For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே..! 30 வயதில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

|

நமக்கு வயது கூட கூட ஏராளமான பொறுப்புகளும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் கூடி கொண்டே போகும். இன்றைய சமூக கட்டமைப்பில் இது ஆண்களுக்கு தனி விதமாகவும், பெண்களுக்கு தனி விதமாகவும் உள்ளது என்றே சொல்லலாம். என்ன தான் எவ்வளவு கடமைகளும் பொறுப்புகளும் இருந்தாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இவை அனைத்துமே சாத்தியம் ஆகும். நாம்மலே எல்லா வகையான வியாதிகளையும் வைச்சிகிட்டு, அப்புறம் இத சாதிக்கணும், அத செய்யணும், இந்த கடம இருக்கு... அப்படினு சொல்றதுல்லாம் கொஞ்சம் மோசமாகதா இருக்கு.

ஆண்களே..! 30 வயதில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

நம்ம உடம்பு ஜிக்குனு இருந்தா 100 வயசுலயும் நம்ம சொந்தமா உழைச்சி சாப்பிடலாம். ஆனா, இன்னைக்கு பலரும் 20 வயதுகுள்ளே எல்லா நோய்களையும் வரமா வாங்கிக்குறாங்க. ஒவ்வொரு வயசில இருக்குறவங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுகள் தான் ஆரோக்கியத்த தரும். அந்த வகையில ஓடி ஆடி வேலை செய்யுற 20 முதல் 30 வயதில இருக்குறவங்க எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடணும்னு இந்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனி தனி..!

தனி தனி..!

பொதுவாகவே உடல் அமைப்பு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கு வேறு வேறு விதமாகவே உள்ளது. எனவே, இதை பொருத்து தான் ஒருவர் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என்பதை உணர முடியும்.

30 வயதை கடக்கும் ஆண்களுக்கு ஒரு சில உணவுகளும், பெண்கள் வேறு சில உணவுகளையும் சாப்பிட்டு வந்தாலே பல நாட்கள் வியாதிகள் இல்லாமல் இருக்கலாம்.

புரதசத்து

புரதசத்து

உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தர கூடிய உணவுகளில் நிச்சயம் புரதசத்து இருக்க வேண்டும்.

அந்த வகையில் பீன்ஸ், கடல் உணவுகள், இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் தினந்தோறும் சேர்த்து கொண்டால் ஊட்டசத்து அதிகரித்து வலுவுடன் இருக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

30 வயதை நெருங்கும் பலரும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இதிலுள்ள பொட்டாசியம் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் வாழை பழம் உதவுகிறது. உடல் எடை கூடும் பிரச்சினைக்கும் இது நல்ல தீர்வை தரும்.

முட்டை

முட்டை

முட்டையில் இருக்க கூடிய சத்துக்கள் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், முட்டையை ஹாஃப் பாயிலோ அல்லது ஆம்லெட் போன்று சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நலன்கள் கிடைக்கும்.

MOST READ: இரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..

பீன்ஸ்

பீன்ஸ்

விலை மலிவாக கிடைக்கும் பல உணவு பொருட்களில் விலை மதிப்பற்ற சத்துக்கள் உள்ளன. அந்த வகையில் பீன்ஸும் அடங்கும்.

இதில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், புரசத்து போன்றவை நிறைந்துள்ளது. மேலும், கொலஸ்ட்ரால் இதில் இல்லாததால் உங்கள் உடல் எடையும் கூடாது.

ஒமேகா 3

ஒமேகா 3

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், மீன், அவகேடோ போன்ற உணவுகளை எப்போதும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இவை நமது உடலில் சேர கூடிய கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோய்களில் இருந்து காக்கும். அத்துடன் நார்சத்து இதில் அதிகம் இருப்பதால் உடல்நலத்தை சீர்கேடு அடையாமல் பார்த்து கொள்ளும்.

நீர்சத்து

நீர்சத்து

வயது குறைய குறைய நாம் சாப்பிட கூடிய உணவு பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கும்.

அந்த வகையில் உடலுக்கு நீர்சத்தானது 30 வயதை நெருங்கும் போது குறைய கூடும். எனவே, அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள்.

மீன்

மீன்

30 வயதை நெருங்குவோர் அவர்களின் உணவில் மீனை சேர்த்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மீனை சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் சுகமாக இருக்கலாம்.

மேலும், மீனை வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

MOST READ: பால் சாப்பிடுவதை நிறுத்தினால் எப்படிப்பட்ட விளைவுகள் உடலில் உண்டாகும்..?

கால்சியம்

கால்சியம்

கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குறிப்பாக பச்சை கீரைகள், ஆரஞ்சு, ப்ரோக்கோலி, தானிய வகைகள் போன்றவை எடுத்து கொண்டால் உடல் ஆற்றல் அதிகமாக கூடும்.

இரும்புசத்து

இரும்புசத்து

பெண்கள் பலருக்கு இருக்க கூடிய குறைபாடு தான் இரும்புசத்து. உடலில் இரும்புசத்து குறைந்தால் மாதவிடாய் தடைபடுதல், கருத்தரித்தலில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

மேலும், எப்போதுமே உடல் சோர்வான நிலையிலே இருக்கும். எனவே, இரும்புசத்து அதிகம் கொண்ட வேக வைத்த உருளைக்கிழங்கு, முளைக்கீரை, பீன்ஸ், முந்திரி, அத்திப்பழம், பேரீச்சை ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

எலும்பிற்கு

எலும்பிற்கு

வயதாக வயதாக நமது எலும்புகள் வலுவிழந்து போக கூடும். இது பின்னாளில் மூட்டு வலி, எலும்பு சார்ந்த மேலும் சில கோளாறுகளை தர கூடும்.

ஆதலால், 30 வயதை நெருங்கும் ஆண் மற்றும் பெண்கள் நிச்சயம் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சேர்த்து சாப்பிடு வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Super Foods for Your 30s

Here we listed out the best foods for your 30's.
Desktop Bottom Promotion