட்டுமே உள்ளது. மேலும் இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி ஆகியவை இருப்பதால் உங்கள் இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடல் எடையுடன் தொடர்புடைய நோய்களான நீரிழிவு, இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற பாதிப்புகள் பீச் பழம் சாப்பிடுவதால் முற்றிலும் தடுக்கப்படுவதாக டெக்சாஸில் நடைபற்ற ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவகாடோ

அவகாடோ

நீங்கள் எடை குறைப்பிற்கான முயற்சியில் இருந்தால் உங்கள் உணவில் அவகாடோவை இணைத்துக் கொள்வதால் மிகப்பெரிய அற்புதங்கள் நடைபெறும். உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரிகளை விட குறைவாக இருக்கவேண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் என்பது எடை குறைப்பின் அடிப்படை விதியாகும். இந்த விதியை சரியாக பின்பற்றுவது அவகாடோ. ஆனால் இந்த பழத்தை மிதமான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், இந்த பழத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

MOST READ: ஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்

ஆரஞ்சு

ஆரஞ்சு

புளிப்பு சுவை கொண்ட பழங்கள் சாறு நிறைந்ததாகவும், இனிப்பு சுவையும் கொண்டிருப்பதால் இவை எல்லோருக்கும் பிடித்தமானதாக உள்ளன. மேலும், இந்த பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன, அதே நேரம் அன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் மற்றும் கனிமங்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதனால் பல்வேறு ஆரோக்கிய குறைப்பாடுகள் தீர்க்கப்படுகின்றன.

இப்படி பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு பழம் ஆரஞ்சு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை, புற்று நோய் எதிர்த்து போராடும் ஊட்டச்சத்து ஆகியவை இந்த பழத்தில் இருப்பதால் எடை குறைப்பிற்கான பயணத்தில் இது ஒரு சிறந்த ஆரோக்கியமான தோழனாக செயல்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Trying to Lose Weight? 5 Low-carb Fruits to Help you

Losing weight can be such a pain but isn’t it worth it? The feeling you get after you have lost all the weight and reach the desired weight is inexplicable. The months of hard work finally pays off and you get to wear whatever you want without thinking too much about it. To help in your journey to be healthier and fitter, here are 5 low-carb fruits that will help you shed the extra weight.
Desktop Bottom Promotion